M.ரிஸ்னி முஹம்மட்
கிறிஸ்மஸ் நெருங்கி வருவதால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர் இந்த சந்தர்பத்தில்முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் மிகவும் மோசமாக ஊடகங்களில் வர்ணனை செய்வதற்கு தேவையான நாடகங்களை கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் செய்வதில் அமெரிக்க உளவு நிறுவனங்களான CIA, FBI முனைப்புடன் செயல் பட்டு வருகின்றது கடந்த ஐந்து ஆண்டுகளில் பல சோடிக்கப்பட்ட போலியான நாடகங்களை CIA, FBI ஆகியன செய்துள்ளது என்ற பல மான குற்றசாட்டுகள் உண்டு
இதன் ஒரு அங்கமாக அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது லொறி அல்லது கார் குண்டுவெடிப்பு நடத்தி பாரிய மனித பேரவலத்தை ஏற்படுத்த திட்டமிட்டார் எனக் சோடிக்கப்பட்ட குற்றஞ்சாட்டுக்களை சுமத்தி அமெரிக்க வாலிபர் ஒருவரை கைது செய்து அமெரிக்க ஐரோப்பிய மிடியாக்களில் பரபரப்புடன் செய்தியை வெளியிட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது விரிவாக பார்க்க Video
சோமாலியா வம்சாவழியான முஹம்மது உஸ்மான் மஹ்மூத் என்ற 19 வயது வாலிபர் FBIயில் குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளார். மஹ்மூதை பற்றி சந்தேகம் எழுந்ததால் FBI ஏஜண்டுகள் லொறி வெடிகுண்டு என்று தெரிவிக்கபடும் சிலவற்றை அவரிடம் கொடுத்து குண்டுவெடிப்பு தூண்டிய பிறகு கைதுச் செய்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.
இந்த வாலிபர் வெளிநாட்டிலுள்ள ஒரு போராளியுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் என்ற சந்தேகத்தின் பெயரில் undercover FBI agents உளவாளி ஒருவன் இந்த வாலிபரை அணுகி தான் இஸ்லாமிய போராளி என்றும் தான் பல கட்டுரைகளை இணையத்தில் எழுதியுள்ளதாகவும் பொய் கூறி அந்த வாலிபரை முளைச் சலவை செய்து
குறித்த பகுதிகளில் லொறி குண்டு- truck full of explosives நடத்தவேண்டும் என்று தூண்டி அந்த வாலிபனை பயன்படுத்தி ரிமோட் கொன்ரோல் ஒன்றை கையில் கொடுத்து இயக்குமாறு கூறி பாரிய மனித பேரவலத்தை ஏற்படுத்த முயன்றார் என்ற போலியான சோடிக்கப்பட்ட நாடக முடிவில் வாலிபரை கைது செய்து மிடியாகளில் இஸ்லாமிய பயங்கரவாதியை கையும் களவுமாக கைது செய்ததாக கொக்கரித்தனர்
இந்த நாடக பணியில் தான் அமெரிக்கா தமது ஏஜண்டுகள் மூலம் ஈராகிலும், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பல அப்பாவி வாலிபர்களை பயன்படுத்தி மஸ்ஜித்துகளிலும், பொதுமக்கள் நடமாடும் இடங்களிலும் குண்டுகளை வெடிக்க செய்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்வதாக கூறிவருகின்றனர் என்பது வெறும் கற்பனை குற்றசாட்டுகள் அல்ல என்பதை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றது
குண்டுகளை பற்றி எதுவும் தெரியாத அந்த வாலிபனை பட்டாசு தரத்தை கொன்ட சில வற்றை கொடுத்து முஹம்மதை நிர்பந்தித்து குண்டுவெடிப்பிற்கு தூண்டியதன் மூலம் குற்றங்களை அமெரிக்க அரசு உற்பத்திச் செய்வது நிரூபணமாகியுள்ளது என அவரது வழக்கறிஞர் ஸ்டீபன் ஸாடி தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்து சிறப்பு உபகரணங்களை கொடுத்து முஹம்மதை இச்சம்பவத்தில் நிர்பந்தித்துள்ளனர் என அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனாலும் அமெரிக்க நீதி முஸ்லிம்கள் விடையத்தில் அராஜக போக்கை கடைபிடிப்பதாக நிறைய குற்றசாட்டுகள் உண்டு இந்த வாலிபனுக்கும் பிணை வழங்கப்படவில்லை என்பதுடன் அடுத்த வழக்கு தவணை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதலாம் திகதி என்று அமெரிக்க நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Thanks:
No comments:
Post a Comment