1250 ஹிஜ்ரி ஆண்டை பூர்த்தி செய்யும் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
அப்பாஸிய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 169ம் வருடம் பதவிக்கு வந்த கலீபா ஹாரூன் அல்ரiத் அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் இலங்கைக்கு ஹிஜ்ரி 181ல் வந்த அறிஞர் காலித் இபுனுபகாயா கொழும்பில் நிர்மாணித்த முதலாவது பள்ளிவாசலே கொழும்பு பெரிய பள்ளிவாசல்.
பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முதல் இருந்தே அராபியர்கள் இலங்கையில் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். கி. பி. 622 செப்டம்பர் மாதம் 27ம் திகதி திங்களன்று மதீனா ஹிஜ்ரத்தைத் தொடர்ந்து உலகம் பூராவும் இஸ்லாத்தை எத்திவைக்கும் நடவடிக்கை ஆரம்பமாயிற்று. இதனால் ஆரம்பகாலத்திலேயே இஸ்லாம் உதயமாகிய செய்தி இலங்கையிலும் பரவியுள்ளதாக ‘அஜாஇபுல் ஹிந்த்’ என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.
கி. பி. 640ம் ஆண்டு ஹிஜ்ரி 18ல் யெமன் தேச அரச குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இலங்கைக்கு வந்து ஒருவர் மன்னார் மாந்தோட்டத்திலும் மற்றவர் பேருவளையிலும் இறங்கியுள்ளதாக ‘சேனர்’ என்ற நூலில் ‘வான்சாண்டன்’ என்பவர் எழுதியுள்ளார்.
கி. பி. 724ம் ஆண்டளவில் (ஹிஜ்ரி 105 ல்) உமையாக்களின் கொடுமை தாங்க முடியாமல் ஹாஷிமியாக்களின் ஒரு பகுதிக் குடும்பங்கள் தென் இந்தியா, இலங்கை, மலாக்கா முதலிய நாடுகளுக்கு வந்துள்ளனர். இலங்கைக்கு வந்தவர்கள் யாழ்ப்பாணம், மன்னார் மாந்தோட்டம், அனுராதபுரம், குதிரைமலை புத்தளம், கொழும்பு, பேருவளை, காலி முதலிய இடங்களில் குடியேற்றங்களை அமைத்துள்ளனர். இப்படியாகக் குடியேறிய இவர்களிடத்தில் நாடுபிடிக்கும் எண்ணம் இருக்கவில்லை.
வர்த்தகத்தையே நோக்கமாகக் கொண்டு மன்னருடனும், மக்களுடன் அன்பாகவும் பண்பாகவும் நடந்து கொண்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் இலங்கை வர்த்தகத்தில் தனியுரிமை பெற்றதோடு மக்களுக்கும் அரசருக்கும் மருத்துவச் சே¨வைகளையும் செய்து வந்துள்ளனர்.
இதனால் முஸ்லிம்களுக்கும் அரசருக்குமிடையில் பரஸ்பர ஒற்றுமை ஏற்பட்டது மட்டுமல்லாமல் இஸ்லாமியக் கிலாபத்துடனும் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.
அப்பாஸிய கிலாபத் ஆட்சியில் கி. பி. 786ல் (ஹிஜ்ரி 169) ஆட்சிக்கு வந்த கலீபா ஹாரூன் அல்ரiத் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சமய அறிவு நலிவு அடைந்திருந்தமையை அறிந்து அவர்களின் கல்வி, சமயப் பண்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக அறிஞர் காலித் இப்னுபகாயா அவர்களை (ஹிஜ்ரி 181) கி. பி. 797ல் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இவரே கொழும்பில் முதலாவது மஸ்ஜிதை நிறுவி அதில் கல்வி, சமயப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்பள்ளிவாசல்தான் அன்று முதல் இன்றுவரை முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் சேவையாற்றிவரும் கொழும்பு பெரிய பள்ளிவாசலாகும்.
இப்பள்ளி வாசலுக்கு அருகில் முஸ்லிம் மையவாடியும் அமைந்திருந்தது. 1வது புவனேகபாகு மன்னரின் காலத்தில் இலங்கைக்கு வந்துள்ள எகிப்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி அபூபகாயா என்பவர் ஹிஜ்ரி 344 கி. பி. 955ம் ஆண்டளவில் கொழும்பில் மரணித்த போது அன்னாரின் ஜனாஸா கொழும்பு பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அடக்கத்தலத்தில் நாட்டப்பட்டிருந்த மீசான்கல் (கல்வெட்டு) அவரின் பெயர், நாடு, ஹிஜ்ரி வருடம் பதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு நூதனசாலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
கி. பி. 1505ம் ஆண்டு (ஹிஜ்ரி 910 அளவில்) போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது கொழும்பு நகரில் முஸ்லிம்களின் பலமே மேலோங்கியிருந்த போதிலும், ‘முஸ்லிம்கள் சிங்கள மன்னருக்கு ஒத்துழைப்பு நல்கினர்” என்ற காரணத்திற்காக போர்த்துக்கேயரால் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டும், குடியிருப்புக்கள் கலைக்கப்பட்டும், பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டும், கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் கொழும்பில் இருந்து துரத்தப்பட்டுள்ளனர்.
