
M. ஷாமில் முஹம்மட்
| புத்தளம், புத்தளம் தேர்தல் தொகுதி | ||||
| ஆண்டு | வாக்களர்கள் | வாக்களித் தவர்கள் | வாக்களிக் காதவர்கள் | |
| 2000 | 82,077 | 57,483- 70.04% | 24,594 | |
| 2001 | 84,866 | 57,471- 67.72% | 27,395 | |
| 2004 | 90,004 | 59,934- 66.59% | 30,070 | |
| 2010 | 102,643 | 54,899- 53.49% | 47,744 | |
புத்தளம் இலங்கை முஸ்லிம்களின் முக்கியமான ஒரு பிரதேசம் ஒரு குட்டி முஸ்லிம் தேசம் என்று குறிபிடலாம் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய வாரலாற்று தடையங்கள் , கல்வெட்டுகள் என்பன புத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது இலங்கை முஸ்லிம்களில் தொன்மையை நிரூபிக்கும் வரலாற்று தடையங்கள் கண்டு பிடிக்கபட்ட இடங்களில் புத்தளம் முக்கியமானது புத்தளம் பல வழிகளில் சிறப்பு பெருகின்றது ஒன்று முஸ்லிம்கள் மிகவும் செறிந்து வாழும் பிரதேசம் இரண்டு வடக்கு முஸ்லிம்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பகுதி புத்தளத்தில் இன்று முஸ்லிம்கள் ஒரு லச்சத்தி 50 ஆயிரம் பேர் வாழ்கிறார்கள் என்றால் வடக்கில் இருந்து பயங்கரவாதத்தின் வெறியாட்டத்தால் புத்தளத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் வந்து குடியேறிய வடக்கு முஸ்லிம்கள் இன்று ஒரு லச்சதி 50 ஆயிரம் பேர் வரை வாழ்கிறார்கள் மொத்தமாக 3 லச்சம் வரை முஸ்லிம்களை கொண்ட மாவட்டம் அதிலும் இவர்கள் செறிவாக ஒரு பிரதேசத்தில் இருப்பது மேலும் சிறப்பு புத்தளம் சென்றால் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும் சிறந்த இஸ்லாமிய சூழல் எங்கு சென்றாலும் அழகான கம்பிரமான் மஸ்ஜிதுகள் தொகையான இஸ்லாமிய துடிப்புள்ள முஸ்லிம்கள் என்று பல சிறப்புகளை கொண்டுள்ளது பல இஸ்லாமிய இயக்கங்கள் ஒற்றுமையாக வேலை செய்யும் இடம் இந்த தளம் இஸ்லாமிய துடிப்புள்ள இஸ்லாமிய தெளிவு கொண்ட நகரம் என்று குறிபிடலாம்விரிவாக பார்க்க..
ஆனால் அரசியல் என்று வரும்போது அங்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலை அங்கு தொடர்கதை ஒரு முஸ்லிம் பிரதேசத்துக்கு இருக்க வேண்டிய சுமாராக அனைத்து தகமைகளையும் கொண்டுள்ள புத்தளம் முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் தவறி வருகின்றது
ஆனால் அரசியல் என்று வரும்போது அங்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலை அங்கு தொடர்கதை ஒரு முஸ்லிம் பிரதேசத்துக்கு இருக்க வேண்டிய சுமாராக அனைத்து தகமைகளையும் கொண்டுள்ள புத்தளம் முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்களை தெரிவு செய்வதில் தொடர்ந்தும் தவறி வருகின்றது
புத்தள முஸ்லிம்கள் தொடர்ந்தும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையை அடைந்துள்ளனர் நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் எவரும் புத்தளத்தில் இருந்து தெரிவு செய்யபடாத நிலை இந்த முறையும் ஏற்பட்டுள்ளது கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் புத்தளத்தில் இருந்து தெரிவு செய்யப்படவில்லை இது புத்தள முஸ்லிம்கள் மத்தியில் ஒரு அரசியல் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது கடந்த காலங்களில் பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதித்துவம் சில நூறு வாக்குகளால் தவறியுள்ளது
முஸ்லிம் பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் நான்கு தடவைகள் சில நூறு வாக்குகளால் தவறியமையும் கடந்த 33வருடங்களாக புத்தளம் முஸ்லிம் பிரதிநிதி எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்பதும் புத்தள முஸ்லிம் சமூகம் தமது அரசியல் நகர்வுகள் பற்றி சிந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது
புத்தளம் மாவட்டத்தில் 2010 ஆண்டில் வாக்காளர் தொகை 495,575 ஆக பதிவாகியுள்ளது இதில் 280,354 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர் அதில் 21,562 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது 215,221-பேர் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை ஏனைய 258,792 வாக்குகள் ஏற்கப்பட்டுள்ளது ஆக மொத்த வாக்காளர்களில் 56.57%வீதமானவர்கள் மட்டும் இந்த முறை தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர் இவர்களில் 167,769 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்து 6 ஆசனங்களையும் 81,152 பேர் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களித்து 2 ஆசனங்களையும் பெறுவதற்கு உதவியுள்ளனர் , ஜனநாயக தேசிய முன்னணி க்கு 8,792 பேர் தமது வாக்குகளை வழங்கியுள்ளனர் மொத்தமாக 495,575 வாக்காளர்களில் 258,792 வாக்குகளை பயன் படுத்தி 8 பாராளுமன்ற உறுபினர்களை தெரிவு செய்யதுள்ளனர் இவர்களில் எவரும் முஸ்லிம்கள் இல்லை ஆக புத்தள மாவட்டம் தனது 258,792 வாக்குகளை மட்டும் பயன்படுத்தி 8 ஆசனங்களை பெற்றுள்ளது 215,221-பேர் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை
புத்தளம் மாவட்டத்தில் 2010 ஆண்டில் வாக்காளர் தொகை 495,575 ஆக பதிவாகியுள்ளது இதில் 280,354 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர் அதில் 21,562 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது 215,221-பேர் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை ஏனைய 258,792 வாக்குகள் ஏற்கப்பட்டுள்ளது ஆக மொத்த வாக்காளர்களில் 56.57%வீதமானவர்கள் மட்டும் இந்த முறை தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர் இவர்களில் 167,769 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்து 6 ஆசனங்களையும் 81,152 பேர் ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களித்து 2 ஆசனங்களையும் பெறுவதற்கு உதவியுள்ளனர் , ஜனநாயக தேசிய முன்னணி க்கு 8,792 பேர் தமது வாக்குகளை வழங்கியுள்ளனர் மொத்தமாக 495,575 வாக்காளர்களில் 258,792 வாக்குகளை பயன் படுத்தி 8 பாராளுமன்ற உறுபினர்களை தெரிவு செய்யதுள்ளனர் இவர்களில் எவரும் முஸ்லிம்கள் இல்லை ஆக புத்தள மாவட்டம் தனது 258,792 வாக்குகளை மட்டும் பயன்படுத்தி 8 ஆசனங்களை பெற்றுள்ளது 215,221-பேர் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை
ஆக 258,792 வாக்குகள் 8 பாராளுமன்ற உறுபினர்களை தெரிவு செய்யது இருக்கிறது என்றால் 62,000 முஸ்லிம் வாக்குகள் சரிவர முழுமையாக பயன்படுத்தபட்டால் இரண்டுக்கு குறையாத முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்களை பெற்று கொள்ளமுடியும் புத்தளத்தில் புத்தளம் தொகுதிக்குள் 5,000 வரை தமிழ் வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுடன் ஒரு புரிதுணர்வு ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களின் வாக்கு வங்கியின் பலத்தை மேலும் அதிகரிக்க முடியும் ஆக இங்கு தேவையானது அரசியல் விழிப்புணர்வு
இங்கு முஸ்லிம் வாக்காளர்கள் பற்றி பார்த்தல் புத்தள மாவட்டத்தின் தலை நகரான புத்தளத்திலும் அதை சூழவுள்ள பகுதிகளிலும் முஸ்லிம்கள் மிகவும் செறிவாக வாழ்கின்றார்கள் இங்கு சுமார் 62ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர் இவர்களின் வாக்குகள் இந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறையாகவும் , தொகையாகவும் பயன்படுத்தப்படவில்லை சரிவர , தமிழ் சிங்கள வாக்குகளையும் உள்ளடக்கியதாக முழுமையக பயன்படுதபட்டிருந்தால் இரண்டுக்கு குறையாத முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகி இருப்பர் புத்தள முஸ்லிம் வாக்காளர்களை பொறுத்தவரை 35 தொடக்கம் 45 வீதமான வாக்குகள் மாத்திரமே பயன்படுத்தபடுகின்றது என்றும் அதுவும் இரண்டாக உடைந்த நிலையில்தான் வாக்குகள் தொடர்ந்தும் அளிக்கப்பட்டு வருகின்றது என்பதுடன் முஸ்லிம் வாக்காளர்களில் பெரும்பான்மையனவர்கள் தமது வாக்குகளை அளிக்க முன்வருவது மிகவும் குறைவு என்பதும் குறிபிடதக்கது
புத்தளம் மாவட்டம் 5 தேர்தல் தொகுதிகளாக பிரிக்க பட்டுள்ளது இதில் புத்தள தேர்தல் தொகுதியில் 102,643 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர் இங்கு முஸ்லிம்கள் மிகவும் செறிவாக வாழ்கின்றார்கள் மொத்த புத்தளம் மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களில் 90 வீதமானவர்கள் புத்தள மாவட்ட தலை நகரான புத்தளம் தேர்தல் தொகுதியில் வாழ்கின்றனர் என்பது குறிபிடதக்கது இங்கு இந்த முறை 53.49% வீதமான வாக்குகள்தான் அளிக்கப்பட்டுள்ளது 47,744 வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தவில்லை
| புத்தள மாவட்டம் | |||
| ஆண்டு | வாக்காளர்கள் | வாக்களித்தவர்கள் | வாக்களிக்காதவர்கள் |
