Search This Blog

Dec 18, 2010

இஸ்லாமிய நிதிநிறுவனங்களின் பணி


மனால் தாஹா: 
இலங்கைச் சூழலில் இஸ்லாமிய வங்கிகள் அறிமுகப்படுத்தப் பட்டு ஒரு தசாப்தத்தையும் கடந்திருக்கின்ற போதும், இன்னும் இஸ்லாமிய நிதி நிறுவ னங்களும் வங்கிகளும் ஆரம்பக் கட்டத்தி லேயே இருப்பதாகக் குறிப்பிடு கின் றனர்.

அது வளர்ச்சியடைந்த நிதிநிறுவனமாக வளரும் வரை அதன் முழுமை யான பயன்களை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பெற்றுக் கொள்வது சற்று தாமதமாகும் என்றே நிறுவனம் சார்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மக்கள் நீதியான முறையில் வியாபார, உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவ தற்கும் அதன் மூலம் இலாபமீட்டுவதற்குமான சூழல் கட்டமைக்கப்படல் வேண்டும். வட்டி உள்ளிட்ட அனைத்து வகையான அநீதியான ஒழுங்குக ளும் நீக்கப்படல் வேண்டும். வட்டியை தடுப்பது நீதியான சீரான பொருளாதார கட்டமைப்புக்கான ஓர் அடிப்படை. 
எது எவ்வாறிருப்பினும், வட்டி மிகச்சாதாரணமாக வீட்டு வாசலுக்கே வந்து நிற்கின்ற ஒரு இக்கட்டான காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் வட்டியின் பிடியிலிருந்து சமூகத்தை பாதுகாக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இஸ்லாமிய நிதிநிறுவனங்களும் வங்கிகளும் ஆரம்பிக்கப் பட்டன. பொதுவாக இலங்கையில் இயங்குகின்ற இஸ்லாமிய நிதி நிறுவனங் களில் அதிகம் பயன் பெறுபவர்கள் வசதி படைத்தவர்கள். அல்லது ஆடம்பரத் தேவைகளை அல்லது மேலதிகத் தேவைகளை நிறை வேற்றுவதற்காக வருபவர்களே என்பது பரவலான அவதானம். வசதிபடைத்தவர்கள் தமது தேவைகளை,முழுமையாக உடன்காசு கொடுத்து நிறைவேற்றிக் கொள்ளா மல், இஸ்லாமிய நிதிநிறுவனங்களினூடாக தவணையடிப்படையில் செலுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின் றனர்.
இதன் மூலம் தேவையினை நிறைவேற்றிக் கொள்கின்ற அதேவேளை, தம்மிடமுள்ள பணத்தினை முதலீடு செய்து இலாப முழைக்கின்ற நிலை காணப் படுகின்றது. இது பிழையில்லை. எனினும், சமூகத்தில் பல அடிப் படைத் தேவைகளை நிறைவேற் றிக் கொள்வதற்காக அல்லது  உயர் கல்வியை, தொழின்மைசார் (pro ffessionalகற்கை நெறிகளை மேற்கொள்ள முடியாமல் தடுமாறு கின்றவர்கள் ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும்  பரவ லாகக் காணப்படுகின்ற நிலையில் இஸ்லாமி நிதிநிறு வனங்கள்  அவ்வா றானவர்களின் நிலை குறித்தும் அதீத கவனம் செலுத்த வேண்டும்.
இஸ்லாமிய வங்கி தொடர் பான ஒரு கடந்துரையாடலில் இஸ்லாமிய வங்கியின் நிதி நடவடிக்கைகள் குறித்த பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன. எமது நிறுவ னத்திற்கு வருகின்ற வாடிக்கை யாளர்களில் அதிகமானவர்கள் பணவசதி படைத்தவர்கள் என ஓருவர் குறிப்பிட்டார். எமது நிறுவனத்திற்கு இரு தரப்பின ரும் வீடுகட்டல், திருமணத் தேவைகள்,மோட்டார் சைக்கிள் என பல தேவைகளுக்காக வருகின்றனர் என மற்றொருவர் குறிப்பிட்டார். மாதச் சம்பளங்களுடன் வாழ்கின்ற அரச மற்றும் தனியார் தொழில் துறை களில் பணியாற்றுகின்றவர்கள், தமது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தித்துக் கொள்வதில் பல கஷ்டங்களை எதிர் கொள்கின்றனர். மிகக் குறைந்த வட்டி வீதத்துடன் (4%) பல கடன் வசதிகள் அரச ஊழியர்களுக்கு காணப் படுகின்றன. வட்டியிலிருந்து நீங்கியிருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அதனை பெறாமல் இஸ்லாமிய நிதிநிறு வனங்களை நோக்கி வருகின் றனர்.
ஆனால் மிகக் கூடிய இலாப வீதத்தினடிப்படையில் (18%-20%)  இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. இவ்விரு நிலைகளுக்கிடையில் நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் உழைக்கின்றவர்கள் தடுமாறும் நிலை காணப்படுகின்றது என ஒரு ஆசிரியர் குறிப்பிட்டார். முன்னோடி இஸ்லாமிய நிதிநிறுவனம் ஒன்றினூடாக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக ஒருவர் அங்கு சென்ற போது, ஏனைய நிறுவனங்களை விட 5 இலட்சம் அதிகமாக இருந்ததாக மற்றொரு வர் குறிப்பிட்டார். இவை நடைமுறையிலுள்ள சில அவதானங்கள்.
முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்காக இலாபம் உழைத்துக் கொடுக்கும் நோக்கில், இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் இலாபம் உழைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் சமூகத்தில் வறுமை நிலையிலுள்ள அல்லது நடுத்தர வர்க்கத் தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் கவனம் குறைவாகவே செலுத்தப்படுகின்றது.  வேறு வழியின்றி வட்டி வங்கி களை நாடும் நிலை இன்னும் பரவலாகக் காணப்படுகின்றது.
சொத்து செல்வங்கள், பணம் என்பன சோதனைப் பொருள்கள். ஒருவருக்கு அதிகமதிகம் சொத்து செல்வங்களும் பணமும் கிடைப்பதன் மூலம், தமது தேவைக ளுக்கு அப்பால் சமூக விடயங்களிலும் சமூகப் பிரச்சினைகளி லும் அக்கறையுள்ளவராக மாற வேண்டும் என இஸ்லாம் எதிர் பார்க்கின்றது. அதிகமதிகம் ஸதகா கொடுக்குமாறு தூண்டு கின்றது. ஸகாத்தை கடமையாக் கியுள்ளது. "யாஅல்லாஹ் எனக்கு அதிகமதிகம் செல்வத்தை தா, அவ்வாறே அதனை உனக்காக செலவழிக்கக் கூடிய மனதையும் தருவாயாக" என்பது மர்ஹூம் நளீம் ஹாஜியார் ஹஜ்ஜின் போது கேட்கின்ற துஆ.
ஒரு முறை ஒரு ஏழை றஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு உதவி செய்யுமாறு வேண்டிய போது, நபி ஸல் அவர்கள்,குறித்த மனிதனுக்கு எவ்வித பண உதவியையும் வழங்கவில்லை. மாற்றமாக அவரிடம் காணப் படுகின்ற ஆற்றல்களையும் இயலுமைகளையும் எவ்வாறு உழைப்புக்காக பயன்படுத்தலாம் என்பதனை நோக்கி வழிநடாத்துகின்றார். நபி (ஸல்) அவர்கள்,  வீட்டில் விற்கக் கூடிய பெறுமதியான பொருள் ஒன்றை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கின்ற பணத்தைக் கொண்டு ஆயுத மொன்றை வாங்கி, மதீனாவிற்கு வெளியே மலைப்பிரதேசங்களுக்குச் சென்று இரண்டு வாரங்களாக விறகு வெட்டி வந்து, மதீனா சந்தையிலே விற்பனை