Search This Blog

Dec 21, 2010

முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பான சிபாரிசுகளை செய்ய புத்திஜீவிகள் குழு: நீதியமைச்சர்



முஸ்லிம் தனியார் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருதற்கு தேவையான சிபாரிசுகளை செய்வதற்கான இஸ்லாமிய புத்திஜீவிகளை கொண்ட குழுவொன்றை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றது இவர்கள் முஸ்லிம் தனியார் சட்டத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள், சேர்க்கைகள் தொடர்பாக சிபாரிசுகளை செய்வார்கள்
இலங்கையில் முஸ்லிம் காதி நீதிமன்றங்கள் விரிவான சட்ட திருத்தங்களுக்கு உட்டபடுத்த வேன்டியுள்ளது என்று நேற்று புத்தளம் சென்ற நீதியமைச்சர் ரவூப் ஹகீம் அங்கு பல இடங்களில் கலந்துரையாடல்களிலும், கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார் என்று lankamuslim.org புத்தளம் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் அவர் தற்போது காதி நீதிபதிகள் சபையின் அமர்வுகள் கொழும்பு, புத்தளம் , கல்முனை ஆகிய பிரதேசங்களில் விரிவாக பார்க்க
நடைபெறுகின்றது இதுவும் தரமுயர்த்த படும் மேல் முறையீட்டு காதி நீதிமன்றங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கபடும் என்றும் நாட்டில் உள்ள 65 காதி நீதிமன்றப் பிரிவுகளுக்கு தனியான கட்டிடங்கள் அமைக்கப்பட்டு அவைகள் தரமுயர்த்த படவுள்ளது முதற் கட்டமாக 10 காதி நீதிமன்றங்களுக்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன அதை தொடர்ந்து ஏனைய காதி நீதிமன்றங்களுக்கான தனியான கட்டிடங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

Lankamuslim.org


No comments:

Post a Comment

المشاركات الشائعة