துருக்கியின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிரியா,பல்கேரியா,ஜார்ஜியா, மற்றும் அர்மேனியா ஆகிய நாடுகளை நீக்க அங்காராவில் இருக்கும் தேசிய பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஒரு சில தினங்களுக்கு முன்னர் துருக்கி நாட்டுக்கு அச்சுறுத்தல் பற்றிய ஆவணங்களில் தேசிய பாதுகாப்பு ஆணையம் மாற்றங்களை செய்தது. அதனடிப்படையில் 'இஸ்ரேல்' துருக்கியின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'தி ரெட் புக்' சிவப்பு புத்தகம் என்று அழைக்கப்படும் இந்த ஆவணம் இஸ்ரேல் ஒரு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று மாற்றி வரையறை செய்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களால் துருக்கிக்கு அச்சுறுத்தல் என்று வரையறுப்பது இதுதான் முதல் தடவை.
இஸ்ரேலின் அத்துமீறல்கள் இந்தப் பிராந்தியத்தில் ஆயுதப் போட்டிக்கு வழி வகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment