Search This Blog

Dec 17, 2010

சுதந்திர ஃபலஸ்தீனுக்கு அமெரிக்க பிரதிநிதி சபை எதிர்ப்பு


வாஷிங்டன்,டிச.16:சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டை அங்கீகரிப்பதற்கு அமெரிக்காவின் பிரதிநிதிசபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சுதந்திர ஃபலஸ்தீன் நாட்டிற்கான முயற்சியிலிருந்து ஃபலஸ்தீனர்கள் பின்வாங்க வேண்டும் என பிரதிநிதி சபை உபதேசித்துள்ளது.

ஃபலஸ்தீன் நாட்டை எதிர்க்கும் தீர்மானத்தை பிரதிநிதி சபை ஏகமனதாக நிறைவேற்றியதாக இஸ்ரேலின் ஹாரட்ஸ் பத்திரிகை கூறுகிறது. பிரதிநிதி சபையின் வெளியுறவுத்துறை கமிட்டியின் தலைவர் ஹொவார்ட் பெர்மன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்தார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஃபலஸ்தீனை ஏகமனதாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை வீட்டோ செய்யவேண்டுமென அத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

1967 ஆண்டின் எல்லைகளடங்கிய ஃபலஸ்தீன் நாட்டை பிரேசில், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. உருகுவே ஃபலஸ்தீனை அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. பொருத்தமான சூழலில் ஃபலஸ்தீனை அங்கீகரிப்போம் என ஐரோப்பிய யூனியனும் அறிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளித
ழ்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة