கடந்த வாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பிரான்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இக் குழுவில் தேசிய மொழிகள் மற்றும் மரபுரிமைகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அடங்கியிருந்தார்.
வழமையாகவே வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் அமைச்சர்களுக்கு செலவுகளுக்காக அரசாங்கத்தினால் ஒரு தொகைப் பணம் வழங்குவது வழக்கமாகும். அதற்கமைய பிரான்சுக்குச் சென்ற அமைச்சர்களுக்கும் தலா 3600 அமெரிக்க டொலர் வீதம் பணம் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆச்சரியம் என்னவென்றால் குறித்த பயணம் முடிவடைந்து நாடு திரும்பிய பின்னர் அமைச்சர் வாசுதேவ நாணக்காரவோ 3100 டொலர் பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு திருப்பிக் கொடுத்திருக்கிறார். அவருக்கு பிரான்சில் செலவானது வெறும் 500 டொலர்கள் மாத்திரம்தான்!
நம்முடைய முஸ்லிம் அமைச்சர்களும் எத்தனையோ பேர் எத்தனையோ நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்கிறார்கள்தான். எவராவது ஒருவர் ஒரு டொலராவது மீதமாகக் கொண்டு வந்ததாக, திருப்பிச் செலுத்தியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா?
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடமிருந்தாவது இவர்கள் பாடம் படித்துக் கொள்ளட்டும்!
No comments:
Post a Comment