Search This Blog

Nov 25, 2010

வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்கை ஒன்றின் ஊடாக அணுகப் படவேண்டும்





முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு: M. ஷாமில் முஹம்மட்
1990 இல் வட  மாகாணத்தின்   பூர்விக குடிகளில் ஒன்றான  முஸ்லிம்கள்  புலி பயங்கர வாதத்தால்  வெளியேற்றபட்டனர்    அவர்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளும் புலி பயங்கரவாதத்தால்  கொள்ளையிடப்பட்டது  கோடிகணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள்  சில  மணித்தியால அவகாசத்தில் அணைத்தையும்  இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர்  அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண முஸ்லிம்களில் அகதி வாழ்கை இருபது வருடயங்களை எட்டியும் விடிவு இன்றி தொடர்கின்றது.
வடக்கில் இருந்து அன்று வட மாகான முஸ்லிம்கள் ஒரு இலச்சதுக்கும் அதிகமான மக்கள் பலவந்தாமாக வெளியேற்ற பட்டனர் இன்று அவர்களின் தொகை இரு மடங்குகளால் அதிகரித்துள்ளது ஒரு கும்பமாக வந்தவர்கள் இன்று மூன்று குடும்பங்களாக , நான்கு குடும்பங்களாக பெருகியுள்ளார்கள்  20 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே மீள் குடியேற்றம் என்பது அவர்களின் இடங்களை அவர்களுக்கு பெற்று கொடுபதுடன் , அவர்களின்  மஸ்ஜித்துகளையும், பாடசாலைகளையும் மீள  கூரை போட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுப்பதுடன் முடிந்து விடாது.
வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்  தனித்துவமாக அணுகப்படவேண்டும் , தமிழ் மக்களின் மணிக் பாம் போன்ற தமிழ் மக்களின் முகாம்களுடன் ஒபிட்டு முஸ்லிம்களின்  பிரச்சனையை அணுகமுடியாது அப்படியான அணுகு முறைகள் முற்றிலும் தவறானதாகதான் இருக்கம்   தமிழ் மக்களின் பிரச்சனை தனியானது அவர்கள் இறுதி யுத்தத்தின் போது  புலிகளால் பலவந்தமாக அல்லது விரும்பி புலிகளுடன் சென்றார்கள் ஒரு கும்பமாக சென்றவர்கள் உறுபினர்களை இழந்து தொகை குறைத்து     அல்லது வந்த அதே தொகையினர்  மீள் குடியேற்றம் செய்யபடுகின்றார்கள் இது ஒரு குறுகிய  கால இடைவெளியில் நடைபெற்றவை ஆகவே  தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது வேறு , முஸ்லிம் மக்களின் மீள்  குடியேற்றம்   என்பது முற்றிலும் வேறானது ஆனால் நடைமுறையில் இரண்டு தரப்பினரும் ஒன்றாக பார்க்க படுகின்ற மிகவும் தவறான அணுகு முறைதான் பின்பற்றபடுகின்றது.
இப்போது இருக்கும் மொத்த வட மாகான முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் தீர்வு கிடைக்க  கூடிய அரச கொள்கை ஒன்று வேண்டும் 20வருடங்களுக்கு முன்னர் ஒரு வீட்டையும் ஒரு கடையையும் இழந்த ஒருவரின் குடும்பம் இன்று மூன்று குடும்பமாக  இருக்கும் போது  இரு இரு தரப்புக்கும் ஒரு  விதமான மீள்  குடியேற்ற முறை முற்றிலும் தவறானது முஸ்லிம்கள் , சிங்களவர்கள் மீள் குடியேற்றம் பற்றிய அரச கொள்கை ஒன்று உருவாக்கபட வேண்டும் அந்த கொள்கையின் அடிப்படையில்   மீள்  குடியேற்றம்  இடம் பெற வேண்டும் அதுவரை வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது அரசியல் வசனங்களாக மட்டுமாகத்தான் இருக்க போகின்றது நான்கு குடும்பமாக இருக்கும் மக்களிடம் ஒரு உடைந்து தகர்ந்து கிடக்கும் ஒரு சிறிய இடத்தை காட்டி இங்கு நீங்கள் வந்து குடியேறுங்கள் உங்களுக்கு 100 வீத பாதுகாப்பை நாங்கள் தருகிறோம் என்றால் அது மீள்  குடியேற்றத்தை செய்வதற்கு போதுமாகாது 20 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் இருந்த இடங்களிலும் அதற்கு சுற்று புறங்களிலும் காணிகள் தெரிவு செய்ப்பட்டு புதிய குடியிருப்புகள் உருவாக்கபடவேண்டும் புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கும் , வீடு இல்லாதவர்களுக்கும் அங்கு வீடுகள் கட்டி கொடுக்க படவேண்டும் , தொழில் வசதிகள் செய்து கொடுக்க படவேண்டும் இவை  மட்டும்தான் முஸ்லிம் மீள்  குடியேற்றம் என்பதை சரியாக உருவகப் படுத்த முடியும்


No comments:

Post a Comment

المشاركات الشائعة