பாகிஸ்தானுக்கு அமெரிக்க வழங்கி வரும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஒபாமா நிர்வாகத்திற்கும் பாகிஸ்தானுக்குமான உறவுகளில் ஏற்பட்டுவரும் விரிசல்களை காட்டுவதாக பார்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் உஸாமா இருப்பிடம் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய இரகசிய தாக்குதல், அமெரிக்கப் படையினரின் இரகசிய ட்ரோன் விமான தாக்குதல்கள், அமெரிக்கா பாகிஸ்தான் தேசத்தில் அளவு கடந்த சுதந்திரத்துடன், அடாவடித்தனமாக பாகிஸ்தானின் இறைமையை மீறி செயல்படுகின்றமை போன்றவை பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரிதும் தாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் யுத்தத்தை பாகிஸ்தான் நடாத்த தேவை இல்லை என்ற குரல் பலமாக பாகிஸ்தானில் கேட்க தொடங்கியுள்ளது.
அதேவளை பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விடயத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்கா கருதுகின்றது. அமெரிக்காவின் பாகிஸ்தானுடனான நெருங்கிய உறவு சாதித்த விடயங்கள் என்ன என்ற கேள்வி பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள சில அமெரிக்க இராணுவ தளபதிகள் , மற்றும் அமெரிக்க காங்கிரஸின் சில முக்கிய புள்ளிகள் மத்தியில் எழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.
அமெரிக்கா, பயங்கரவாதத்துக்கு எதிரான அதன் யுத்தத்தை சற்றே குறைத்துக் கொள்ளவும் ஆப்கானுக்கு பாகிஸ்தானுடாகச் செல்கின்ற முக்கிய விநியோகப் பாதைகள் இனி தேவைப்படாது இதனால் அதன் இராணுவ உதவிகளை நிறுத்த தீர்மைதுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது
அதேவேளை , பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வளர்ந்து வருவதாகவும். மெரிக்கா நிறுத்த போகும் இராணுவ ரீதியான உதவியை, சீனாவுடனான உறவு ஈடுசெய்து விடுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
இந்த நிகழ்வுகள் பாகிஸ்தான் பொருளாதரத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் பிராந்திய அரசியல் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது. சீனா தெற்காசிய பிராந்தியத்தில் வேகமாக தனது செல்வாக்கை அதிகரித்து வருகின்றமையும், இந்தியா அதற்கு போட்டியாக இன்னும் பல யுத்திகளை கையாண்டு வருவதும் குறிபிடத்தகக்து.
-lankamuslim-
No comments:
Post a Comment