ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு.
எதிர்வரும் 31 டிசெம்பர் 2010 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு ஒன்றை நடாத்தwww.idrees.lk ஏற்பாடு செய்துவருகின்றது.
போருக்குப் பிந்திய இலங்கையில் பொதுவாக போர் முடிந்துவிட்ட ஆறுதல் தென்பட்டாலும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் இன்னும் தீராமலே இருக்கின்றன. இதற்கு கடந்தகாலங்களில் நாம் நம்பிக்கொண்டிருந்த கொள்கைகளிலும் வழிமுறைகளிலும் காணப்படும் கோளாறுகளையும் குளறுபடிகளையும் இனம் கண்டு புதிய யுகத்திற்கான திறன்களுடன் எவ்வாறு முன்னகரலாம் என்பதற்கான ஒரு விழிப்பூட்டல் மாநாடாக இது அமைகின்றது.
பின்வரும் தலைப்புகளில் இம்மாநாடு நடைபெற இருக்கின்றது
- நெருக்கடிகளைக் கையாள்வதில் நபிகளாரின் வழிமுறை
- புதிய இலங்கையில் வரலாறு, பண்பாடு, சகஜீவனம் போன்றவற்றுக்கான இஸ்லாமிய சிந்திப்பு முறை
- சவால்களை எதிர்கொண்டு புத்தாக்கத்துடன் இளைஞர்கள் சிந்திப்பது எப்படி?
- வினைத்திறனுள்ள இஸ்லாமிய குடும்பவாழ்வு
எனவே, கல்விமான்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment