AL HIDHAYA MEDIA WORLD:
ரவூப் ஹக்கீம் நீதியமைச்சில் நேற்று திங்கட்கிழமை காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில். முஸ்லிம் பொது சொத்துக்களை நிர்வாகம் செய்யும் வக்பு சபையை திறம்பட செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வக்பு சபை தனது முதல் மாகாண கிளையை கடந்த 8 ஆம் திகதி காத்தான்குடியில் திறந்து வைத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது இக்காரியாலயத்தின் ஊடாக மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், குர்ஆன் மத்ரசாக்கள், அரபுக் கல்லூரிகள் என்பவற்றினை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் கொழும்புக்கு சென்று தமது தேவைகளை நிறைவேற்றும் சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க
மேலும் அவர் நல்லிணக்கசபை நியாயாதிக்க சபை போன்றவற்றையும் திறம்பட செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் -இன்று முதல் நீதியமைச்சு சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து பணியாற்றும்” என்றும் நீண்டகாலமாக எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விரைவில் விடுதலைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவர்களின் விடுதலை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடனும் கலந்துரையாடப்படும் என்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.