மாரடைப்பு காரணமாக இன்று வியாழக்கிழமை காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து வபாத்தான முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நூர்தின் மசூரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 7.30 அளவில் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
தற்சமயம் கொழும்பில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது ஜனாசா இன்று இரவு 8 மணியளவில் புத்தளத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது ஆதரவாளர்கள் புத்தளத்திற்கு சுமார் 20 பஸ்களில் வருகைத் தந்துள்ளனர்.
மேலும் வபாத்தான வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நூர்தின் மசூரின் புதல்வர் பிரித்தானியாவிலிருந்து வருகைத் தந்துக் கொண்டிருப்பதாகவும், அவர் வந்ததும் நாளை காலை 7.30க்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது
No comments:
Post a Comment