Search This Blog

Dec 17, 2010

விகிலீக்ஸ்: இந்திய போலீஸ் மற்றும் ஆயுத படைகளால் சித்திரவதை செய்யப்பட்ட காஷ்மீர் சிறைக்கைதிகள்

WikiLeaks

மொழிபெயர்ப்பு: அதீக் சம்சுதீன்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னை பறைசாற்றிகொள்ளும் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட காஷ்மீர் சிறைக்கைதிகளின் மீதான ஒழுங்கமைக்கப்பட்ட சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களின் விபரங்கள் விகிலீக்ஸ் இணையத்தளத்தினால் நேற்று வெளியிடப்பட்டன.
அமெரிக்க அதிகாரிகளிடம் இத்துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான ஆதாரங்களை ICRC அதிகாரிகள் சமர்ப்பித்திருந்தமையும் அம்பலமாகியுள்ளது. 2005 ஆம் ஆண்டு ICRC அதிகாரிகள் அமெரிக்க இராஜதந்திரிகளிடம் டெல்லியில் வைத்து இந்திய அரசினால் கைது செயப்பட்ட நூற்றுக்கணக்கான  காஷ்மீர் மக்களின் மீதான மின்சாரம் பாய்ச்சுதல் மற்றும் பாலியல் ரீதியான சித்திரவதைகளின் விபரங்களை விபரித்தமை தெரியவந்துள்ளது.
இந்திய ஆயுத படைகளினால் வாக்குமூலங்களை பெறுவதற்காக காஷ்மீர் சிறைக்கைதிகளின் மீது பரந்தளவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி 2007 ஆம் ஆண்டு அமெரிக்க இராஜதந்திர அதிகாரிகள் அவதானித்து வந்துள்ளார்கள்.
விகிலீக்சினால் வெளியிடப்பட்டுள்ள இத்தகவல்கள் இந்திய அரசாங்கத்தின் ஜனநாயக வேசத்தின் மீது விழுந்த பாரிய அடியாக கருதப்படுகின்றன.
ICRC அதிகாரிகள் 2005 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஏனைய பகுதிகளில் இந்திய அரசினால் நடாத்தப்பட்டுவந்த பல தடுப்பு முகாம்களில் 177 சோதனைகளை மேற்ற்கொண்டனர். இதன் போது 1491  கைதிகளை அவர்கள் சந்தித்துள்ளனர் அதில் 1296 கைதிகள் தனிமையில் விசாரிக்கப்பட்டனர். இக்கைதிகளில் 850 கும் அதிகமான கைதிகள் தாம் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இவ்விஜயங்களின் போது 6 வகையான சித்திரவதைகள் இந்திய ஆயுதப்டைகளினால் மேற்ற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது. கூரையில் கட்டி தொங்கவிடப்படுதல், தொடைகள் இரும்புகம்பிகளினால் நசுக்கப்படுதல், இரண்டு கால்களும் எதிரெதிர் திசைகளில் இழுக்கப்படுதல் நீர்த்தாரை பிரயோகம் என்பன இச்சித்திரவதைகளில் அடங்குகின்றன. 300 கும் மேற்பட்ட கைதிகள் தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அநேகமான கைதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
சில முக்கியமான தடுப்பு முகாம்களை பார்வையிடுவதற்கு ICRC அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சித்திரவதைகள் உயர் அதிகாரிகளின் பிரசன்னத்திலேயே நடைபெற்றுள்ளன. தீவிரமாக சித்திரவதை செய்யும் சிப்பாய் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பை பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்படும் பெரும்பாலான காஷ்மீரிகள் தீவிரவாதிகளுடன் தொடர்பு அற்றவர்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة