Search This Blog

Nov 13, 2010

முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைகின்றது


SLMC
அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்துவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பு திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசுக்கு ஆதரவளித்து வந்தது.
தாம் தொடர்ந்தும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துவந்த நிலையில் இன்று அரசாங்கத்துடன்  முழுமையாக இணைந்து செயற்படவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பசிர் சேகு தாவூத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தில் இணையவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு அமைச்சுப்பதிவியும் ஒரு பிரதி அமைச்சுப்பதவியும் வழங்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிவிக்கிறன.
கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமையும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தபோது அவர்களை அரசாங்கத்துடன் இணையுமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிபிடத்தக்கது

No comments:

Post a Comment

المشاركات الشائعة