இந்த மரணம் தொடர்பாக தெரியவருவதாவது, அப்துல்முனாப் முனவ்வர் எனப்படும் இச்சிறுவன் நேற்று மாலை 6:45 மணியளவில் மரணமாகியுள்ளான். மாங்குளம் அல்ஹாமியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 4ம் தரத்தில் கல்வி பயிலும் இம்மாணவனை இரவு வேலையில் படிக்கும் படி கூறி தாயார் கண்டித்துள்ளார். திடீரென வீட்டிற்குள் ஓடிய சிறுவன் வீட்டில் தொங்கவிடப்பட்ட நிலையிலிருந்த தொட்டில் கயிற்றில் சுருக்கிட்டு தூக்கிலிட்டுள்ளான் எனக் கூறப்படுகின்றது.
உடனடியாக மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 40 தடவைகள் துடித்ததாகவும், மேலதிக சிகிச்சைகளுக்காக செட்டிகுளம் பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்ட வேளையில் இச்சிறுவனின் இதயத்துடிப்பு யாவும் செட்டிகுளம் வைத்தியசாலையை அடையும் முன் நின்றுபோனதால் சிறுவன் இறந்து விட்டதாக செட்டிகுளம் வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கணவனால் கைவிடப்பட்ட இச்சிறுவனின் தாயார் முஜீபா தொழிலுக்காக வெளிநாடு சென்று தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ள நிலையில் இரண்டாவது நாளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூத்த பிள்ளையான இச்சிறுவனுக்கு மூன்று தங்கைகளும் உள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. தனது பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்காக தனது தாயாரிடம் பிள்ளைகள் அனைவரையும் ஒப்படைத்த நிலையிலேயே வெளிநாடு சென்று வந்துள்ளார். துடிதுடிப்பான இச்சிறுவனது மரணத்தால் தாய் தற்போது புத்தி பேதளித்த நிலையிலுள்ளார்.
இம்மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்று காலை அனுப்பப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment