பிறை தொடர்பான முதலாவது தேசிய மாநாடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில்கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இந்த முதலாவது தேசிய பிறை மாநாடு உள்நாட்டில் பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிறை பார்த்தல் வெற்றுக் கண்ணால் பார்ப்பதை அடிப்படையாகக் கொள்ளுதல் , ஒரு நாளின் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதிசெய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை தென்படாத நாளென ஏற்றுக்கொள்ளல்,வானியல் துறையில் புலமைபெற்ற ஒரு முஸ்லிம் அறிஞர் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவிற்கு துணையாகச் செயற்படுதல், பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது சாத்தியமற்றது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்துக்கு கட்டுப்படல் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கோ பெருநாள் கொண்டாடுவதற்கோ பிறரைத் தூண்டவோ பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.என்றும் தீர் மானிக்கபட்டுள்ளது.
இத் தீர்மானங்கள் குறித்து மக்களுக்கு தெளிவு படுத்தும் கருத்தரங்குகளை நாடளாவிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் ஊடாக நடாத்தவும் இம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் அனைத்து மஸ்ஜித்களிலும் நாளாந்தம் மஃரிப்புத் தொழுகையின் பின்னர் பிறைத் திகதியை அறிவிப்புச் செய்தல், மாதாந்தம் 29ஆம் நாள் மாலை பிறை பார்ப்பதற்கான ஏற்பாட்டினை நாட்டின் அனைத்து மஸ்ஜித்களிலும் மேற்கொள்ளுதல், ஒவ்வொரு ஜூம்மா மஸ்ஜித்திலும் மூன்று பேர் விகிதம் நாடளாவிய ரீதியில் பிறைக்குழு பிரதிநிதிகளை நியமித்தல், பிறை மாதத்துடன் தொடர்பான இபாதத்துக்கள் நிறைவேற்றப்படுவது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் கலண்டர் திகதி அடிப்படையில் அமைதல் வேண்டும் என்றும் தீர்மானிக்க பட்டுள்ளது.
கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் அஷ்ஷெய்க் ஏ. எல். எம். றிழா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, அதன் உபதலைவரும் ஜாமியா நழிமியா பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். எம். அஹ்மத் முபாரக், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிராந்திய கிளைகளின் தலைவர்கள் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் டாக்டர் எஸ்.ஆகில் அஹ்மத், அஷ்ஷெய்க் ஏ. எம். அப்துல்லாஹ் மக்கி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி உட்பட பலர் கலந்துகொண்டனர். இது தவிர நாடளாவிய ரீதியிலிருந்து உலமாக்கள், மார்க்க அறிஞர்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்துள்ளன
No comments:
Post a Comment