Search This Blog

Jul 2, 2011

யாழ் சோனகரிஸ்தானில் குளோபல் பஜார் அமைய வேண்டும்

முஹம்மது ஜான்ஸின்
யாழில் மீளக்குடியேற்றம் மீள் பரிசீலனை அவசியம்! : யாழ்ப்பாணம் சோனகரிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கோள்ளப்பட்டு வந்த மீள்குடியேற்றத் திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை என்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் சேர்ந்து சங்கமொன்றை உருவாக்கி தம்மாலான பெருமுயற்சிகளை எடுத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இருந்த போதிலும் மீள்குடியேற்றம் இருபது வருடங்களின் பின்னர் இடம்பெறுவதால் சில நடைமுறைப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. யாழ்ப்பாணத்தை ஆண்டுஅனுபவித்த எமது மூதாதையர்ல் பலர் இறையடி சேர்ந்துவிட்டனர். இன்னும் பலர் வயோதிபம் மற்றும் நோய்கள் காரணமாக சுயமான நடமாட்டங்கள் குறைந்தவர்களான உள்ளனர். 1990இல் யாழிலிருந்து வாலிபர்களாக வெளியேறியவர்கள் இன்று குடும்பமாகி குழந்தை குட்டிகளுடன் வாழ்கின்றனர்.
அவர்களின் தொழில்களின் அமைவிடம் கொழும்பை தளமாக கொண்டு செயற்படுகின்றது. மேலும் அவ்வாறானவர்களின் பிள்ளைகள் தாம் தற்போது இருக்கும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் தமது கல்வியை தொடர்கின்றனர்
இவ்வாறான நிலையில் மீளக்குடியேற்றம் பற்றி அவர்களின் திட்டங்கள் தமது தற்போதைய நிலைப்பாடுகளை மையமாக வைத்தே மேற்கொள்ளப்படும். வயோதிபர்கள் பலருடன் கலந்துரையாடிய போது அவர்களுக்கு மீளக்குடியேற வேண்டுமென்ற ஆசையிருந்தாலும் தமது உடல்நிலை குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் மீளக்குடியேற விரும்பாமை போன்ற காரணங்களால் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வாலிபர்களில் பெரும்பாலானவர்கள் தமது தொழில்களின் அமைவிடம் பிள்ளைகளின் கல்வி விடயங்கள் போன்றவற்றால் மீளக்குடியேறும் நோக்கம் அறவே தங்களுக்கு இல்லை என தெரிவிக்கின்றனர். இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளம் சமுதாயம் யாழ்ப்பாணத்தை பற்றி அறியாதவர்களாகவும் அங்கு போய் குடியிருக்கும் தமது பெற்றாரின் கருத்துகளுக்கு முரணான கருத்துக்களையுடையோருமாக உள்ளனர். அரச உத்தியோகம் செய்யக்கூடிய விரல் விட்டு எண்ணப்படக்கூடியோர் தமக்கு யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் கிடைத்தால் அங்கு போய் குடியேற விருப்பம் கொண்டுள்ளதாய் கூறினர்.
இவர்களில் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிக்கக்கூடிய சிலரின் நிலைப்பாடு தொழில்கள் அமைந்தால் மீளக்குடியேறலாம் என்பதாகவுள்ளது. இவர்கள் யாழில் மாத்திரமல்ல இலங்கையிலோ வெளிநாடுகளிலோ தொழில்கள் அமையுமிடத்து அங்கு சென்றுவிடுவார்கள். இவ்வாறானவாகளை இந்த யாழ் முஸ்லிம் வர்த்தகர் சங்கம் குறிவைக்க வேண்டும். ஏனெனில் அவ்வாறானவர்களில் பலர் குடும்பத்தை பிரிந்து சென்று வெளிநாடு சென்று வேலை சேய்யும் நோக்கமற்றவர்களாக உள்ளனர். மேலும் உள்நாட்டில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தொழிலொன்று கிடைக்குமிடத்து அங்கு காலப்போக்கில் குடியேறவும் தயாராக உள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே குடியேறியுள்ள 170 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கே தொழில்கள் வியாபாரங்கள் போன்றவற்றை அமைத்துள்ளனர். குடும்பங்கள் இல்லாது குடியேறியுள்ள ஆண்கள் பெரும்பாலும் மாதமொருமுறை தமது குடும்பத்தை பார்க்க புத்தளம் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர் இவர்களில் பலரின் தொழில் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் இறைச்சிக் கடை வியாபாரமாக உள்ளது.
புத்தளத்தில் தொழிலின்றி ஒரு இளைஞர் கூட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருப்போர் பெருமபாண்மையாக உள்ளனர். அவர்கள் ஏஜன்ஸிகளுக்கு பணம் கட்டமுடியாமலும் சிலர் வாய்ப்புக்கள் இன்றியும் உள்ளனர். அவ்வாறானவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் தொழில்களை அமைத்துக் கொடுத்தால் காலப்போக்கில் அவர்கள் திருமணம் முடிக்கும் தருவாயில் யாழில் குடியேறும் முடிவை எடுக்கலாம்.
எவ்வாறான தொழிலை ஆரம்பிக்கலாம்?
மன்னார் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் மக்கள் குடியிருப்புகள் அதிகமாக விவசாயத்தை நம்பியவையாக காணப்படுவதால் அங்கு மீள்குடியேற்றம் ஓரளவு வெற்றியளிக்கும். அங்கு பத்து விழுக்காடு மக்கள் மீளக்குடியேறினாலே போதுமானது. யாழ் சோனகரிஸ்தான் வியாபாரத்தை நம்பிய தனிக்குடியிருப்பு. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலருக்கு சங்குப்பிட்டி – பரந்தன் வீதி கிளிநொச்சி மற்றும் விசுவமடு போன்ற பிரதேசங்களில் விவசாயக் காணிகள் இருந்தாலும் 1990இக்கு முன்பே விவசாயத்தில் அவர்களின் விருப்பங்கள் குறைந்திருந்தன. எனவே விவசாயத்தை நம்பிய குடியேற்றங்களை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தும் சாத்தியம் குறைவு. இரும்பு வியாபாரம் மற்றும் இறைச்சிக்கடை வியாபாரிகள் தனியாகவோ குடும்பம் சகிதமோ ஏற்கனவே குடியேறிவிட்டார்கள். எஞ்சியிருக்கும் துறைகள் அரசாங்க பொதுச்சேவை துறைகளில் வேலைசெய்வோர் ஆசிரியத் தொழில் செய்வோh; மற்றும் பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டிருப்போர் ஆகியோராவர். இவர்களில் வியாபாரம் செய்யக்கூடியோரை மீளக்குடியமார்த்தும் வாய்ப்புகள் அதிகம்.
வியாபாரத்தைப் பொருத்தவரையில் யாழ்ப்பாணத்தில் 2002 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட ஒரு காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு வர்த்தகம் செய்து வந்தனர். 2009ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் அவர்கள் வியாபார நோக்கமாக யாழ் சென்றபோது பல சவால்களை எதிர்கொண்டனர். யாழ் முஸ்லிம்களும் ஏனைய பிரதேச முஸ்லிம்களும் அதிகளவில் செய்து வந்த நடைபாதையோர வியாபாரம் தடைப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொழில்களையிழந்தனர்.2009 டிசம்பா; தொடக்கம் 2011 மே வரை நடைமுறையிலிருந்த இரும்பு வியாபாரத்துக்கான தடை நிலமையை மேலும் மோசமாக்கியது. இத்தொழில்களை நம்பியிருந்த பல முஸ்லிம்கள் வருவாயிழந்து பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கினர்.
இன்று முஸ்லிம்களின் மீளக்குடியேற்றத்தை ஊக்கிவிக்கக் கூடிய வழிமுறைகளில் பல கல்விமான்களால் பிரேரிக்கப்பட்ட விடயமாக சோனகரிஸ்தானை வியாபார ஸ்தலமாக மாற்றும் பிரேரனையுள்ளது. தற்போது அங்கு பல வீடுகள் குடியிருப்புகள் இன்றி காணப்படுவதால் அவ்விடங்களில் பல்வேறு வியாபார தாபனங்களை உருவாக்குவதன் மூலம் சோனகரிஸ்தானை சனப்புளக்கம் உள்ள ஓரிடமாக மாற்றவும் முடியும். புத்தளம் போன்ற பகுதிகளில் வேலைவாய்ப்பின்றி உள்ள யாழ் முஸ்லிம் வாலிபர்களுக்கு தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்கு பொருத்தமான இடமாக ஹாதி அபூபக்கர் வீதியில் தைக்கா பள்ளி முதல் வைத்தீஸ்வரா சந்திக்கு இடையிலான பிரதேசம் விளங்குகின்றது.
இப்பிரதேசத்தில் சில கடைகளை கட்டி அவற்றில் பிடவை வியாபாரம் கொழும்பு வோல்ர்ட் மார்கட்டில் நடக்கும் விலை குறைந்த ஆடைகளின் வியாபாரம் சோப்பு சீப்பு கண்ணாடி வியாபாரம் நகை வியாபாரம் துணி வியாபாரம் பலசரக்கு வியாபாரம் போன்ற பல்வேறு வியாபாரங்களை ஆரம்பிக்கலாம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பத்து கடைகள் ஆரம்பிக்கப்பட்டால் 30 பேருக்கு உடனடி வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த தொழில்களில் முன்னேற்றங்கள் காணப்பட்டால் மேலும் பலர் அவ்விடத்தில் கடைகளை கட்டி தொழில்களை ஆரம்பிக்கக் கூடும். இதனூடாக அந்த இடம் ஒரு வர்த்தக சந்தையாக மாற்றமடையும்.
இப்பகுதிக்கு வாடிக்கையாளா;கள் வருவார்களா?
இப்பகுதிக்கு வாடிக்கையாளர்கள் வருவார்களா? என்பது தான் சிலரது கேள்வியாக உள்ளது. யாழ்ப்பாண மக்களில் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் துவிச்சக்கர வண்டிகள் மூலம் பிரயாணம் செய்யக்கூடியவர்கள். அவர்கள் தமக்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள பல மைல்கள் துவிச்சக்கர வண்டிகளில் தினமும் பிரயாணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவர்கள். யாழ் கே.கே. எஸ். சந்தியிலிருந்து யாழ் வைத்தீஸ்வராவூடான அபூபக்கர் வீதி ஒரு கிலோ மீற்றர் தூரத்தையே கொண்டது. எனவே இது ஒரு பிரயாணம் செய்யமுடியாத ஒரு தூரமாக வாடிக்கையாளர்களால் கருதப்படமாட்டாது. மேலும் யாழ் வாடிக்கையாளர்களை பொருத்த மட்டில் தரமான பொருள் மலிவான விலையில் எங்கு கிடைத்தாலும் அங்கு சென்று வாங்குவார்கள். எனவே சோனகதெருவில் தொடங்கப்படக்கூடிய ‘குளோபல் பஜாரில்’ தரமான பொருட்களை மலிவாக விற்றால் வாடிக்கையாளர்கள் அலை மோதுவார்கள். இவ்வாறுதான் கொழும்பு பாபர் வீதி பஜாராக மாறியது. புத்தளம் ரத்மல்யாய தில்லையடி போன்ற பகுதிகள் பஜாராக மாறின.
மேலும் யாழ்ப்பாணத்தில் பஸ் சேவையை பொருத்த வரையில் மானிப்பாய் வீதியூடாக அதிகமான பஸ்கள் பிரயாணம் செய்வதால் வாடிக்கையாளர்கள் வைத்தீஸ்வரா சந்தியில் இறங்கி அபூபக்கர் வீதிக்கு வரலாம். மேலும் கே.கே. எஸ். வீதியூடாக செல்லும் பஸ்களில் வருவோர் சிவன்கோயிலடி சந்தியில் இறங்கி அங்கிருந்து அபூபக்கர் வீதிக்கு நடந்து வந்துவிட முடியும். மேலும் ஏனைய பஸ்களில் வருவோர் யாழ் மத்திய பஸ் நிலையத்திலிருந்து பஸ் மூலமாக அல்லது நடந்தே வந்துவிட முடியும். எனவே சோனகதெருவில் தொடங்கப்படக்கூடிய ‘குளோபல் பஜாருக்கு ’ இன்ஷா அல்லாஹ் பல திக்குகளிலிருந்தும் வாடிக்கையாளர்களை எல்லாம் வல்ல இறைவன் அனுப்புவான்.
இந்த திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஏனைய ஊர் முஸ்லிம்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். ஏனெனில் யாழ் முஸ்லிம்களில் மீளக்குடியேறக்கூடியோர் ஏற்கனவே குடியேறிவிட்டதாக எனது அபிப்பிராயம். இன்னும் பத்து அல்லது பதினைந்து குடும்பங்கள் தான் அடுத்த ஒரு வருடத்தில் குடியேறக்கூடிய சாத்தியம் உள்ளது. தற்போதுள்ள சூ ழ்நிலையில் வெளியூர் முஸ்லிம்கள் குடியேறும் சாத்தியம் தான் அதிகம். எனவே அவர்களையும் உள்வாங்கி புதியதொரு ஒற்றுமை மிக்க சோனகரிஸ்தான் உருவாக்கப்படவேண்டும்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة