Search This Blog

Jul 14, 2011

நேர்காணல்:காதல், டீன்ஏஜ், பருவம்


(ஏ.பி.எம். இத்ரீஸ் நளீமி அவர்கள் இலங்கை வானொலிக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி...)
மேற்கு நாடுகளில் பரவியிருக்கும் Boy Friend, Girl Friend கலாச்சாரம் நம்நாட்டிலும் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. குறிப்பாக நம்மத்தியில் தாய் மொழி அல்லாத சிங்களத்தையோ ஆங்கிலத்தையோ கல்வி மொழியாகக் கொள்ளும் மாணவ மாணவியரிடையே இது பரவியும் வருகிறது. உலக காதலர் தினத்தை இலங்கையில் கொண்டாடக்கூடிய நிலையை காணக்கூடியதாகவுள்ளது. கட்டிளமைப் (டீனேஜ்) பருவத்தில் ஏற்படுகின்ற இவ்வெதிர்ப்பால் கவர்ச்சி அல்லது காதல் பற்றி என்ன கருதுகிறீர்கள் ?

காதல் ஒரு மனப்பசி மாத்திரமே. கட்டிளமைப்பருவத்தில் ஏற்படும் இவ்வுணர்வு இளைஞர்களை பல சீர்கேட்டுக்கு இட்டுச்செல்வதோடு சமூகப்பிரச்சினைகளையும் தோற்றுவிக்கிறது.


பாலியல் பசியுள்ளவனின் நிறைவு அதை அடைவதிலேயே தங்கியுள்ளது. அவன் பெண்ணைப் பார்ப்பதாலும் கதைப்பதாலும் அது நிறைவேறுமா! உணவைப் பார்ப்பதாலும் அதை முகர்வதாலும் பசி அடங்கிவிடுமா! அதுபோலத்தான் காதலும். காதலியின் அழகை கண்களால் பருகுவதாலோ அவள் குரலை காதால் கேட்பதாலோ அவன் பசி அடங்காது. அது பூட்டைத் திறப்பதிலேயே அடங்கும். அவ்வாறே காதலன் காதலியின் ஆடைக்காக காதலிக்க முடியாது. ஆடைக்காக காதலித்தால் அது நீங்கியதும் காதல் போய்விடும்.

உண்மையில் காதல் என்பது இனக்கவர்ச்சியையே குறிக்கின்றது. அது உடல் இச்சை சார்ந்தது. இச்சை உடலைவிட்டு நீங்கும் போதே காதலும் நீங்கும். மஜ்னூன் லைலாவை முடித்திருந்தால் அவள் ஏனைய பெண்களைப் போல் மாறியிருப்பாள். பசியோடு இருப்பவனின் வயிறு நிரம்பினால் பசி போய்விடுவதைப் போலவே இதுவும் ஒரு தற்காலிக உறவு. உடலுறவின் பின் முடிந்துவிடும். இதனால்தான் இஸ்லாம் திருமணத்தை ஊக்குவிக்கிறது. திருமணம் இவ்வுறவை பலப்படுத்தும் நல்வழிமுறையாகும்.

வெறும் காதலால் மாத்திரம் திருமணத்தை கட்டியெழுப்ப முடியாது. அது ஓடும் நீரில் வீடு கட்டுவது போன்றதாகும். திருமணம் என்பது கருத்தொருமை, உணர்வு பொருத்தப்பாட்டிலேயே தங்கியுள்ளது. பொருளாதார, சமூக தகுதியும் அதற்குத் தேவையாகும்.

கல்வி, பொருளாதாரம் போன்ற காரணங்களால் திருமணம் பிற்போடப்படுவதும் இதனால் சமூகத்தில் முது கன்னியர் தொகை அதிகரிப்பதும் அல்லது அதிக வயது வித்தியாசத்தில் திருமணங்கள் நடைபெறுவதையும் எவ்வாறு காண்கிறீர்கள்? திருமணத்துக்குப் பொறுத்தமான வயது என்ன என்பதை எவ்வாறு வரையறுப்பது?