| 2000 | 412,474 | 301,739- 73.15% | 110,735 |
| 2001 | 426,193 | 304,847- 71.53% | 121,346 |
| 2004 | 450,057 | 311,194- 69.15% | 138,863 |
| 2010 | 495,575 | 280,354- 56.57% | 215,221 |
2004ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 450,057 வாக்காளர்கள் பதிவாகியிருந்தனர் இவர்களில் 311,194 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியிருந்தனர் அன்றைய வாக்களிப்பு 69.15% வீதமாக பதிவாகியுள்ளது கடந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்த முறை வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது
2001 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் 412,474 வாக்களர்கள் பதிவாகியிருந்தனர் இவர்களில் 301,739 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியிருந்தனர் அன்றைய வாக்களிப்பு 73.15% வீதமாக பதிவாகியுள்ளது 2001 , 2004ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2010 ஆண்டு வாக்களிப்பு வீதம் மிக மோசமாக குறைந்துள்ளது
மக்கள் தொகை அதிகரிக்கும் போதும் , பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகை அதிகரிக்கும் போதும் வாக்களிப்போர் தொகை அதிகரிக்க வேண்டும் ஆனால் புத்தள மாவட்ட முடிவுகளின் ஒப்பீடு மக்கள் தொகை அதிகரிக்கும் போதும் , பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகை அதிகரிக்கும் போதும் வாக்களிப்போர் தொகை தொடர்ந்தும் குறைந்து செல்கின்றது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வி கண்ட முன்னால் பிரதி அமைச்சர் A.K. பாயிஸ் -26,489- வாக்குகளை பெற்றுகொண்டார் இவரின் வாக்குகளில் ஆனமடுவ தேர்தல் தொகுதியில் இவர் 5600 சிங்கள வாக்காளர்களின் வாக்குகளையும் புத்தளம் தேர்தல் தொகுதியில் உள்ள கணிசமான சிங்கள வாக்காளர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது இது சாதகமாக பார்க்க பட்டாலும் இவர் கணிசமான முஸ்லிம் , தமிழ் வாக்காளர்களின் வாக்குகளை தவறவிட்டுள்ளார் என்பது குறிபிடதக்கது
இன்று புத்தள முஸ்லிம்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இயக்கம் ஒன்றின் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகின்றது இவர்கள் தமது அரசியல் தேவைகளை முதலில் இனம் காணவேண்டும் அவ்வாறு இனம் காணும் அரசியல் தேவைகளை கட்சி அரசியலுக்கு உட்படுத்தாமல் பொது முஸ்லிம் சமூகத்தின் தேவைகளின் குரலாகஅமைத்து கொள்ளவேண்டும் இந்த பகுதி பிரமுகர்கள் சிலரை சந்தித்து இதுபற்றி பேசியபோது அவர்கள் இதை ஒரு குறையாக குறிபிட்டாளும் இஸ்லாத்தை நேசிக்க கூடிய இஸ்லாமிய நெறிமுறைகளை மதிக்க கூடிய சமுகத்தையும் இஸ்லாத்தையும் அடகுவைக்காத , துணிவுமிக்க , திறமையான ஒருவருக்குதான் புத்தள முஸ்லிம்கள் தமது பூரண ஆதரவை வழங்குவார்கள் என்றும் அந்த தகமைகளை கொண்ட நபரை நாங்கள் இன்னும் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்கள்
முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கண்டிப்பாக வேண்டும் முஸ்லிம்களின் விடையங்களை முஸ்லிம்கள் பார்க்கும் நிலைதான் என்றும் ஆரோக்கியமானது காலம் சென்ற அமைச்சர் தசாநாயக்கா மதுரங்குளி போன்ற முஸ்லிம் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியமை குறிபிடதக்கது தற்போதும் மீள் குடியேற்ற அமைச்சராக புத்தளத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்தான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிபிடதக்கது
முஸ்லிம்களை செறிவாகவும் இஸ்லாத்தை செல்வாக்கு மிக்க சக்தியாகவும் கொண்ட புத்தளத்தின் சிறப்பு தொடர்ந்தும் பாதுகாக்கப்படவேண்டும் எப்போதும் இனவாத சக்திகள் முஸ்லிம்கள் ஒரு பரந்த பிரதேசத்தில் செறிவாக இருப்பு கொள்வதை விரும்பமாட்டார்கள் புத்தளத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பிளவுகளை மறந்து தமக்குள் ஒன்றிணைய வேண்டும் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் அப்பாட்பட்ட ஒன்றுமை மிகவும் அவசியமானது இவற்றை செய்வதில் இஸ்லாமிய இயக்கங்கள் முன்வரவேண்டும் தமது நீண்ட கால இலக்குகளுடன் இவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும் இது இன்றைய தவிர்க்க முடியாத தேவை.
No comments:
Post a Comment