இலங்கை இஸ்ரேலையும் அங்கீகரிக்குமான ?
:சுதந்திர பலஸ்தீனை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இன்றுவரை அரசாங்கம் பாலஸ்தீனை கொள்கையளவிலேயே ஏற்றுக் கொண்டிருந்தது. இப்போது முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.
பாலஸ்தீனுக்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி திஸ்ஸ ஜயசிங்க இது தொடர்பாக கருத்துத்துரைகையில் உலகின் பல நாடுகள் சுதந்திர பாலஸ்தீனை ஏற்றுக் கொண்டு அறிவித்திருக்கின்றன. இவ்வாறானதொரு நிலைமையில் மிக நீண்ட காலமாக பாலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் இலங்கையும் சுதந்திர பாலஸ்தீனை அங்கீகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது விரிவாக
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிக விரைவில் இது குறித்து அமைச்சரவைக்கு யோசனையை சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அதனையடுத்து அரசு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.
தற்போது பாலஸ்தீன் இராஜதந்திர பிரதிநிதி அலுவலகமே செயற்பட்டு வருகிறது. அரசு சுதந்திர பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டதும் அந்த அலுவலகம் உயர்ஸ்தானிகராலயமாக மாற்றப்படும். அதேபோன்று இலங்கையிலிருக்கும் பாலஸ்தீன பிரதிநிதி அலுவலகமும் தூதுவராலயமாக மாறும் எனவும் கலாநிதி ஜயசிங்க தெரிவித்துள்ளார்
பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகரிப்பது பற்றி தெரிவிக்கப்பட்டாலும் அதன் எந்த ஆண்டுகளுக்குரிய எல்லைகளை கொண்டதாக அங்கீகரிப்பது பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை ,என்பதுடன் இதை தொடர்ந்து இலங்கை இஸ்ரேலையும் அங்கீகரிக்குமான ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது இந்நிலையில் அடுத்த மாதம் இஸ்ரேலின் உயர் மட்ட தூது குழு ஒன்று இலங்கை வரவுள்ளது என்பது குறிபிடத்தக்கது
No comments:
Post a Comment