Search This Blog

Nov 25, 2010

ஆலிவ் மரங்கள் மீதான இஸ்ரேலின் குரோதம்


செமிட்டிக் இனத்தவர்களின் வேதப் புத்தகங்களில் ஆலிவ் மரங்களைப் பற்றி தகவல்களை காண இயலும்.

புனித திருக்குர்ஆனில் இறைவன் ஆலிவ் மற்றும் அத்திமரத்தின் மீது சத்தியம் செய்யும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. நாடோடி இனத்தவர்கள் நிரந்தரமாக ஓரிடத்தில் குடியமரவும், நாகரீகங்கள் வளர்ச்சியடைவதற்கும் ஆலிவும், அத்தியும் காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பயிரிட்டு பல வருடங்கள் கழிந்தபிறகே இவ்விரண்டு மரங்களும் பலன் தரும். காய்க்கத் துவங்கிவிட்டால் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும். மெடிட்டரேனியன் பொருளாதாரத்துறையில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன ஆலிவும், அத்தியும். முக்கியமாக ஆலிவ், ஸ்பெயின் முதல் ஃபலஸ்தீன், சிரியா வரை விவசாயம் செய்யப்படுகிறது.

ஃபலஸ்தீனர்களுக்கோ அவர்களின் வாழ்க்கையை ஓட்டுவதே ஆலிவ் எனலாம். ஏறத்தாழ ஒரு கோடி ஆலிவ் மரங்கள் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஃபலஸ்தீனர்களுக்கு வாழ்வாதாரமாகும். ஆலிவ் எண்ணை மற்றும் அதன் காய்களை பயன்படுத்தாவர்களை மத்திய கிழக்கு நாடுகளில் காணவியலாது.

இஸ்ரேலில் ஆலிவ் மரங்கள் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றன. 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்ட ஃபலஸ்தீன் பகுதிகளில் ஆலிவ் மரங்களை வெட்டியெறிந்துவிட்டு ஃபைன் மரங்களை நடுவதிலேயே யூதர்கள் குறியாக இருந்தனர்.

தற்பொழுது அவர்கள் மேற்குகரையில் ஃபலஸ்தீனர்களின் ஆலிவ் தோட்டங்களை தீவைத்துக் கொளுத்தி வருகின்றனர். ஃபலஸ்தீனர்களை தண்டிப்பதற்காக நூற்று ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களை புல்டோஸர் மூலம் வேரோடு பிடுங்கி எறிவது இஸ்ரேலிய ராணுவத்தின் வழக்கமாகும். அறுவடைக் காலத்தில் ஆலிவ் காய்களை பறிப்பதற்காக ஃபலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என இஸ்ரேலின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பொழுதிலும் இஸ்ரேலிய ராணுவம் அதனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

அமெரிக்காவிலிருந்து வந்துள்ள யூதர்கள் ஆலிவ் மரங்களை அழிப்பதில் முன்னணியில் உள்ளனர்.
Video




அமெரிக்காவிலிருந்து வந்துள்ள யூதர்கள் ஆலிவ் மரங்களை அழிப்பதில் முன்னணியில் உள்ளனர்.Video


No comments:

Post a Comment

المشاركات الشائعة