இதனால் கொழும்புக்கு வெளியில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒல்லாந்தரின் வருகையுடன் மீண்டும் கொழும்புக்கு வந்து குடியேறியுள்ளனர். ஆங்கிலேயரின் வருகையின் பின்னர் முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்புக் கிடைத்ததோடு முஸ்லிம்கள் மீண்டும் கொழும்பு நகருக்கு வந்து பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்து வணக்க வழிபாடுகள், நடாத்தி வந்துள்ளனர். 1973ம் ஆண்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அப்பள்ளிவாசல் அதே இடத்தில் இயங்கி வருகின்றது.
இப்பள்ளிவாசல் அமைந்துள்ள இடம் கொழும்பு நில அமைப்பில் அதி உயர்ந்த இடமாதலால் இப்பள்ளிவாசலுக்கு அருகில்தான் பிரிட்டிஷ் தேசாதிபதியின் வாசஸ்தலம் (பங்களோ) அமைந்திருந்தது. அக்கட்டிடத்தின் வாசல்படியில் பதிக்கப்பட்டிருந்த கல்லே அபூபகாயாவின் அடக்கத்தலத்தில் வைக்கப்பட்டிருந்த கல். அக்கல்வெட்டை அகழ்வாராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்து நூதனசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
கி. பி. 1850ம் ஆண்டு இலங்கையில் ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர், பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ள இடம் மக்கள் வாழும் பகுதியாதலால் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த மையவாடியை ஒதுக்குப்புறம் ஒன்றுக்கு மாற்றி அமைக்குமாறு கட்டளையிட்டனர். ஆதலால் அப்போது ஒதுக்குப்புறமாய் இருந்த மாளிகாவத்தை சதுப்பு நிலப்பகுதிக்கு அருகில் ஒரு காணியை பள்ளிவாசலால் குத்தகைக்குப் பெற்று கி. பி. 1833ம் ஆண்டு முதல் மையவாடியாகப் பாவித்துள்ளனர்.
காலப் போக்கில் மையவாடியுடன் சேர்ந்த 38 ஏக்கர் நிலப்பகுதியை பள்ளிவாசல் மூலம் ரூபா 55000/= (ஐம்பத்தி ஐயாயிரம்) செலுத்தி பள்ளிவாசலுக்குச் சொந்தமாக்கியுள்ளனர். இக்காணியில் இருந்து 27 ஏக்கர் காணியை அரசாங்கம் சுவீகரித்து அதன் ஒரு பகுதியை மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டத்திலும்,
எஞ்சிய பகுதியை கெத்தாராம விளையாட்டு அரங்கு அமைப்பதிலும் சேர்த்துள்ளனர். எஞ்சிய 11 ஏக்கருமே கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியோடு சேர்ந்துள்ள காணியாகும்.
இலங்கையில் உலமா சபையோ, முஸ்லிம் கலாசாரத் திணைக்களமோ, தாபிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இப்பெரிய பள்ளிவாசலில்தான் கொழும்பு பெரிய பள்ளிவாசல் உட்பட ஏனைய அக்கம் பக்கத்துப் பள்ளிவாசல்கள், தக்கியா, ஸாவியாக்களின் கதீப்மார், இமாம்கள், மற்றும் நிர்வாகிகள், உலமாக்கள் என்று கூடி இஸ்லாமிய மாதங்களின் தலைப்பிறை பற்றித் தீர்மானித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் பாரிய பணியினைச் செய்து வந்துள்ளனர்.
தொடர்ந்தும் இப்பணி பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களின் பங்களிப்போடு நடைபெற்று வருகின்றது.
அவ்வாறே இலங்கை வானொலி மூலமோ, ஒலிபெருக்கி மூலமோ அதன் (பாங்கு) ஒலிக்க ஆரம்பிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே புனித ரமழான் காலங்களில் ஸஹர் முடிவு நேரத்தையும், நோன்பு திறக்கும் நேரத்தையும் கொழும்பு வாழ் மக்களுக்கு அறிவிப்பதற்காக இப்பள்ளி வாசலில் பீரங்கி மூலம் குண்டு வெடிக்கச் செய்து வந்துள்ளனர்.
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட இந்தப் பீரங்கி இன்றும் கூட இப்பள்ளிவாசலின் முன் வைக்கப்பட்டுள்ளது. (Thinakaran)

No comments:
Post a Comment