M.ஷாமில் முஹம்மட்
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வந்த அரசியல் தீர்வு தொடர்பான பேச்சு பத்தாவது சுற்றுடன் முறிந்துள்ளது. அல்லது முடங்கிவிட்டது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பத்தாவது சுற்று பேச்சு நடை பெரும் வரையிலும் முஸ்லிம் தரப்புடன் பேச்சுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுவந்த பேச்சின் உள்ளடக்கம் அதன் ஆழ அகலம் என்பன பற்றிய எந்த தகவலும் இரு தரப்பாலும் வெளியிடப்படவில்லை.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வந்த அரசியல் தீர்வு தொடர்பான பேச்சு பத்தாவது சுற்றுடன் முறிந்துள்ளது. அல்லது முடங்கிவிட்டது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பத்தாவது சுற்று பேச்சு நடை பெரும் வரையிலும் முஸ்லிம் தரப்புடன் பேச்சுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுவந்த பேச்சின் உள்ளடக்கம் அதன் ஆழ அகலம் என்பன பற்றிய எந்த தகவலும் இரு தரப்பாலும் வெளியிடப்படவில்லை.
இதில் அரசுடன் இருக்கும் முஸ்லிம் தரப்புக்கும் கூட எந்த வகையிலும் தெரிவிக்கப் படவில்லை. அவ்வப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் சில விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தாலும். முஸ்லிம், தமிழ் தரப்புகள் சர்ச்சைக்குள்ளாகும் விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் தரப்புடன் பேசவில்லை. அல்லது மறைத்து கொண்டது.
இந்த நிலையில் முஸ்லிம் தரப்பில் சார்பில் பேச்சில் கூடிய முனைப்பு காட்டிவந்த முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் தரப்பை ஏமாற்றி வருவதாக தெரிவித்தது எனினும் இறுதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக தனித்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்தும் பேசுவதற்கான வாய்ப்புக்கள் விரைவில் ஏற்படுத்தப்படும். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித முறுகல் நிலையும் இல்லை. தேசிய இனப்பிரச்சினை தீர்வில் தமிழ் பேசும் மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். என்று தெரிவித்தார் .
அதன் பின்னர் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பத்தாவது சுற்று பேச்சு முறிந்து விட்டுள்ளது . இது தொடர்பாக அரசு விடுத்த அறிக்கையில் இனிமேல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்து அதன் மூலமாகவே இனப் பரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் என்றும் அப்போது கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் பங்கெடுத்துக் கொள்ளும் என்று அரசு நம்புவதாகவும் குறிப்பட்டது . ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத் தெரிவுக் குழு என்கிற அரசின் யோசனையை ஏற்கனவே நிராகரித்துள்ளன என்பதுகுறிபிடத்தக்கது .
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கான பேச்சு பத்தாவது சுற்றுடன் முறிந்தது மட்டுமல்லாமல் இனி பேச்சு தொடங்குவதே ஒரு பிரச்சினையாகியுள்ளது என்பதைத்தான் கள நிலவரம் காட்டுகின்றது. தற்போது முறிந்துள்ள பேச்சு, இலங்கை அரசு தரப்பு மீது வெளிநாடுகள் மேலும் அழுத்தங்களை கொடுக்க வாய்ப்புகளை ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் தரப்பு காத்திருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர் தரப்பு பேசினால்தான் முஸ்லிம் தரப்பும் பேசும் என்ற நிலையில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் காத்திருகின்றனர் என்ற விமர்சனத்தை மேலும் வலுவாகியுள்ளது .தமிழ் தரப்பு அரசுடன் பேசும்போது மட்டும் முஸ்லிம் தரப்பும் பேச முற்படுகின்றது. தாமும் தனித்தரப்பாக பேசவேண்டும் என்று கூறுகின்றது இது பச்சோந்திதனமானது என்று தமிழ் தரப்பில் பலரினால் விமர்சிக்கப்படுகின்றது.
ஆக முஸ்லிம்கள் தமிழருக்கு வழங்கப் படபோவதை தட்டிப்பறிக்க அல்லது பங்குகேட்க பேசவேண்டும் என்கின்றனர். இவர்களுக்கு தமிழர்கள்தான் பிரச்சினையா ? என்று கேட்கின்றனர். பகுதியளவில் உண்மைதான் தமிழ் தரப்புதான் முஸ்லிம்களுக்கு பெரிய பிரச்சினை!.
இலங்கையில் முஸ்லிம்கள் சிங்கள தரப்பால் தொடரான அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப் படவில்லை. இன கலவரங்கள் நிகழ்து அவை முஸ்லிம்களுக்கு முழுமையான பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் அவை ஒப்பீட்டளவில் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் எதிர் கொண்டதை விடவும் சிறியதுதான் என்பதும். 1915 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகாலத்தில் அவ்வப்போது இடம்பெற்று வந்த சிங்கள , முஸ்லிம் இனக்கலவரம் அதன் பின்னர் இடைக் காலத்தில் புத்தளம் பெரிய பள்ளி போலீஸ் படுகொலை மற்றும் அண்மைக்காலங்களில் , கொழும்பு மருதானை ,கண்டி மாவனளை, காலி பேருவளை போன்ற பகுதிகளிலும் பெரிய அளவில் இடம்பெற்ற பெளத்த பேரினவாத்தின் முஸ்லிம்கள் மீதான இன வன்முறை. இவைகள் வடக்கு கிழக்கில் தமிழர் தரப்பால் முஸ்லிம்கள் சந்தித்த பயங்கரவாதத்தில் இருந்து வித்தியாசமானது.
வடக்கு கிழக்கு வெளியே இடம்பெறுவதை இனகலவரமாக அடையாளப்படுத்தினாலும் வடக்கு கிழக்கில் இடம்பெற்றவை இனகலவரம் அல்ல அது தெளிவான முஸ்லிம் இனசுத்திகரிப்பு, முஸ்லிம்களை திட்டமிட்டு ஒடுக்கும் ஒழுங்கமைந்த இஸ்தாபன ரீதியான நடவடிக்கை . முஸ்லிம்களின் சொந்த பிரதேசங்களில் இருந்து அவர்களை விரட்டி அடித்து அவர்களை நிரந்தரமாக வேறு பிரதேசத்தில் அகதிகளாக ஆக்கிய இனசுத்திகரிப்பு , முஸ்லிம் பொருளாதரத்தை கொள்ளையடித்து இலங்கை வரலாற்றில் செய்யப்பட்ட மிகப்பாரிய கொள்ளை சம்பவமாக பதிவு செய்த ஈழ வீர பயங்கரவாதம் . இலங்கையில் 7000 வரையான முஸ்லிம்களை படுகொலை செய்த இனப் பயங்கரவாதம் .
இவை அனைத்தையும் செய்துவிட்டு இன்று ஏன் முஸ்லிம்கள், தமிழர் தரப்பு அரசுடன் பேசும்போது மட்டும் நாங்களும் பேசவேண்டும் என்று கூறுகின்றார்கள் என்ற அப்பாவிகள் போன்று கேள்வியும், முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார்கள் என்ற குற்றசாட்டும் தமிழ் தரப்பால் பரவலாக வைக்கப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களுடனும் , தமிழர்களுடனும் உறவாடியபோதும் பெரும்பாலானவர்கள் தமது தாய்மொழியாக தமிழையே கொண்டிருக்கும்போதும் 1915 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாதம் தம்முடைய கோரமுகத்தை முதல் தடவையாக முஸ்லிம்களின் மீது காட்டி கண்டியில் தொடங்கிய இன கலவரம் முஸ்லிகளின் வர்த்தகத்தின் மீது குறிவைத்து கொழுப்பில் முஸ்லிம்களின் வர்த்தக செல்வாக்கு மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடாத்திபோது . முஸ்லிம்கள் மிக பாரிய இழப்பை சந்தித்தார்கள் அந்த காலகட்டத்தில் தமிழ் தரப்பும் சிங்கள தரப்பும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி குலாவிகொண்டிருந்தது.
முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ் என்று இருந்தபோதும் மொழிவாதம் பேசும் தமிழ் இனம் முஸ்லிம்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளான போது எந்த உதவியும் புரியவில்லை அன்று இருந்த எந்த தமிழ் அமைப்பும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. என்பதற்கும் மேலாக சிங்கள பெளத்த இனவாதத்தை தூண்டியவர்களுக்கு சாதமாக பேசியும் செயல்பட்டும் வந்துள்ளனர் என்பது வரலாறு. இந்த வரலாற்று லச்சனங்களை கொண்டுள்ள இவர்கள் முஸ்லிம்கள் பச்சோந்தி அரசியல் செய்கின்றார் எப்படி கூறமுடியும்.
அந்த விமர்சனத்தில் எந்த நியாயமும் இல்லாதபோதும் ஒரு விடயத்தை சுட்டி காட்ட வேண்டும், இலங்கையில் முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டது போன்று வடக்கு கிழக்கு வெளியிலும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் அனால் அவைகள் வடக்கு கிழக்கு பிரச்சினை போன்று பூதாகரமானதாக இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இருப்பதை மறுக்கமுடியாது , முஸ்லிம் பகுதிகளுக்கு முஸ்லிம் கிராம சேவை அதிகாரிகள் இன்மை , பல முஸ்லிம் பிரதேசங்களில் போதுமான மக்கள் தொகை இருந்தும் அவை அருகில் இருக்கும் பெரும்பான்மை சிங்கள பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளமை, முஸ்லிம்கள் தனது பிரதான விடயமாக கருதும் மார்க்க தளங்களை நிர்மாணிப்பதிலும், புனர் நிர்மாணம் செய்வதிலும் பாரிய தடைகளை எதிர்கொள்ளுதல், முஸ்லிம்கள் பகுதிகளில் இருக்கும் நிலங்கள் விழுங்க படுகின்றமை, சிறிய கிராமங்களில் வாழும் முஸ்லிமகள் பாரிய உயிர் அச்சுறுத்தல்ளை எதிர்கொள்ளுதல், தொடராக வஞ்சிக்கப் படல், போன்ற பிரச்சினைகளை உள்ளன இவைகள் நிரந்தர தீர்வுகள் இன்றி பிரச்சினைகளாக மட்டுமே தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இவை தொடர்ந்தும் பிரச்சினையாக மட்டும் இருப்பதற்கு வடக்கு கிழக்கு வெளியில் முஸ்லிம்கள் சிதறி வாழ்ந்து வருகின்றமை பிரதான காரணமாக உள்ளபோதும் இவற்றை சரியான முறையில் கையாள எந்த பொறிமுறை உருவாக்கமும் இடம்பெறவில்லை என்பதும் முஸ்லிம் சமூகம் வடக்கு கிழக்கு வெளியே தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஆழ அகலங்களை புரிந்து கொள்ளாமை ஒரு பிரதான காரணமாக உள்ளது .
உதாரணமாக வடக்கு கிழக்கு வெளியே முஸ்லிம்கள் செறிவாகவும் , அதிகமாகவும் வாழும் பிரதேசமான புத்தளத்தில் கூட இந்த பிரச்சினைகள் அதிகள் உள்ளது , புத்தளம் தொகுதியில் வாழ்கின்ற மக்களுடைய நிருவாக அலகுளில் பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. கற்பிட்டி பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் காலக்கிரமத்தில் சிறுபான்மையாக மாறுவதற்க்கு அதிக வாய்புகள் காணப்படுவதாக வடமேல் மாகாண சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆப்தீன் யஹ்யா எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிபிடத்தக்கது.
கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அபிவிருத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலாத் துறைக்கென பல்லாயிக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரித்து வருவதன் மூலம் இது தத்துரூபமாக தென்படுவதாக அவர் தெரிவிகின்றார். இவ்வாறு சுவீகரிக்கப்படும் நிலங்களில் பெரும்பான்மை இன சிங்களவர்களை திட்டமிட்ட அடிபடையில் குடியமர்த்தவும் முனைப்புகள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
புத்தளம் தொகுதியில் இருக்கும் அக்கரைப்பற்று கடையாமோட்டை பிரதேசம் பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அவர்களுடைய பிரதேச செயலகம் முந்தலில் அதுவும் ஆனமடுவை தொகுதியில் அமைந்துள்ளது. முந்தல் பிரதேச செயலகம் என்பது 31 கிராம சேவர் பிரிவுகளைக் கொண்டபோதும் . இதில் 24 கிராம சேவகர் பிரிவு புத்தளம் தேர்தல் தொகுதிக்கும் 7 கிராம சேவகர் பிரிவு ஆனமடுவை தொகுதிக்குள்ளும் காணப்படுகின்றன. ஆனால் 24 கிராம சேவகர் பிரிவில் வாழுகின்ற மக்கள் ஆனமடுவை தொகுதிக்குச் செல்வதென்பது முடியாத விடயமாக இருந்தும் நடை முறையில் அப்படிதான் அமைக்கப்பட்டுள்ளது.