திருமணத்துக்குப் பொருத்தமான வயது எது என அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது. சிலர் 30 என்கிறார்கள். வேறுசிலர் 40 என்கிறார்கள். அல்லாஹ் மனிதனையும் இப்பிரபஞ்சத்தையும் படைத்துள்ள யதார்த்தத்தின் அடிப்படையில் சிந்திக்கும் போதே இக்கேள்விக்கான விடையை கண்டடைய முடியும்.

இறைவன் மனிதனுக்கு இரண்டு அடிப்படை உணர்வுகளை கொடுத்துள்ளான். ஒன்று தன்னைப் பாதுகாக்கும் உணர்வு. இவ்வுணர்வே அவனை சாப்பிடத் தூண்டுகிறது. மற்றது அவன் இனத்தைப் பாதுகாக்கும் உணர்வு. அதுவே அவனை இனவிருத்தி செய்யத்தூண்டுகிறது. இதில் முன்னையது நிறைவேறினால்தான் பின்னையது நிறைவேறும். இப்போது மனிதன் எப்போது சாப்பிட வேண்டும் என்ற கேள்வியை நாம் எழுப்பினால் அவன் எப்போது மனம் முடிக்க வேண்டும் என்பதற்கான பதிலைக் கண்டுபிடிக்கலாம். எப்போது சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நீங்கள் பசிவரும்போது என்று கூறுவீர்கள். எனவே இச்சை ஏற்படும் போது மனிதன் திருமணம் முடிக்க வேண்டும் என்று நாம் கூறுவோம். அதாவது மனிதன் கட்டிளமைப் பருவத்தை அடைகின்ற போது அதாவது 18 வயதில் திருமணம் முடிப்பதை அனுமதிக்க முடியும். இப்பருவத்தில் திருமணத்திற்குத் தேவையான வசதிகள் இல்லாத பட்சத்தில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்கக்கூடும். அதற்கு உணவில்லாதவன் பசியோடு இருக்கும் நிலையில் என்ன செய்வான் என்றால் உணவு கிடைக்கும் வரை காத்திருப்பான் என்று கூறலாம். பசியுள்ளவன் காத்திருக்க முடியாவிட்டால் அவன் என்ன செய்வான்? அதே நேரம் அவனுக்கு முன்னால் உணவு இருந்தால் என்ன செய்வான்? எவ்வாறு நடந்து கொள்வான்? அதை களவில் உண்பான் அல்லது கொள்ளையடிப்பான் என்றால் இந்நேரத்தில் நாம் என்ன செய்யமுடியும்?

சமூகத்தில் பசியோடு இருப்பவர்கள் களவெடுக்காமல் அல்லது கொள்ளையடிக்காமல் இருப்பதற்காக வேண்டி உணவைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகளை உருவாக்கிக் கொடுத்தல் வேண்டும். அவனை சாப்பிட வேண்டாம் என்று தடுப்பது நிர்ப்பந்தத்தினால் ஏற்படும் ஒரு தடுப்பேயாகும். அவன் திருடுவான் எனப்பயந்தால் மக்கள் தங்கள் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும். அதேநேரம் பசியோடு இருப்பவனுக்கு ஒரு உரிமையும் இருக்கிறது. அவனுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை சமூகமே பெற்றுக் கொடுக்க வேண்டும்.

மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது அவனுக்கு அது உரிமையற்றது. ஏனெனில் தனக்கு உரித்தில்லாததை அவன் திருடிப் பெறுகின்றான். திருமண விடயத்திலும் இக்கருத்தையே நாம் கூற முடியும். திருமணத்திற்குப் பொருத்தமான வயது டீனேஜ் பருவமே. இப்பருவத்தில் அவனோஇ அவளோ பாடசாலையில் கற்கின்றனர். அவரிகளின் கையில் பணமோ பொருளோ கிடையாது. ஏறத்தாழ 25 வயதுவரை கல்விக்காக தம்காலத்தை செலவிடுகின்றனர். அதே நேரம் நாம் உருவாக்கிக் கொண்ட சமூக சம்பிரதாய சடங்குகள் இளம் பருவத்தினரின் பால்ய தேவையை பூர்த்தி செய்வதற்கு அனுமதிப்பதாய் இல்லை. இந்நேரத்தில் நாம் என்ன செய்யலாம்?! அவனோஇ அவளோ என்ன செய்வார்கள்?! பாலியல் உணர்வு கடுமையாக உந்தப்படும் இப்பருவத்தில் திருமணம் இல்லாவிட்டால் எப்படித் தீர்ப்பது?!

அல்லாஹ் பாலியல் உணர்வை பற்றும் நெருப்பாகவே படைத்துள்ளான். திருமணம் இன்றேல் அந்நெருப்பு உடலைஇ உள்ளத்தைஇ ஏன் சமூகத்தைக் கூட எரித்துவிடும். இங்கேதான் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. எனவே இதை ஆராய வேண்டிய தேவை எமக்கு ஏற்படுகிறது. திருமணத்திற்கு பொருத்தமான வயது 30 – 40 என்று கூறுவது முட்டாள்தனமானதாகும். அது இப்பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை. கொலைத்தண்டனை கொடுப்பது நீதிபதிக்கு லேசானதொன்றே. ஆனால் அத்தண்டனைக்கு உட்படுபவனின் நிலைதான் பெரும் சோகமானது. இங்கு தண்டிக்கப்படுவது யார்? இளைஞனும் யுவதியும் தான்.

15 வயதில் ஏற்படும் பாலியல் உணர்வை 30 வயதில் கொண்டுபோய்த் தீர்ப்பது நியாயம்தானா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த வயதில் திருமணம் செய்வதை தடுக்கும் சமூகம் இவ்வுணர்வை கொழுந்துவிட்டெரியச் செய்யும் வழிமுறைகளைத் தூண்டியும் விட்டுள்ளது. நிர்வாணப்படங்களும்இ ஆண் பெண் கலப்பு விளம்பரங்களும் தொடர்களும் அப்பாவி இளைஞனையும் யுவதியையும் என்ன செய்யும் என்பதை சமூகம் உணர்தல் வேண்டும். பல்கலைக்கழகத்திற்குச் சென்றாலும் அங்கும் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வகையிலேயே கல்விமுறையும் அமைந்துள்ளது. கற்கை முடியும்வரை இவர்கள் இவ்வுணர்வைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு? படிஇ படி என்று கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? இதைவிட 15 ஆண்டுகள் இளைஞர்களை சிறையில் அடைத்துவைப்பது மேலானது என்று தோன்றுகிறது.

இதற்கு என்னசெய்யலாம் என்றால்இ யதார்த்த வாழ்வுக்குஇ மனித இயல்புக்குஇ இயற்கையின் தீர்ப்புக்கு நாம் திரும்பிச் செல்வதே பொருத்தமான தீர்வாகும். இயற்கையை எதிர்த்துப் போரிடுவது முடியாத காரியம். அவ்வாறு போரிட்டால் ஈற்றில் இயற்கையே வெற்றிபெரும் என்பது நாம் கண்டுவரும் உண்மையாகும். எமது மூதாதையர்கள் 18 வயதில் திருமணம் முடிக்கவில்லையா? அவர்கள் தம்பிள்ளைகளுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் கொடுக்கவில்லையா?

இளமைத் திருமணம் ஏன்? என்பதற்கு கலாநிதி அப்துல் முத்தலிப் பின் அஹ்மத் அல்ஸஃ பின்வருமாறு விளக்குகிறார்.

“மனித வாழ்வின் ஒவ்வொரு பருவத்திற்கும் அதற்குப் பொருத்தமான பணிகள் உண்டு. திருமணத்திற்கும் ஒரு பொருத்தமான பருவம் உண்டு. அது 18 வயதுக்கும் 21 வயதிற்கும் இடைப்பட்ட பருவமாகும். இது கட்டிளமைப்பருவம் முடிவடைகின்ற காலப்பிரிவாகும். சமூகத்தை அடிப்படையாக வைத்தும் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டும் சில காரணங்களுக்காக மேலே குறிப்பிட்ட வயதில் சில வித்தியாசங்கள் கூடிக்குறைய முடியும். இதனை ஆரோக்கிய கண்ணோட்டத்தில் நாம் நோக்கினாலும் மனித இயல்புக்கு (பித்ரா) ஏற்ப வாழும்போதுதான் ஆரோக்கியமாக வாழமுடியும்.”

இஸ்லாத்தில் திருமணத்துக்கான வயது என்ன? அதுபற்றி இஸ்லாத்தின் நிலைப்பாட்டை சற்று விளக்க முடியுமா?


திருமணம் ஒரு ஒப்பந்தம் என்ற வகையில் ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்ற இருவரும் பூரண தகுதி கொண்டவராக இருத்தல் வேண்டும். தகுதியற்றவராக இருப்பின் அவ்வுடன்படிக்கை செல்லுபடியாகாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. உதாரணமாக ஒப்பந்தத்தில் ஈடுபடுபவர் புத்திசுவாதீனம் அற்றவராகஇ நன்மை தீமைகளில் தெளிவற்றவராக அதனைப் பகுத்தறியக்கூடிய வயதை அடையாதவராக இருத்தல் என்பதைக் கூறமுடியும்.

இஸ்லாமிய ஷரிஆவைப் பொறுத்தவரையில் திருமணம் முடிப்பதற்கான வயது இன்னதுதான் என்று வரையறை செய்யப்படவில்லை. மாறாக திருமணம் நிலையானதாகவும் அதன் நோக்கம் நிறைவேற்றத் தக்கதாகவும் குறித்த ஒப்பந்தம் இருக்க வேண்டியது அவசியம். பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துஇ பருவ வயதை அடைந்த ஒரு ஆண் சுயமாகத் திருமணம் முடிக்க முடியும் என்றும் அவ்வாறே ஒரு பெண் பொறுப்பாளரினால் திருமணம் முடித்துக் கொடுக்கப்படுவாள் என்பதும் ஏகோபித்த முடிவாகும்.

நன்மை தீமைகளைப் பிரித்தறியும் வயதை அடைந்த பருவ வயதை அடையாத சிறுமிகளைப் பொறுப்பாளர் திருமணம் செய்துவைக்க முடியும் என்பது நான்கு மத்ஹபுகளினதும் இன்னும் பல சட்டறிஞர்களினதும் கருத்தாகும். இதற்கு நபி (ஸல்) காலத்தில் நடந்த சில சம்பவங்களை அதாரமாகக் காட்டுகின்றனர். உதாரணமாக ஆயிஷா (றழி) யை பருவ வயதை அடைய முன்னர் அபூபக்கர் (றழி) நபிகளாருக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

உமாமா பின்து ஹம்ஸா (றழி) பருவமடைய முன்னர் நபிகளார் மனமுடித்துவைத்தார். பருவமடைந்ததும் விருப்பமில்லாவிட்டால் ஒப்பந்தத்தினை முறித்துக் கொள்ளும் உரிமையையும் கொடுத்தார்கள்.

பருவமடையாத பெண்களை தந்தையோஇ பாட்டனோ மட்டுமே வலியாக நின்று முடித்துவைக்க முடியும் என்பதே பெரும்பாலான சட்ட அறிஞர்களின் கருத்து. ஷாபி மத்ஹபில் தந்தை அல்லது பாட்டன் பருவமடைந்த பின் மணமுடித்து வைப்பதயே சிறந்தது எனக்கருதுகின்றது. இமாம் அபூ ஹனீபா அவ்ஸாபி போன்றோர் அனைத்து வலிகாரர்களுக்கும் பருவமடையாத பெண்ணை திருமணம் முடித்து வைக்க முடியும் எனக் கருதுகின்றனர். எனினும் அவள் பருவமடைந்ததும் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமையும் அவளுக்கிருக்கிறது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இதற்கு அவர்கள் ஏற்கனவே உமாமா பற்றி வந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

சவூதி அரேபியாஇ சூடான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் தனியார் சட்டங்களில் பருவமடைந்தவர்களின் திருமணங்களை அனுமதிப்பதைப் போல் பருவமடையாதவர்களின் திருமணங்களையும் வலிகாரரின் அனுமதியுடன் நிறைவேற்றுவர் என்று பதியப்பட்டுள்ளது.

ஆனால் இப்னு ஷிப்ருமாஇ உஸ்மான் அல்பத்திஇ அபூபக்கர் அல் அஸ்ம் போன்றோர் இக்கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவர்கள் இத்திருமண ஒப்பந்தம் செல்லுபடியற்றது என்று கருதுகின்றனர். “அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டால் வாழ்கைக்கு ஆதாரமாக கொடுத்துள்ள செல்வத்தை அவர்களின் கையில் ஒப்படைக்க வேண்டாம். ஆனால்இ அவர்களுக்கு உணவுஇ உடை வழங்குவதோடு நல்ல முறையில் பேசுங்கள்” என்ற அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர். சிரியாவின் தனியார் சட்டத்திலும் இக்கருத்தை ஆதரித்துள்ளது.

இக்கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. பால்ய காலத்தில் நன்மை தீமை பற்றிய தெளிவு இருக்காது. பருவமடைந்ததும் இத்திருமணம் நிலைக்காது.

2. பருவ வயதை வரையறுப்பது எப்படி? இது உடற்கூற்றோடு சம்பந்தப்பட்ட விடயம். போஷிப்புஇ பண்பாடு தரத்துக்கேற்ப வேறுபடும். சூழலும் பருவ வயதைத் தீர்மானிக்கின்றது. இமாம் அபூ ஹனீபா இதனை வெளிக்காட்டும் ஆதாரம் இல்லாவிட்டாலும் 18 வயது ஆணுக்கும் பெண்ணுக்கு 17 வயதென்றும் நிர்ணயித்துள்ளார். வேறு சிலர் ஆண் 16 என்றும் பெண் 14 வயது என்றும் கருதுகின்றனர்.

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் வயது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது? அதுபோல் பிற முஸ்லிம் நாடுகளின் தனியார் சட்டங்களில் இது பற்றி என்ன கூறப்படுகின்றது?

இலங்கையில் முஸ்லிமல்லாத ஆணோஇ பெண்ணோ 18 வயதை அடைந்திருத்தல் வேண்டும். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் வயது வரையறை இல்லை. மாறாக 23வது விதியின் படி 12 வயதை அடையாத சிறுமியின் திருமணம் காழி அனுமதித்தால் ஏற்றுக் கொள்ளலாம்.

எனவே இலங்கையில் பருவமடைந்த ஆண் திருமணப் பாதுகாவலர் இன்றி திருமணம் செய்யலாம். பருவம் உடல் ரீதியான தயார்நிலை. இதனை இன்ன வயதுதான் என்று வரையறுக்க முடியாது. உடலமைப்பைப் பொறுத்து ஆணுக்கு ஆண் வேறுபடும்.

இலங்கை சீதோஷ்னப்படி ஆண் 12-15 பருவமடைகிறான். 1995 வரை இலங்கைப் பொதுச்சட்டத்தில் ஆணின் வயது 21 ஆகும். பின்னர் 18 வயதாகக் குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியார் சட்டத்தில் ஆண் 18 பெண் 16 ஆகும். சிங்கப்பூர்இ மலேசியா போன்ற நாடுகளில் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆணும் பெண்ணும் முடிக்க முடியாது. காழி அனுமதித்தாலும் முடியாது. முஸ்லிம் சட்ட ஆய்வுக்கழகம்இ முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி போன்ற அமைப்புக்கள் 16 வயது ஆணுக்கும் 14 வயது பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.
நன்றி: kalkudahmuslims.com

No comments:

Post a Comment

المشاركات الشائعة