Search This Blog

Jul 12, 2011

இஸ்லாமிய வாழ்வு நெறியுடன் முரண்படும் பாரம்பரிய கல்விக் கட்டமைப்பு !


-மஸிஹு தீன் இனாமுல்லாஹ்

பாரம்பரிய மேலைத்தேய கல்விக் கட்டமைப்பு இஸ்லாமிய  சமூக பொருளாதார வாழ்வுடனும் சில இயற்கை நியதிகளுடனும் முரண்படுவதாக தெரிகிறது, பதினேழு வயது முதல் சுமார் ஒரு தசாப்தகால துறை ரீதியிலான உயர்கல்வி முழுமையான மனித ஆளுமை,விழுமியங்கள்,பொருளாதார சவால்கள், பாலியல் நெறியாழ்கை, சமூகவியல் ஒழுங்கு என பல்வேறு பரிமாணங்களில் அதன் எதிர்மறையான தாக்கங்களை கொண்டுள்ளது..!
இயற்கை நியதிகளின் படி இரண்டாம் நிலைக் கல்வி நிறைவுறுகின்ற வயது சுமார் பதினாறு ஒருவர் வாழ்வின் ஆழ அகலங்களை புரிகின்ற இகடமைகளை இபொறுப்புகளை உணர்கின்ற, தலைமைத்துவ  பண்புகளை பெறுகின்ற , குறிப்பாக வாழ்வாதார முயற்சிகளுக்கு தன்னை தயார் செய்கின்ற ஒரு பருவத்தை அடைகிறார்.

இத்தகைய அம்சங்களோடு பகிரங்கமாக பெரிதும் பேசப் படாத ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு கண்டிப்பான நெறியாழ்கை   உட்படுத்தப் படுகின்ற "பாலியல் இருப்பு " இயற்கைக்கு முரணான சில நீண்ட கால உயர்கல்வி, குறிப்பாக நாடு கடந்த தனிமைப் படுத்தப் பட்ட கல்வி முறைமைகள், பால் ரீதியாக வேறு படுத்தப் பட்ட நீண்ட கால விடுதிக் கல்விக் கட்டமைப்புகள் என்பன இஸ்லாமிய மற்றும் இயற்கை விழுமியங்களுடன் முரண்படுகின்ற பல அம்சங்களை கொண்டுள்ளமை உளவியல், சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆராயப் பட வேண்டும்.

மட்டுப் படுத்தப் பட்ட பாட சாலைக் கல்வி முறை கூட மனிதனின் ஆக்கத்திரன்களை  ஆரம்பப் பள்ளி, முதன் நிலைக் கல்வி எனவும் பகுதி நேர வகுப்புக்கள் எனவும் பெரிதும் மட்டுப் படுத்தி  வெறும் தகவல் சேர்கின்ற யந்திரங்களை , மனித,சமூக , கலை,கலாச்சார மற்றும் சன்மார்க்க விழுமியங்களிலிருந்து தூரமாக்குவதாகவே தெரிகின்றது. வாழ்வியல் போராட்டங்களில் துணிவுடன் ஈடுபடுகின்ற குடும்ப சமூக பொறுப்புகளை சுமக்கின்ற, சவால்களுக்கு ஈடு கொடுக்கின்ற அடிப்படை வாழ்வியல் பண்புகளை உரிய வயதில் மாணவர்களுக்கு பெற முடியாமல் போய் விடுகிறது.

குறிப்பாக இந்த நாட்டில் தமது சொந்த, குடும்ப , பொருளாதார, சமூக வாழ்வியலுக்கு பெரிதும் உதவாத கலைத்துறைக்கு ஐம்பது வீதத்திற்கு மேலான மாணவர்கள் தேசிய அளவிலும் என்பது வீதத்திற்கு மேலானவர்கள் முஸ்லிம் சமூகத்திலிருந்தும் செல்கிறார்கள், இந்த உதவாக்கரை கல்வி முறைமையை இஸ்லாமிய நிறுவனங்களும் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பது ஒரு உளவியல் கோளாறாகவே தற்போதைய சூழ்நிலையில் பார்க்கப் பட வேண்டும்.

இந்த நாட்டில் குறிப்பாக சுமார் ஐம்பது வீதமான மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிவிடுகிறார்கள், அவர்கள் வாழ்வில் நாம் உதவாக்கறைகள், இனி பணிப் பெண்களாகவும், கூலித் தொழிலாளி களாகவும் மத்திய கிழக்கு சென்று அடிமை வாழ்வு வாழ வேண்டும் என்ற மன நிலை தோற்றுவிக்கப் படுகிறது. இந்த உதவாக்கரை கல்விமுறை பாரிய  உளநிலை கோளாறுகளை நம்பிக்கை இழப்புகளை இளம் சந்ததிகள் மத்தியில்  ஏற்படுத்துகிறது....!