2006ஆம் அண்டு நடைபெற்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் புதிய பிரதேச செயலகம் கடையாமோட்டையில் வழங்குவதற்கான அங்கீகாரமும், அனுமதியும் வழங்கப்பட் நிலையில் அது இன்று வரையில் வர்த்தமானி அறிவித்தல் விடப்படாது முடங்கிக்கிடப்பதாக குற்றம் சாட்டபடுவது குறிபிடத்தக்கது.
அதேபோன்று புத்தளத்தில் ஒரு கல்விப்பணிமனையும் இல்லாத நிலை இருக்கிறது இதனால் பல தரப்பட்ட பின்னடைவுகளை மாணவ சமூகம் எதிர்கொள்கின்றது. புத்தளம் தேர்தல் தொகுதியில் இருக்கின்ற ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளும் கிட்டத்தட்ட 1000 குடும்பங்களை கொண்ட கிராம சேவகர் பிரிவாக இருந்தாலும், புத்ததளம் நகரில் இருக்கின்ற அதிகமான கிராம சேவகர் பிரிவு 5000, 6000 குடும்பங்களைக் கொண்டதாக இருக்கின்றன. இவை சம்பந்தமாக பலதரப்பட்ட சிபாரிசுகள் செய்யப்பட்டாலும் இன்றுவரை அது சம்மந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவிலை . என்று சுட்டிகாட்ட படுவது குறிபிடத்தக்கது.
அதேபோன்று ௨௧ வருடங்களுக்கு முன்னர் வடக்கில் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் புத்தளத்தில் தொகையாக வாழ்வதினால் புத்தளத்தில் படித்தவர்கள், பதவிகளை பெற்றுகொள்வதில் பிரச்சினைகள் இருபதாகவும் புத்தளத்தில் இருக்கின்றவர்களுக்கு அரசியல், அதிகாரம் இல்லாத நிலையில் வடக்கிலிருந்து வந்த மக்களுக்கு அரசியல், அதிகாரம் உள்ளதன் காரணமாக புத்தளத்தில் உள்ள எல்லா நிருவாகங்களையும் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் தம் வசப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் . வடக்கில் இருந்து புத்தளம் வந்தவர்களினால் பல நன்மைகள் ஏற்பட்டு இருக்கிறது ஏற்பட்டு வருகின்றது என்பதை அந்த சமூக தலைவர்களை தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கின்றனர் ஆனாலும் தீர்வு காணவேண்டிய பல பிரச்சினைகள் அவர்களுக்கு உண்டு அது தொடர்பாகவும் முஸ்லிம் தலைமை தீர்வுக்கான முயற்சிக்க வேண்டும் .இடத்தில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கூடிய கவனம் எடுப்பது மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்
இந்த பின்னணிகளை கொண்டு முஸ்லிம் அரசியல் தரப்பு செயலாற்றவேண்டும். தமிழர் தரப்பு பேசும்போது முஸ்லிம் தரப்பும் பேசவேண்டிய அவசரதேவைகள் இருக்கின்றது அதேபோன்று வடக்கு கிழக்கு வெளியில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அரசுடன் முஸ்லிம் அரசியல் தரப்பு பேசவேண்டிய தேவைகள் அதிகம் இருக்கிறது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போற்றத்தக்கது அதேபோன்று இலங்கையின் ஏனைய பிரதேசங் களில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை காண முனையவேண்டும் இந்த விடயத்தில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கூடிய கவனம் எடுப்பது மிகவும் பொருத்தமானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment