Search This Blog

Sep 13, 2012

இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!

i'm a muslim
நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ ,
இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ ,
இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் மனைவி – மக்கள்இ குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை,இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
புனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன்இ இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடுஇ சேவல் பலி தருகிறேன்இ இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன்இ இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன்இஇருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்கஇ பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது?இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல்இ மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்…நான் ஒரு முஸ்லிம்!
ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
கடவுள்இ பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்… நான் ஒரு முஸ்லிம்!
வாக்காளர் அட்டையிலும்இ பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.
thanks: vok

Sep 11, 2012

தற்போதைய அரசியல் சூழலை எதிர் கொள்ளத் தடுமாறும் ரவூப் ஹகீம்


அப்துல் ரசாக் (லண்டன்)
மலை ஏறி ஒருவன் தனது மூட்டை முடிச்சிகளை முதுகிலே சுமந்து கொண்டு மலையின் உச்சிக்கு ஏறி வெற்றிக் கம்பத்தை அடைய எவ்வளவு சங்கடமும் தங்கடமும் அடைவானோ அவ்வாறே முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹகீம், நீதி அமைச்சுப் பதவியையும் தனது முதுகிலே சுமந்து கொண்டு கிழக்கின் உச்சியிலே இருக்கின்ற முதலமைச்சர் பதவிக்காகாவும் அரசுடன் போராட வேண்டும்.
அந்த மலையேறி மலையின் உச்சியை அடைகின்றானோ  அல்லது சறுக்கியே விழுகின்றானோ  ஆனால், தன் முதுகிலே தொங்குகின்ற மூட்டை முடிச்சை மட்டும் இழக்க மாட்டான். அவ்வாறே,  தலைவர் ரவூப் ஹக்கீமும் தனது முதுகிலே அமைச்சும் பதவியையும் சுமந்து கொண்டு ஒருக்காலமும் முதலமைச்சர் பதவியை அரசிடமிருந்து  வென்று எடுக்க மாட்டார்   என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.
தேர்தலுக்குப் பின் இந்த சங்கடம் மு.கா.வுக்கு ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்ததால்தான் தவிசாளர் பசீர் சேகு தாவூது தனது பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தார். அரசியல் களமாட வருபவர்கள் இந்த வியூகங்களை வகுக்கத் தெரிந்த வித்தகர்களாக இருக்க வேண்டும். இக்கட்டான ஒரு அரசியல்  சூழ் நிலையில்  ஜனாதிபதியை சந்திக்கும் போது ஒரு சமூகத்தின் தலைவன் என்ற அடிப்படையில் நிலைப்பாடுகளை பேச  வேண்டுமே தவிர “அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்போம்” என்ற ஜால்ரா அடிக்கும் பாணியில் அல்லது தனது முதுகிலே சுமக்கும் ஒரு பொதியாக இருந்து வருகின்ற அமைச்சுப் பதவியை காப்பாற்றும் போக்கில் அரசியல் நகர்த்தல்கள் ஒரு போதும் அமையக்கூடாது.
ஆதலால், தலைவர் ஹகீம், கிழக்கில் தனித்து தேர்தலில் குதித்ததன் மர்மம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்துள்ளது. அதாவது, வெறும்  காஸி நீதிபதிகளையும் சமாதான நீதிபதிகளையும் வழங்குகின்ற நீதித் துறை அமைச்சுக்குப் பதிலாக ஆளுமை மிக்க வேறொரு அமைச்சுப் பதவி இவருக்குத் தேவைப்படுகிறது. அதனை முஸ்லிம் மக்களிடமிருந்து ஒரு ஆணையாகப் பெற்று ஜனாதிபதியிடம் பேரம் பேசிப் பெற்றுக் கொள்வதற்கான அடுத்த கட்ட நாடகத்தின் அரங்கேற்றமே “தனித்து தேர்தல்” மர்மம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றார்கள்.
அரசிடம்  முதலமைச்சர் பதவியை வெள்ளலமா ?
14 ஆசனங்களை வைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கக் கூட்டமைப்பிடம் 07 ஆசனங்களை கொண்டிருக்கும் மு.கா. கண்களை மூடிக் கொண்டு எவ்வாறு முதலமைச்சர் பதவியைக் கோரமுடியும் என்பது நீதி அமைச்சருக்குத் தெரியாத  நீதி நியாயங்களல்ல.  மத்திய அரசில்  சக்தி மிக்க அமைச்சு மண்டலங்களைப் பெற்றுக் கொண்டு  முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தாலும், அந்தப் பதவிக்காக பிள்ளையானை அல்லது முஸ்லிம் காங்கிரசின்  அல்லது அதன் தலைவரின்  பரம அரசியல் விரோதிகளான அரச அணியில் உள்ள முஸ்லிம் தோழமைக் கட்சிகளின் உறுப்பினரை எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் அனுமதிக்கப் போகின்றது என்பதுதான் இன்று அரசியல் அரங்கில் கேட்கப்படும் மிகப் பெரிய கேள்விகளாகும்.
ஆகவேதான், தலைவர் இப்போது தடுமாறுகிறார். சக்திமிக்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு எவ்வாறு கிழக்கின் முதலமைச்சர் பதவியைத் தாரை வார்த்துக் கொடுப்பது அரசியல் ஆணையை வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் எவ்வாறு சாட்டுப் போக்குச் சொல்வது என்பது தெரியாமல் தலைவர் ததி மிதிப் பட்டுத் திரிகின்றார் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆகவே தலைவர் ஹகீம் அவர்கள் அமைச்சுப் பதவியை தனது முதுகிலே சுமக்கின்ற ஒரு சுமையாக தக்க வைத்துக் கொள்ளும் வரை அவர் முஸ்லிம் சமூகத்துக்கு எதனையும் சாதிக்க மாட்டார் என்றே பலரும் கருதுகின்றனர். பேரின வாதிகளும் இவரின் பலம் பலயீனம் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்துக் காய் நகர்த்துகின்றார்கள் என்பது போகப் போக தெரியும் என்பதும் சிலரின் கருத்தாக இருக்கின்றது.

