M.ஷாமில் முஹம்மட்
1990 ல் வடமாகாணத்தின் யாழப்பாணம், முல்லைதீவு ,வவுனியா, மன்னார் ,கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஒரு இலட்சம் வரையிலான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இவற்றில் முல்லைத்தீவு முஸ்லிம்கள், வவுனியா முஸ்லிம்கள் பற்றிய செய்திகள் , விபரங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்றுதான் கூறவேண்டும் பொதுவாக வடமாகாண முஸ்லிம்கள் என்று விழிக்க பட்டாலும் முல்லைத்தீவு முஸ்லிம்கள், வவுனியா முஸ்லிம்கள் என்று தனியாக அணுகுவது அவர்களை பற்றிய கூடிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவதற்கு உதவும் இந்த கட்டுரையில் முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய விபரங்களை பார்போம் , வவுனியா முஸ்லிம்கள் பற்றிய கட்டுரை ஒன்றை தனியாக எழுதவேண்டி இருப்பதால் அதை வேறு ஒரு கட்டுரையில் பார்போம்
முல்லைத்தீவு இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை அமைந்திருக்கின்றது . முல்லைத்தீவு புலிகளின் இராணுவ முக்கியத்துவம் பாய்ந்த இடமாக இருந்ததும் இறுதி யுத்தம் நடைபெற்ற இடமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் முஸ்லிம்கள் வாழ்ந்த மற்றொரு மாவட்டமான முல்லைத்தீவு இங்கு 1990 இல் முஸ்லிம்கள் வெளியேற்ற படும்போது சுமார் 7000 ஆயிரம் பேர் வரை வாழ்ந்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து மஸ்ஜிதுகள் , இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் அமைந்திருக்கின்றன இவைகளில் மஹுபூப் சுபுஹாணி மஸ்ஜித் , மற்றும் முல்லைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாளையம் ஆகிய இரண்டும் முல்லைத்தீவு நகரிலும் , தண்ணீரூற்று பெரிய மஸ்ஜித் மற்றும் தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாளையம் ஆகிய இரண்டும் தண்ணீரூற்று பிரதேசத்திலும் -தண்ணீரூற்று பிரதேசம் முல்லைத்தீவு நகரில் இருந்து சுமார் ஐந்து கே.ம துரத்தில் அமைந்துள்ள முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த ஒரு கிராமம்- தண்ணீரூற்றில் மேலும் இரண்டு மஸ்ஜிதுகள் சிறிய அளவில் இயங்கியுள்ளன , மஸ்ஜிதுல் நூரானியா என்ற பெயரிலும் தண்ணீரூற்று கிழக்கு பகுதியான நீராவிப்பிட்டி பகுதியில் ஒரு மஸ்ஜித் இருந்துள்ளது மேலும் மொஹிடீன் தக்கிய என்ற என்ற பெயரில் ஒரு மஸ்ஜித் ஹிஜ்ராபுரம் பகுதியிலும் அமைந்திருந்தது
ஆக முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் பாடசாலைகளும் , ஐந்துக்கு மேற்பட்ட மஸ்ஜிதுகளும் இருந்துள்ளன தற்போது இவைகள் மிகவும் சிதைவடைந்த நிலையில் இருப்பதாக தெரிய வருகின்றது முல்லைத்தீவுப் பகுதியில் முஸ்லிம்கள் 1800 ம் ஆண்டு முதல் வாழ்கிறார்கள் என்பதற்கான வரலாற்றாதாரங்கள் உள்ளன என கலாநிதி ஹஸ்புல்லாஹ் கூறுகிறார். அதற்கு முன்னரும் அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள் வாழ்ந்தமைக்கான வாய்மொழி ஆதாரங்கள் உள்ளன என்றும் . அந்தவகையில், யாழ்ப்பாண முஸ்லிம்கள் போர்த்துக்கேயரால் வெளியேற்றப்பட்ட போது யாழ்ப்பாண முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளூடாக நிர்வாகிக்கப்படுகின்றது . கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஒட்டிசுட்டான் , துணுக்காய், பாண்டியன் குளம் ஆகிய ஐந்து பகுதிகளிலும் முஸ்லிம்களில் , வியாபார நிலையங்கள் , தோட்டங்கள் , விவசாய காணிகள் , இருந்துள்ளதுடன் சிலர் கடல் தொழிலுடன் தொடர்புடைய வியாபாரத்திலும் ஈடு பட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும் முஸ்லிம்களின் இருப்புகள்அமைந்திருந்தன இவற்றில், முல்லைத்தீவு நகரம், கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதுடன் முல்லைத்தீவு நகர் பகுதியில் மூன்று இடங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து உள்ளனர் , கள்ளப்பாடு , வணார் குளம் , பிரதான வீதி ஆகிய இடங்களில் 1990 வரை வாழ்நதார்கள் முல்லைத்தீவு மக்கள் தமிழ் , முஸ்லிம் , சிங்கள இன ஒற்றுமை நிலவிய பிரதான இடமாக இருந்துள்ளது இங்குள்ள தமிழர்களும் , முஸ்லிம்களும் குறிபிடத்தக்க அளவு சிங்கள மொழி பேச தெரிந்தவர்களாக இருந்துள்ளார்கள்
தற்போது முல்லைத்தீவு முஸ்லிம்கள் இலங்கையின் பல பகுதிகளில் அகதிகளாக 20 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்கள் அதிலும் குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் மதுரங்குளி, நுரைச்சோலை, கல்பிட்டி, புத்தளம்,ஆகிய பிரதேசங்களில் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள் முல்லைத்தீவு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றபட்டபோது முஸ்லிம்களுக்கு சொந்தமான 552 வீடுகளும் , 994 விவசாய , தோட்ட , குடியிருப்பு காணிகளும் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்துள்ளது என்பதுடன் பெரும் தொகையான ஆடு, மாடு மற்றும் இதர பிராணிகளும் இருந்துள்ளது
வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனித்துவமாக அணுகப்படவேண்டும் என்ற www.lankamuslim.org யின் வாதத்தை முன்வைத்து முல்லைதீவு முஸ்லிம் பற்றிய ஆக்கத்தை நிறைவு செய்கின்றேன்
வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனித்துவமாக அணுகப்படவேண்டும் , தமிழ் மக்களின் மணிக் பாம் போன்ற தமிழ் மக்களின் முகாம்களுடன் ஒபிட்டு முஸ்லிம்களின் பிரச்சனையை அணுகமுடியாது அப்படியான அணுகு முறைகள் முற்றிலும் தவறானதாகதான் இருக்கம் தமிழ் மக்களின் பிரச்சனை தனியானது அவர்கள் இறுதி யுத்தத்தின் போது புலிகளால் பலவந்தமாக அல்லது விரும்பி புலிகளுடன் சென்றார்கள் ஒரு கும்பமாக சென்றவர்கள் உறுபினர்களை இழந்து தொகை குறைத்து அல்லது வந்த அதே தொகையினர் மீள் குடியேற்றம் செய்யபடுகின்றார்கள் இது ஒரு குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றவை ஆகவே தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது வேறு , முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் என்பது முற்றிலும் வேறானது ஆனால் நடைமுறையில் இரண்டு தரப்பினரும் ஒன்றாக பார்க்க படுகின்ற மிகவும் தவறான அணுகு முறைதான் பின்பற்றபடுகின்றது.
இப்போது இருக்கும் மொத்த வட மாகான முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் தீர்வு கிடைக்க கூடிய அரச கொள்கை ஒன்று வேண்டும் 20வருடங்களுக்கு முன்னர் ஒரு வீட்டையும் ஒரு கடையையும் இழந்த ஒருவரின் குடும்பம் இன்று மூன்று குடும்பமாக இருக்கும் போது இரு இரு தரப்புக்கும் ஒரு விதமான மீள் குடியேற்ற முறை முற்றிலும் தவறானது முஸ்லிம்கள் , மீள் குடியேற்றம் பற்றிய அரச கொள்கை ஒன்று உருவாக்கபட வேண்டும் அந்த கொள்கையின் அடிப்படையில் மீள் குடியேற்றம் இடம் பெற வேண்டும் அதுவரை வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் என்பது அரசியல் வசனங்களாக மட்டுமாகத்தான் இருக்க போகின்றது குறிப்பாக முல்லைத்தீவுப் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் நினைவுகளாக மட்டும்தான் இருக்க போகின்றது - நான்கு குடும்பமாக இருக்கும் மக்களிடம் ஒரு உடைந்து தகர்ந்து கிடக்கும் ஒரு சிறிய இடத்தை காட்டி இங்கு நீங்கள் வந்து குடியேறுங்கள் உங்களுக்கு 100 வீத பாதுகாப்பை நாங்கள் தருகிறோம் என்றால் அது மீள் குடியேற்றத்தை செய்வதற்கு போதுமாகாது 20 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் இருந்த இடங்களிலும் அதற்கு சுற்று புறங்களிலும் காணிகள் தெரிவு செய்ப்பட்டு புதிய குடியிருப்புகள் உருவாக்கபடவேண்டும் புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கும் , வீடு இல்லாதவர்களுக்கும் அங்கு வீடுகள் கட்டி கொடுக்க படவேண்டும் , தொழில் வசதிகள் செய்து கொடுக்க படவேண்டும் இவை மட்டும்தான் முஸ்லிம் மீள் குடியேற்றம் என்பதை சரியாக உருவகப் படுத்த முடியும்
தாம் முற்றிலும் புறக்கணிக்க படுவதாக உணர்கின்றனர் பொதுவா வட மாகாணத்தின் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் ஆரம்பிக்க பட்டுள்ளது என்று கூறினாலும் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் எந்தவித நகர்வும் இன்றி இருப்பது மிகவும் வேதனைக்குரியது

No comments:
Post a Comment