இலங்கை அரசாங்கத்தை பொறுத்த வரையில் தற்போது பாரிய கல்விச் சீர்திருத்தங்கள் முன் மொழியப்பட்டும், துரிதமாக அமுல் படுத்தப் பட்டும் வருகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் தமது மத கலாச்சார விழுமியங்களை தக்க வைத்துக் கொள்கின்ற வகையில் எமது தனித்துவ கல்விக் கோட்பாடுகளை நாம் மிகவும் கவனமாக வகுத்துக் கொள்ளல் வேண்டும்.

ஆரம்பக் கல்வி, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்வி என்று வரும் பொழுது முஸ்லிம் பாட சாலைகளில் மாணவர்களுக்கான தெளிவான வழிகாட்டல்    வழங்கப் படுத்தல் வேண்டும். இலங்கையை பொறுத்தவரை இலவசக் கல்வி முறையில் எமது  அபிலாஷைகளோடு முரண்படாத தெரிவுகளை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன.

இலங்கையில் சுமார் 15 பல்கலைக் கழகங்கள், 18 கல்விக் கல்லூரிகள், 9 தொழில் நுட்பவியல்  கல்லூரிகள், 29 தொழில் நுட்பக் கல்லூரிகள், 116  தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் 10 இணைய கல்வி மையங்கள் இருக்கின்றன....கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குப் பின்னர், உயர் தரமென்றும் அதன் பிறகு பல் கலைக்கழக மென்றும் அதிலும் குறிப்பாக விஞ்ஞானம், பொறியியல், வர்த்தகம் (பெரும்பாலும்) கலைத்துறை  என்றும் தான் பெரும் பாலான முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமல்லாது பாட சாலை அதிபர்களும் ஆசிரியர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நாட்டில் சுமார் 850 முஸ்லிம்  பாடசாலைகள் இருக்கின்றன. இது நாம் பெற்றுள்ள மிகப் பெரிய வளமாகும்.ஆனால் மூன்றாம் உலக நாடொன்றில் வாழும் நாம் எதிர்பார்கின்ற சகல விதமான வளங்களும் வசதிகளும் நிறைவாக கிடைக்கும் என எதிர் பார்க்க முடியாது. எனவே இருக்கின்ற வளங்களுடனும்  சலுகைகளுடனும் கேட்டுப் பெற முடியுமான உரிமைகளுடனும் முஸ்லிம் பாடசாலை களினது தர விருத்தி குறித்த ஒரு சமூக கூட்டுப் பொறுப்பு குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

மட்டுப் படுத்தப் பட்டுள்ள தொழில், பதவி சார் சந்தர்பங்களை தகுதி வாய்ந்தவர்களை இனங் கண்டு வழங்குவதற்காகவே கல்வி மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன. ஆனால் தாம்  வாழ்வில் எத்தகைய துறைகளை தொழில் சார் சந்தர்ப்பங்களை இலக்காக வைத்து தகமைச் சான்றிதல்களை சேகரிக்கிறோம் என்பதனை தீர்மானித்துக் கொள்ளும் வழி காட்டல்கள் பெரும்பாலும், இரண்டாம் நிலைக் கல்வியின் போது நமது மாணவர்களுக்கு கிடைப் பதில்லை.

ஒரு தனி நபரின் ,குடும்பத்தின்,சமூகத்தின்,தேசத்தின் சமூக பொருளாதார,கல்வி,கலாச்சார, அரசியல் நிர்வாக மேம்பாடு, தன்னிறைவு, அபிவிருத்தி என்பன ஒரு நாட்டின் கல்விக் கொள்கையின் பிரதான இலக்குகளாக இருக்க வேண்டும். அவ்வாறு பெறப் படுகின்ற கல்வி சிறந்த ஆன்மீக, அறிவியல் அடித்தளத்தினை  கொண்டிருக்கின்ற போதுஇ சிறந்த பண்பாட்டுஇமானுட விழுமியங்களைக் கொண்ட தலை முறைகள் உருவாக்கப,படுகின்றன.

துரதிஷ்ட வசமாக மனித வாழ்வின் மூன்று பிரதான அம்சங்களான "உடல்"  "அறிவு"  "ஆன்மா"  என்பவற்றுள் உடலியல் தேவைகளான வாழ்வாதார இலக்குகள் சரியாக இனம் காணப் படாது "அறிவு" மற்றும் "ஆன்மீக" இலக்குகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கின்ற கல்விக் கோட்பாடுகள் சரியான இலக்குகளை இ அடைவுகளை எய்த தவறி விடுகின்றன. இஸ்லாமிய கோட்பாட்டின் படி "வறுமை இறை நிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் " : அதாவது ஆன்மீக, அறிவு, பண்பாட்டு வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என தெளிவாக வரை முறை கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة