சவூதி அரேபியாவில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஷான நபீக்கை விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அனுப்பிய கடிதம் சட்டரீதியானது அல்ல என சவூதி அரசு தெரிவித்துள்ளது.
ரிஷான நபீக்கை விடுவிக்குமாறோ, தண்டனையை குறைக்குமாறோ, அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதுவருக்கு மாத்திரமே முடியும் என சவூதி அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ளஸின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கை காரணமாகவே ரிஷானவுக்கு மரணதண்டனை வழங்குது தாமதமாகியுள்ளது.
பல நாடுகளின் தலைவர்கள் தமது தூதுவர்களின் ஊடாக ரிஷhனானுக்கு விடுதலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கடிதத்திற்கு சவூதி அரேபிய மன்னர் இதுவரை எவ்விதமான பதில்களை வழங்கவில்லை. (Lanka News Web)
No comments:
Post a Comment