Search This Blog

Jul 4, 2011

எகிப்து இஹ்வான்களின் முதல் பெண்கள் மாநாடு




எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் முதல் பெண்கள் மாநாடு இடம்பெற்றுள்ளது இங்கு உரையாற்றிய அதன் தலைவர் டாக்டர் முஹமத் படேய் – Dr. Mohamed Badei – கடந்த , ஜனவரி 25 ஆம் புரட்சியின் பெண்கள் பங்கு பற்றியமை தொடர்பில் பாராட்டி உரையாற்றியுள்ளார்
எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் நடத்தியுள்ள முதல் பெண்கள் மாநாடு இது என்பது குறிபிடதக்கது அதில் பெரும் தொகையான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். அதன் முதல் பெண்கள் மாநாட்டின் துவக்க உரையாற்றிய டாக்டர் முஹமத் படேய் இஹ்வானுல் முஸ்லிமீன் எப்போதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே சமத்துவம் அடிப்படையாக உரிமைகள் முழுமையான அவர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது என்று உரையாற்றியுள்ளார்.
பெண்கள் வேறுபட்ட சமூக பாத்திரங்களை கொண்டுள்ளபோதும் அதற்கு அமைவாக முழுமையான சமத்துவ உரிமைகளை அவர்கள் கொண்டுள்ளனர். பெண்களின் உரிமைகளை பலப்படுத்த வேண்டும் அதன் மூலம் அவர்கள் பொது துறையில் அதிக பொறுப்புகளை பெற முடியும் குறிப்பாக சமூகத்தின் அடிப்படை பெருமானங்களுடன் மோதாத வகையில் உரிமைகளை பலப்படுத்த வேண்டும். எகிப்தின் புரட்சியின் பின்னரான காலத்தில் இது மிகவும் அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மகளிர் நடவடிக்கையாளர்கள் உட்பட எனைய பெண்கள் எகிப்து சமூக மற்றும் அரசியல் போராட்டத்தின் முன்னணியில் இருந்தனர் என்றும் நாட்டில் ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பை ஸ்தாபிக்க பெண்கள் தொடராக செயலாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாம் பெண்களுக்கு நீதி கொண்டுவந்தது என்று குறிப்பிட்டு சிவில் அரசாங்கத்தை இஸ்தாபிக்க தொடர்ந்து பெண்கள் பங்களிப்புகளை செய்து வரவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
-Our ummah_

No comments:

Post a Comment

المشاركات الشائعة