Search This Blog

Jul 9, 2011

துருக்கி லிபிய போராளிகள் அமைப்பை அங்கீகரித்துள்ளது

M.ரிஸ்னி முஹம்மட்
 துருக்கி லிபியாவின் கடாபிக்கு எதிராக போராடிவரும் போராளிகள் அமைப்பான தேசிய இடைக்கால கவுன்சிலை அங்கீகரித்துள்ளதுடன் லிபிய தலைநகர் திரிபோலியில் அமைந்திருந்த துருக்கி தூதுவர் அலுவலகத்தை மூடியுள்ளது. அதேவேளை துருக்கி அரபு -துருக்கி வங்கியில் உள்ள லிபியாவின் சொத்துகளையும் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது .
துருக்கி லிபிய சர்வாதிகாரி காடாபியுடன் மிகவும் நெருக்கமான வர்த்தக உறைவை கொடிருந்த நாடு என்பதும் லிபியா மீதான மேற்குலகின் இராணுவ நடவடிக்கைகளை வரவேற்காத நாடாகவும் போச்சின் ஊடாக லிபியாவுக்கான தீர்வு காணப்படவேண்டும் என்றும் கோரி வந்தமை குறிபிடத்தக்கது. இந்த நிலையில் சர்வதேச புகழ் பெற்ற அறிஞரான டாக்டர் யூசுப் அல் கர்ழாவி உட்பட பல இஸ்லாமிய அறிஞர்கள் துருக்கி தனது லிபியா தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி லிபிய மக்களின் போராட்டத்துக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தமை குறிபிடத்தக்கது.
துருக்கி லிபிய போராளிகளின் கூட்டு அமைப்பான தேசிய இடைக்கால கவுன்சில்-The National Transitional Council- என்ற அமைப்பு துருக்கிய மக்களின் உண்மையான மற்றும் சட்டரீதியான பிரதிநிதி என்று அந்த அமைப்பை அங்கீகரித்துள்ளதுடன் மொத்தமாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. துருக்கி லிபிய போராளிகளை அங்கீகரித்த 17 நாடு என்பது குறிபிடத்தக்கது .
லிபியாவின் கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ள துருக்கி வெளிநாட்டு அமைச்சர் அங்கு உரையாற்றும்போது கடாபி அமைதியான முறையில் வெளியேறவேண்டும். லிபிய மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படவேண்டும். லிபிய இரண்டாக பிரிக்கப்படக்கூடது. பேச்சுக்களின் ஊடாக அமைதியான முறையில் கடாபி அதிகாரத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் -Freedom and Justice Party (FJP)- கட்சியும், துருக்கி பிரதமர் அர்பகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான-The Justice and Development Party (AKP)- கட்சிக்குமிடையில் மிகவும் நெருக்கமான உறவு வலுவடைந்து வருவதாக அரசியல் ஆய்வளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் அமெரிக்கா எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புடன் பேசபோவதாக அறிவித்துள்ளது.

-lankamuslim-

No comments:

Post a Comment

المشاركات الشائعة