செய்து சுமார் 10 திர்ஹம்களை இலாபமாக உழைக்கின்றார். மட்டுமன்றி தனது சுயதேவைகளைப் பூர்த்தி நிலையை அடைகின்ற நிலைக்கு அவரை றஸூல் (ஸல்) அவர்கள் நெறிப்படுத்தி விடுகின்றார். இது தனி நபர்களின் சுய ஆற்றல் விருத்திக் கான மிக எளிய உதாரணம். சமூக நிறுவனங்களும் குறிப்பாக "இஸ்லாமிய நிதி நிறுவனங்களும்" சுய தொழில் முயற்சிக்கான தளத்தை வடி வமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால் பாரியளவான மாற்றத்தை கல்வி உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும்  ஏற்படுத்தலாம்.
ஒருமுறை, கொழும்பு பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரையாளர் தனது விரிவுரையின் போது, வெளிக்கிழமை தினம் பிச்சைக்காரர்களின் தினம் எனக் குறிப்பிட்டார். அதற்கு அவர் கூறிய நியாயம், வெள்ளிக் கிழமைகளில் தான் அதிகம் பிச்சை எடுப்பவர்களைக் காண்கின்றேன் எனக் குறிப்பிட்டார். இக்கருத்து சரியோ பிழையோ, அக்கருத்தில் பல உண்மைகள் இருக்கின்றன.
சமகால சூழலில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற மிகப் பெரும் பிரச்சினை, பரவலான கல்விநிலை வீழ்ச்சியாகும். எமது கல்வி வெறும் தத்துவார்த்த ரீதி யான, கோட்பாட்டு ரீதியானதாகவே காணப்படுகின்றது. இதன் பொருளாதார பெறுமானமும் விளைவும் மிகக் குறைவு. இது குறித்த மாற்றங்களை ஏற்படுத்துவதுதற்காக நிதி நிறுவனங்கள் உதவிகளை மேற்கொள்ளலாம்.
மலேசியா போன்ற நாடுகளில் கடந்த 20 வருட காலப் பகுதிக்குள் மிக விரைவான சமூக பொருளாதார அபிவிருத்தி (Socio- Economic development) ஏற்பட்டு வருகின்றது. இதற்கான பிரதான காரணம், பல் கலைக்கழகங்கள் கோட்பாட்டு ரீதியான பாடத்திட்டங்களிலி ருந்து விடுபட்டு, கைத்தொழிலுக்கும் பொருளா தாரத்திற்கும் பங்களிப்புச் செய்யக் கூடிய தொழில் நுட்பம் மற்றும் பிரயோக விஞ்ஞானங்களில் கவனத்தை செலுத்தியதாகும். எமக்குத் தேவை, சமூகத் தின் நிலையான அபிவிருத் திக்கு (sustainable development)  பங்களிப்புச் செய்யக் கூடிய புதிய வியாபார, உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய திறனுள்ள மனிதர்களை உருவாக்கக் கூடிய கல்வித்திட்டமேயாகும்.
ஒரு சமூகத்தில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்ற இலக்கை எட்டுவதற்கு அடிப்படையாக அமைவது, சமூகத்தின்  தனி மனிதர்களை பொருளாதர ரீதியாக பலப்படுத்துவதாகும். சுயதொழில், சிறுகைத்தொழில் முயற்சிகள், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு உதவுவதன் மூலம் அந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதனூடாக நீண்ட காலத்தில் சமூக- பொருளாதார(socio- economicஅபிவிருத்தியினூடாக நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை எட்ட லாம். இதற்கு இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் பாரியளவில் பங்களிப்புச் செய்ய வேண்டும். 
 மீள்பார்வை

No comments:

Post a Comment

المشاركات الشائعة