Search This Blog

Nov 4, 2011

மேற்கு ஏகாதிபத்தியம் ஈரானை தாக்க தயாராகின்றது



முஸ்லிம் நாடுகளில் மேற்கின் ஏகாதிபத்திற்கு கட்டுப்படாத முதுகெலும்புள்ள நாடாக ஈரான் பல துறைகளில் மேற்கின் பொருளாதார தடைகளையும் மீறி வளர்ந்து வருகின்றது. இஸ்ரேல் என்ற நாடு சட்டவிரோதமானது என்ற நிலைபாட்டில் மிகவும் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. இதனால் மேற்கின் அடுத்த இலக்கு ஈரான் என்று பல ஆய்வளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில். ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது பிரிட்டன் , அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து இந்த மாதம் 8ஆம் தேதி சர்வதேச அணு ஆராய்ச்சி அமைப்பு -International Atomic Energy Agency- அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது . இதன் போது ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புகள் எந்த நிலையில் உள்ளன என்பது தெளிவாகும்.ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுறுத்தினால் எந்த நடவடிக்கைக்கும் பிரித்தானிய இராணுவ உதவியை அமெரிக்கா பெறும என பிரித்தானிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிட்டனின் கார்டியன் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தாக்குதலொன்றை ஆரம்பிப்பதற்கு பராக் ஒபாமா தயங்குவதாகவும் ஆனால் ஈரானிய அணுசக்தி திட்டங்கள் தொடர்பான அதிகரித்து வரும் பதற்றங்கள் இந்நிலையை மாற்றிவிடும் எனவும் பிரித்தானிய அரசாங்க மற்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக கார்டியன் மேலும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சவூதி ராஜதந்திரியொருவர் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதிலும் வாஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை கடந்த கொல்வதற்கு இடம்பெற்ற சதியிலும் ஈரான் பின்னணியில் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டுமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ஈரானை சூழ பத்திற்கு மேற்பட்ட இராணுவ தளங்களை கொண்டுள்ளது அதற்கு மேலதிகமாக பிரிட்டனும் பல இராணுவ தளங்களை கொண்டுள்ளது. தாக்குதல்  ஏற்பாட்டின் பிரதான மையமாக இஸ்ரேல் செயல்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது .ஈரானுக்கு மேற்குப்புறத்திலுள்ள ஆப்கானிஸ்தனரில் 98,000 அமெரிக்க துருப்பினர் உள்ளனர். கிழக்கிலுள்ள ஈராக்கில் 43,500 அமெரிக்கப் படையினர் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 10,000 பிரித்தானிய துருப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று வியாழக்கிழமை லிபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அலி அக்பர் சலேஹி, மேற்படி செய்திகள் குறித்து கூறுகையில், எந்த அச்சுறுத்தலையும் ஈரான் தண்டிக்கும் எனக் கூறினார்.
“சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதில் துரதிஷ்டவசமாக, அமெரிக்கா தனது மதிநுட்பத்தை இழந்துவிட்டது. அது பலத்தில் மாத்திரமே தங்கியுள்ளது.
ஆம் நாம் மோசமானதை எதிர்கெர்ள தயாராகவுள்ளோம். ஆனால் ஈரானுக்கு எதிராக மோதலில் ஈடுபடுவற்கு முன் அவர்கள் இரு தடவை சிந்திப்பார்கள் என நம்புகிறோம்’ என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலேஹி கூறினார்.
Thanks: Our Ummah

No comments:

Post a Comment

المشاركات الشائعة