M. ஷாமில் முஹம்மட்
இந்தியாவைச் சுற்றி, முத்துமாலை- STRING OF PEARLS – ஒன்றினை சீனா செய்து வருகின்றது என பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இது பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் எமது தளத்தில் பதிவு செய்து வருகின்றோம் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் சீனா கால் பதிக்கிறது என்பதிலிருந்து இந்த முத்து மாலை விவகாரம் எழுகிறது.
இதற்கு போட்டியாக இந்தியாவும் வலைகளை பின்னிவருகின்றது அதிலும் இலங்கை விடையத்தில் இலங்கையை சீனாவுக்கு விட்டுகொடுக்க இந்தியா தயாராக இல்லை என்பதைத்தான் இந்தியா , சீனா இரண்டும் பொருளாதார உதவிகள் என்ற போர்வையில் இலங்கையில் தமது செல்வாக்கையும் , அதிகாரத்தையும் ஏற்படுத்தும் நகர்வுகள் எடுத்துகாட்டுகின்றன என்பது நோக்கத்தக்கது இந்ந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்திலும், ஹம்பாந்தோட்டையிலும் இந்தியத் துணைத் தூதரகங்களை திறந்து வைக்கிறார் கண்டியிலும் விரிவாக பார்க்க துணைத் தூதரகம் ஒன்றை திறக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது அதேவேளை சீனா கிழக்கிலும் , மேற்கிலும் வடமேற்கிலும் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது இந்த சந்தர்பத்தில் எமது இணையத்தளத்தில் ஜூன் மாதம் நாம் பதிவு செய்த ‘ இலங்கையின் பிராந்திய அரசியல் காய்நகர்த்தல்: இலங்கையின் கட்டுபாட்டில் இந்தியா’ என்ற கட்டுரையை பதிவு செய்கின்றோம்.
இலங்கையின் பிராந்திய அரசியல் காய்நகர்த்தல்: இலங்கையின் கட்டுபாட்டில் இந்தியா
ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான லின் பாஸ்கோ இன்று வருகிறார் அரசியல் நல்லிணக்கம், அகதிகளின் மீள்குடியேற்றம்,மனிதஉரிமைகள் தொடர்பாக இலங்கைத் தலைவர்களுடன் லின் பாஸ்கோ கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கபடுகின்றது , அதே வேளை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விசேட தூதுவர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் போர்க் குற்ற விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டேவிட் பிரஸ்மன்,கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸ் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் சமாதான ஏற்பாட்டாளரும் மீள்குடியேற்றம் மற்றும் மீள் நிர்மாணத்துறை பிரதிநிதியுமான யசூசி அகாசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோருக்கிடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது
இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து சர்வதேச சமூகம் திருப்தி காண முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டவிரோதப் படுகொலைகளுக்கான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார் தமது நாட்டின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்தி வரும் இலங்கை இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது இப்படி இருக்க இலங்கை நிலைவரம் தொடர்பாக இன்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆராயவுள்ளது பிரிட்டிஷ் பிரதான எதிர் கட்சியான தொழிற்கட்சியை சேர்ந்த உறுப்பினர் சியோபாயின் மக்டொனாக் இவ்விவகாரம் தொடர்பான விடயத்தை சபையில் எழுப்பவுள்ளதாக தெரிகின்றது
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் நாயகமும், அரசியல் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவருமான லியன் பஸ்கோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை மற்றும் ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாஷி விஜயம் செய்துள்ளமை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் விசேட தூதுவர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் போர்க் குற்ற விவகாரங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டேவிட் பிரஸ்மன் விஜயம் செய்துள்ளமை என பல்வேறு சர்வதேச சிறப்புத் தூதுவர்களின் வருகை இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்தவா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
அண்மைக்காலமாக இலங்கைக்கு வெளிநாட்டுப் பிரதி நிதிகளின் வருகை அதிகரித்து வருகின்றது இது பற்றி நேற்று கருத்து தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகளில் பரப்பப்பட்டுவரும் தவறான கருத்துகளைத் தெளிவுபடுத்துவதற்கு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இங்கு விஜயம் செய்வது அவசியம் எனதெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அவற்றை இலங்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கலாம். அவற்றின் அடிப்படையில் சட்டத்தரணிகள் ஊடாக வழக்கு பதிவு செய்யலாம் என்று பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாய ராஜபக்ச சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்குச் சவால் விட்டுள்ளார் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டியது யார் என்பது தொடர்பாக ஐ.நா.வுக்கும் இலங்கைக்குமிடையில் சர்ச்சை மூண்டிருப்பதற்கு மத்தியில் சர்வதேச பிரதிநிதிகளின் வருகை இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பது உண்மையானாலும் அழுத்தங்களுக்கு இலங்கை எந்த அளவு அடிபணியும் என்பதுதான் பொருத்து இருந்து பார்க்கப்படவேண்டிய விடையம்.
அழுத்தங்களுக்கு பிரதான ஆயுதமாக பொருளாதாரம் பயன்படுத்தபடுவதால் அழுத்தங்கள் இலங்கை மீது தாக்கங்களை ஏற்படுத்தும் வாய்புகள் காணபடுகின்றது எனிலும் இந்தியாவின் இலங்கை பற்றிய நிலைப்பாடு மேற்கு நாடுகள் இலங்கை பற்றிய தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு தடையாக அமைந்து வருகின்றது.
இலங்கை விவகாரம் பற்றி இந்தியாவின் நிலைப்பாட்டில் மேற்கு உலகம் தங்கியுள்ளது சீனா , இந்தியா என்ற பிராந்திய சக்திகளில் மேற்கு நாடுகளை சார்ந்து இருப்பது இந்தியாதான் கடந்த வருடம் ஆளும் தரப்பாகவிருந்த பிரிட்டிஷ் தொழிற்கட்சி பிரிட்டிஷ் பாராளுமன்றதில் இலங்கை விவகாரம் பற்றி ஆராயந்த போது இந்தியாவின் இலங்கை பற்றிய நிலைப்பாடு முக்கிமானதாக அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன் இந்தியாவின் நிலைபாட்டை அடிப்படையாகொண்ட தீர்மானகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகர்வுகளைத்தான் மேற்கொண்டனர் என்பது சுட்டிக்காட்ட தக்கது தற்போது இலங்கையை பாதுகாப்பது இந்தியா என்றுதான் கூறவேண்டும்.
பிராந்திய மேலாதிக்க போட்டியின் விளைவாக சீனாவும் இந்தியாவும் தமது அயல் நாடுகளை தமது கைக்குள் வைத்திருக்கு வேண்டிய தவிர்க்க முடியாத, புவியல் சார் இராணுவ பொருளாதார போட்டி ஒன்றினுள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இதில் சீனாவின் கரம் நன்கு ஓங்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும் இந்தியாவை சூழவுள்ள பிராந்தியங்களில் சீனாவின் பல்வேறு பட்ட தளங்கள் உருவாக்கபட்டுள்ளது அதில் சீனா மிகவும் தீவிரம் காட்டிவருகின்றது இந்த இரு பிராந்திய பிரமாண்டங்களும் தமது மேலாதிக்க போட்டியை தற்போது இலங்கையில் மையம் பெற செய்யதுள்ளது இந்தியாவுக்கு இலங்கையின் வடக்கு கிழக்கு என்றால் சீனாவுக்கு தென்பகுதி என்று போட்டி விரிவடைந்து செல்கின்றது இலங்கையை கூறுபோடுவதில் இந்தியாவும் சீனாவும் கடும் போட்டி ஒன்றில் நீண்ட காலமாக ஈடுபட்டுவருகின்றது.
இதன் விளைவு இரு நாடுகளும் பல ஒப்ப ந்தங்களின் ஊடாக இலங்கையை தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்துகொண்டிருகின்றது என்று தான் கூறவேண்டும் இதனால் இலங்கைக்கு பல பொருளாதார அணிகூலங்கள் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் இலங்கைக்கு ஆரோக்கியமாக அமையாது இந்தியாவுக்கு இலங்கை மிகவும் அவசியமானது இந்தியா இலங்கை பற்றி இலங்கை அரசுக்கு முரணான முடிவுகளை எடுத்தால் இலங்கை சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கமான தோழமை கொள்ளும் என்ற இலங்கையின் மறைமுக மிரட்டலுக்கு இந்தியா அடங்கித்தான் செயல்படுகின்றது.
ஆனாலும் இலங்கையின் இந்த நிலைப்பாடு எந்த அளவுக்கு நீண்ட காலத்துக்கு வெற்றி பெரும் என்பது கேள்விக்குரிய விடையம் எனிலும் பிராந்திய அரசியல் தளத்தில் இலங்கை நகர்த்தும் காய்களின் இடங்களை பொருத்து இலங்கை தனது பிராந்திய முக்கியதுவத்தை பாதுகாக்க முடியும் தற்போது இந்த நிலைப்பாடுதான் இலங்கையை மேற்கு மேலாதிக்க சக்திகளிடம் இருந்து பாதுகாத்து வருகின்றது என்பதுதான் இலங்கை இன்று அடையும் இலாபம் நாளை இலாபத்தையும் முதலையும் விழுகும் அரசியல் மாற்றங்கள் இடம்பெறலாம்