முஷாஹித் அஹ்மத்
ஜனநாயகம் என்பது வந்துவிட்ட ஒன்றல்ல. என்றைக்கும் வர இருக்கக் கூடிய ஒன்றாகவே அது உள்ளது. அது வாக்களிக்கப் பட்ட ஒரு வாக்குறுதி மட்டுமே. எதிர்காலம் சார்ந்த ஒன்றே அது. (ழாக் தெரிதா)
உலகில் மிகப் பெரும் ஜன நாயகம் என்று புகழ்ந்து தள்ளப் படும் எந்தத் தேசத்திலும் தெரிதா சொல்வதுபோல் ஜனநாயகம் இன்னும் வரவேண்டிய ஒன்றா கவே உள்ளது. அது ஐக்கிய அமெ ரிக்காவாகவோ இந்தியாகவோ இருக்கலாம்.
உலகில் மிகப் பெரும் எண் ணிக்கையில் ஒரு சமூகம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் சிறுபான்மை யாக வாழ்கின்றனர் எனில், அது இந்திய முஸ்லிம் சிறுபான்மை மக்களையே குறிக்கும். 20 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் சிறு பான்மையாக வாழ்கின்றனர்.
முஹம்மத் இப்னு காஸிம், மஹ்மூத் கஸ்னவி, சுல்தான் ஷிஹாபுத்தீன் கோரி, குத்துப்புத் தீன் ஐபக், மம்லூக்கியர்கள், கில்ஜிகள், துக்லக், லோடிகள், இறுதியில் பாபர் பரம்பரையில் வந்த மெகலாயர்கள் என 700 ஆண்டுகாலம் இந்தியாவைக் கட்டிக் காத்த பெருமை இந்திய முஸ்லிம்களைச் சாரும். அவர் களின் செங்கோல் வளையா ஆட்சிக்கு டெல்லியின் செங்கோட்டை யும் மீண்டும் மீண்டும் உலக அதிசயங்களில் ஒன்றாய் மிளிரும் தாஜ்மஹாலும் குத்துபுத்தீன் ஐபக்கின் குத்ப் மினாராவும் சாட்சிகளாக உள்ளன.
எனினும், சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டுகால இந்திய வரலாறு முஸ் லிம்களுக்கு எதிரா கவே இயங்கி வருகின்றது. தேசத் தைப் பிரித்தவர்கள் என்ற கடுங் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு மீளவும் பழிவாங்கப்படும் ஒரு சமூகமாகவே அவர்கள் ஆக்கப் பட்டுள்ளனர். சமீபத்திய பாபரி மஸ்ஜித் தொடர்பான இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிமன்றங் கள் மீது முஸ்லிம்கள் வைத்தி ருந்த நம்பிக்கையும் சிதைந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
மொகலாயர்களின் ஆட்சியை வீழ்த்த சதிப் புரட்சிகளில் ஈடு பட்டு வந்த மாராட்டியர்கள், அவர்களின் வழித்தோன்றல் களாய் வந்துதித்துள்ள இந்துத் துவ தீவிரவாதிகள் உள்ளிட்டு மாறி மாறி வந்த அரசாங்கங்க ளால் தலைவிதி பந்தாடப்படும் சமூகமாகவே முஸ்லிம்கள் மாற் றப்பட்டுள்ளனர். 1925ல் தொடங் கிய ராஸ்திரிய்ய சிவயன் சேவக் சங் (RSS), ஜனசல், ஏரி, பஜ்ரங் தள், இந்து மகாசபை, சிவ சேனை, சங்கராச்சாரி இந்து முன்னணி என முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் பல்வேறு வடி வங்களில் உருவெடுத் துள்ளன.
இஸ்லாமியர்களையும் கிறிஸ் தவர்களையும் அழித்தொழிப் பதே இவற்றின் இறுதி நோக்க மாகும். பிஜேபியினூடாக வலு வூட்டப்பட்டுள்ள இவ்வியக்கங் கள் காங்கிரஸ் ஆட்சியிலும் வலு விழந்து விடவில்லை என்ப தையே பாபரி மஸ்ஜித் இடிப்பும் 18 ஆண்டுகளுக்குப் பிந்திய நீதி மன்றத்தின் தீர்ப்பும் எடுத்துரைக் கின்றது.
வரலாற்றை திரித்தும் வன் முறையைத் தூண்டியும் முஸ்லிம் கள் மீது அவதூறுகளைச் சுமத்தியும் தேசத் துரோகிகளாக முத் திரை குத்தியும் நடந்துவரும் அநீதி களைப் பார்த்து உலகமே பிரமிக்கக் கூடியவை. 1967 முதல் இது வரைக்கும் 10க்கும் மேற் பட்ட மிகப் பெரும் மதக் கலவ ரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்டுள்ளன.
அஸ்மா ஜஹாங்கிர் குறிப்பிடு வது போன்று பிஜேபி அதிகாரத் தில் இல்லாதபோதும் எதிர்காலத் திலும் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய மத இனக் கலவரங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சச்சார் அறிக்கை குறிப் பிடுவதுபோன்று, பொருளாதா ரம், கல்வி ஆகிய முக்கிய துறை களில் முஸ்லிம்கள் தாழ்த்தப் பட்ட தலித்களை விட ஒரு நூற் றாண்டு பின்னடைந் திருக்கும் நிலையில் இந்திய முஸ்லிம் களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதே இப்போது பலரும் எழுப்பும் கேள்வியாகி யுள்ளது.
பிஜேபியின் ஆட்சியோ, மதச் சார்பற்றது எனக் கூறிக்கொள் ளும் காங்கிரஸ் ஆட்சியோ சலு கைகள் எப்படிப் போயினும் இந் திய முஸ்லிம்களின் அடிப்படை யான உரிமைகளையே உத்தரவா தப்படுத்த முடியாத நிலையில் இந்திய முஸ்லிம்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
மிகுந்த மரியாதைக்குரிய நீதி மன்றங்கள் கூட இந்துத்துவ சாய லில் செயல்படத் தொடங்கிவிட் டன. ராஜஸ்தான் போன்ற மா நிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் கூட இந்துத்துவ போதை யூட்டப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அபாயம் மேலெழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய முஸ்லிம் களை ஒருங்கிணைப்பதும் கலா சார ஒருமைப்பாட்டின் கீழ் ஒன் றிணைப்பதும் பாரிய சவாலாக மாறியுள்ளது.
உலகில் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற, சாதி, மதக் கலவரங்க ளில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியாவில் சட்டத் தின் ஆட்சியும் நீதித்துறை மற்றும் காவல் துறையின் சுதந்திர மான இயக்கமும் எப்போதோ பொய்த்துவிட்டன. எல்லாவற் றிலும் காவி முலாம் பூசப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் நிலை உருவாகி விட்டது.
பாகிஸ்தானைப் பிரித்துப் போட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தப்படும் முஸ்லிம்கள் இந்தியாவின் எந்த மூலை முடுக்கிலும் நடை பெறும் வன்முறைக்குக் காரணம் என்று ஏற்கனவே எழுதி வைத்துவிட்ட வாய்ப்பாட்டை பயன்படுத்துவது போன்றே நடாத்தப்படுகின்றனர். வடக்கிலி ருந்து தெற்கு வரை இந்திய சிறைச்சாலைகளில் முஸ் லிம்கள் தமது வீதா சாரத்தை விட நிரம்பி வழிவதற்குக் காரணம் இதுவே.
மகாராஷ்த்திராவின் இந்துத் துவ பாசிஸம் தெற்கை நோக்கி யும் வேகமாக விரிவுபெற்று வருகின்றது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம்கள் குறிவைத்து வீழ்த் தப்படுகின்றனர். பயங்கரவாதம், தீவிரவாதம் குறித்து செயல்படும் போது சர்வதேச சட்டங்களைப் பாரதூரமாக மீறிவரும் ஓர் அரசாங்கம் உள் நாட்டில் ஆயுதத் தொழிற்சாலைகளுடன் செயற் படும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளைக் கண்டுகொள் ளாமல் இருப்பதேன்?
சமீபகாலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகளுக்கும் வன்முறை களுக்கும் மேற்போந்த இயக்கங் களே சூத்திரதாரிகள் என நிரூபிக் கப்பட்டும் இதுவரை சட்டத்தின் ஆட்சி செயலிழந்து போனதேன்? சச்சார் அறிக்கையின் ஒரு துளியை யேனும் மதச்சார்பற்றவர்கள் என்று பீற்றிக் கொள்ளும் காங்கி ரஸ்காரர்கள் அமுல்படுத்தாதது ஏன்? காஷ்மீர் இந்தியா வின் நிலப் பகுதியல்ல என்று கூறிய அருந்ததி ராய் மீது தேசத் துரோகி என்று குற்றம் சுமத்தப்படுவது ஏன்? இதுபோன்ற கேள்விகள் சிறுபான்மை இந்திய முஸ்லிம் களின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்ச அலைகளையே எழுப்புகின்றன.
உண்மையில் பாரததேசம், இந்தியா என்பதெல்லாம் ஒரு வரலாற்றுக் கட்ட மைப்பே. இந் தியா ஒருபோதும் தனிநாடாய் இருந்ததில்லை. காரணம், இந் தியா எப்போதும் தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவே இருந்து வந்துள் ளது. காலனித்துவ சக்தி களின் நிருவாக வசதிக்காக ‘இந் தியா’ என்ற ஒரு தேசம் கட்ட மைக்கப்பட்டது.
சமய, இன, மொழி அடையா ளங்களைக் கொண்ட தேசிய இனங்களின் அபிலாஷைகளை ஒருபோதும் இந்தியா கவனத்தில் எடுத்ததில்லை. காஷ்மீர் பிரச் சினை இதற்கோர் சிறந்த உதார ணமாகும். மதச்சார்பின்மையே இந்திய அரசியலமைப்பின் அடி நாதம் என்று வாய்ச் சவாடல் விடுத் தாலும் இந்தியா எப்போதும் (காங்கிரஸ் ஆட்சியிலும்) இந்துப் பார்ப்பனியர்களின் அதிகார மையமாகவே இருந்து வருகின் றது. இந்தியா மதச்சார்பற்ற ஜன நாயகம் என்பது ஒரு புனைவாகும். இந்தப் புனைவை அங்கி ருந்து வரும் ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறி மக்களை நம்ப வைக்கின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள மதச்சார்பற்ற ஷரத்துகள் ஏட்டு வடிவமாகவே நீடிக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி களை கொட்டக் கொட்ட விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை விட வேறெ தனையும் ஜனநாயக சக்திகளால் செய்ய முடியவில்லை. காவிப் பாசிசத்தைப் பகைக்காத ஓர் அரசியல் பண்பாடு மதச்சார் பற்ற இந்தியாவில் ஒரு வினோத மான கனவாகவே இருக்க முடியும்.
சுதந்திரத்தை யாரும் உனக்குத் தருவதில்லை. சமத்துவத்தையும் யாரும் வழங்குவதில்லை. நீ ஒரு மனிதனாக இருப்பின் அதை நீயே எடுத்துக் கொள் என மெல் கம் எக்ஸ் குறிப்பிடுவது போன்று, இந்திய முஸ்லிம்களே தமது எதிர் காலத் தலைவிதியை தீர்மானிக்க வேண்டியுள்ளது.
இராணுவ ரீதியாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள ஓர் பாசிச அமைப்பை எவ்வித ஒழுங்கு படுத்தலுமின்றி வாழும் ஒரு சமூ கம் ஒருபோதும் எதிர்கொள்ள முடியாது. கலாசார அடிப்படை யிலான ஒருமைப்பாடும் ஐக்கிய முமே இந்திய முஸ்லிம்களின் மிகப் பெரும் பலமாகும். முஸ் லிம் சமூகத்தின் எந்தவொரு போராட்டமும் இஸ்லாத்தின் அடிப்படையில் நின்றே வழி நடத்தப்பட வேண்டும். அதற்குப் போதிய சித்தாந்த அடிப்படை களைக் கட்ட வேண்டும்.
சிறுபான்மை முஸ்லிம்களுக் கான ஒரு இஸ்லாமிய சட்ட முறையை (பிக்ஹ்) உருவாக்க வேண்டும். அப்போதுதான் சிறுபான்மையாக முஸ்லிம் கள் வாழும் இந்தியாவில் ஆயுதங் கள், வன்முறைகள் அற்ற ஓர் அரசியல் போராட்டத்தை முன் னெடுப்பதற்கான கொள்கைத் தெளிவும் பாதைகளும் புலனா கும். இந்திய முஸ்லிம்கள் இது குறித்தே இப்போது கவனம் குவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment