காஸ்ஸா:தன்னார்வத் தொண்டு ஊழியர்களுடன் காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையினால் அவதியுறும் மக்களுக்கு உதவியளிக்க நிவாரணப்பொருட்களுடன் புறப்பட்ட பிரெஞ்சு கப்பலை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது.
கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் வைத்து இந்த சிறிய கப்பலை இஸ்ரேலிய ராணுவம் சிறைபிடித்து அஷ்தோத் துறைமுகத்திற்கு கொண்டுசென்றதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இஸ்ரேலின் அடாவடி ராணுவ நடவடிக்கையில் கப்பலில் பயணித்த தன்னார்வ தொண்டர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் சம்பவித்தது குறித்து தகவல் இல்லை.
காஸ்ஸாவிற்கு நிவாரணப்பொருட்களுடன் வந்தால் கைதுச்செய்வோம் என ஏற்கனவே இஸ்ரேல் மிரட்டியிருந்தது. கப்பல் தற்போது இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அல்ஜஸீரா கூறுகிறது. ஆனால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து கப்பலை இஸ்ரேலிய ராணுவம் சிறைப்பிடித்ததாக காஸ்ஸா உதவிக்குழுவின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தன்னிடமிருக்கு பலத்தின் மொழியில் இஸ்ரேல் பேசுவதாக அமைப்பாளர்கள் அசோசியேட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளனர். ராணுவம் சிறைபிடித்ததையடுத்து கப்பலில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இஸ்ரேலின் நடவடிக்கையை காஸ்ஸாவில் ஹமாஸ் அரசு கண்டித்துள்ளது. ராணுவத்தின் கட்டளையை மீறியதால் கப்பலை சிறைபிடித்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
இரண்டாவது ஃப்ரீடம் ஃப்ளோட்டில்லா மிஷனில் 10 கப்பல்கள் புறப்பட்டன.இக்கப்பல்களை இஸ்ரேலின் மிரட்டலையடுத்து க்ரிஸ் நாடு தடுத்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் காஸ்ஸாவிற்கு புறப்பட்ட துருக்கி கப்பலை தாக்கிய இஸ்ரேல் ராணுவம் ஒன்பது தன்னார்வ தொண்டர்களை அநியாயமாக படுகொலைச் செய்தது.
No comments:
Post a Comment