தேசிய அடையாள அட்டைக்காக தொப்பி அணிந்த புகைப்படங்களைச் கொண்ட தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் எழுதுள்ள சர்ச்சை தொடர்பான நேற்று விசேட கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றுள்ளது. இதில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக முழுமையாக அறிய முடியவில்லை எனினும் இது தொடர்பாக இன்று தினகரன் பத்திரிகையில் ‘அடையாள அட்டை புகைப்பட சர்ச்சை: முஸ்லிம்களின் தனித்துவம் பாதிக்கப்படாத வகையில் தீர்வு’ என்ற தலைப்பில் வெளியான செய்தியை இங்கு பதிவு செய்கின்றோம்.
தேசிய அடையாள அட்டைக்காக தொப்பி, ஹிஜாப் மற்றும் முக்காடு அணிந்த புகைப்படங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை முஸ்லிம்களின் தனித்துவம் பாதிக்கப்படாத வகையில் தீர்த்து வைக்கப்படவிருக்கின்றது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி தெரிவித்தார்.
இச்சர்ச்சையைத் தீர்த்து வைக்கும் வகையிலான அறிவித்தல் விரைவில் விடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய அடையாள அட்டைக்காக, முஸ்லிம்கள் தொப்பி, ஹிஜாப் மற்றும் முக்காடு அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புக்கான மேலதிக செயலாளர், உளவுப் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளர், கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர், ஆட்பதிவுகள் திணைக்கள ஆணையாளர் நாயகம், குடிவரவு குடியகல்வு திணைக்களப் பிரதிக் கட்டுப்பாட்டாளர், மோட்டார் வாகனப் போக்குவரத்து மேலதிக ஆணையாளர், முஸ்லிம் சமய, கலாசார திணைக்களப் பணிப்பாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் ஆகியோர் பங்கு பற்றினர். இக்கூட்டத்தின் போது, முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், பெண்கள் ஹிஜாப் மற்றும் முக்காடு அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக வும் உலமா சபையின் உதவி செயலாளரும், முஸ்லிம் சமய, கலாசார திணைக்களப் பணிப்பாளரும் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதிக்காதவகையில் இச்சர்ச்சையை தீர்த்து வைப்பதென இக்கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.-
-Lankamuslim-
No comments:
Post a Comment