Thanks:  kattankudi.info 

Sep 5, 2012

தொடரும் முர்சியின் அதிரடி: 70 இராணுவ ஜெனரல்களுக்கு ஓய்வு

mursi
எகிப்து ஆயுதப் படைகளைச் சேர்ந்த 70 ஜெனரல்களுக்கு அந்நாட்டு அரசு ஓய்வு அளித்துள்ளது. ஜனாதிபதி மொஹமட் முர்சி, பலம்வாய்ந்த பாதுகாப்பு மற்றும் இராணுவ கவுன்ஸில் தலைவருக்கு ஓய்வுவழங்கி ஒரு சில வாரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆயுதப் படைகளின் உயர் மட்ட குழுவான இராணுவ கவுன்ஸிலின் 6 ஜெனரல்கள் தமது பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இதில் ஜனாதிபதி முர்சி, எகிப்தில் தொடரும் அதிகார போட்டியில் இராணுவத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். ஜனாதிபதி முர்சியால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் பதாஹ் அல் சிசி இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

ரொஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றக் கோரி மியன்மாரில் துறவிகள் ஊர்வலம்

protest against Muslims in Myanmar


ரொஹிங்கியா முஸ்லிம்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் மியன்மார் ஜனாதிபதி செயினின் திட்டத்திற்கு ஆதரவளித்து நூற்றுக்கணக்கான பெளத்த துறவிகள் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
மியன்மாரின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மன்டலெயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பிரமாண்ட ஊர்வலம் இடம்பெற்றது. இதன் மூலம் மியன்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் அந்நாட்டு பெளத்தர்களுக்கு இடையிலான இன முறுகல் மேலும் தீவிரம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுனில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் ஊர்வலத்தில் பங்கேற்ற பெளத்த துறவிகள், ‘ஜனாதிபதிக்கு ஆதரவளித்து எமது தாய் நாட்டை பாதுகாருங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய விரது என்ற பெளத்த துறவி ஏ.எப்.பி. செய்தி சேவைக்கு கூறும் போது, ‘இந்த ஊர்வலத்தின் மூலம் ரொஹிங்கிக்கள் மியன்மார் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம்’ என்றார். மேற்படி பெளத்த துறவி இஸ்லாமிய எதிர்ப்பு பிரசுரங்களை விநியோகித்ததற்காக கடந்த 2003 ஆம் ஆண்டு 25 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானார்.
எனினும் கடந்த ஜனவரியில் அவர் பொதுமன்னிப்பு பெற்று விடுதலையானார். இந்த ஊர்வலம் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடத்தப்படும் என்றும் அதில் பல மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். பங்காளி மொழி பேசும் ரொஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் என மியன்மார் அரசு கூறி வருகிறது. அவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்புவதுதான் தீர்வு என மியன்மார் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், பங்களாதேஷ¤ம் அவர்களை ஏற்க மறுக்கிறது.
உலகில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் இனமாக ரொஹிங்கியா முஸ்லிம்களை ஐ.நா. சபை அடையாளப்படுத்தியுள்ளது.

المشاركات الشائعة