Search This Blog

Jul 5, 2011

ஐக்கிய நாடுகள் சபையுடன் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் சந்திப்பு

தகவல்: ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் ஐக்கிய நாடுகள் அதிகாரிகளை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் – ஜெனீவா நகரில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் கடந்த 21 வருடங்களுக்கு முன்னர் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகிய முஸ்லிம்கள் தொடர்பிலும், அவர்களின் தற்போதைய நிலவரம், மீள்குடியேற்றத்தில் காணப்படும் சிக்கல்கள், மீள்குடியேறிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், வாக்குரிமை விவகாரம், சுயதொழில்  மற்றும் அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பில் புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனம் சார்பில் எடுத்து விளக்கப்பட்டுள்ளது.
இவற்றை கவனமாக செவிமடுத்த ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இவ்விடயங்களில் தமது அவதானத்தை செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர். சம்மேளத்தின் சார்பில் அதன் இடைக்கால செயலாளர் மொஹமட் அன்ஸிர் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்களுடனும், உதவி நிறுவனங்களுடனும் சந்திப்பை மேற்கொள் உதவி செய்வதாகவும் இதன்போது ஐ.நா. அதிகாரிகள் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சுவிற்சர்லாந்தில் செயற்படும் பல்வேறு அரபுநாட்டு உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து யாழ்ப்பாண முஸ்லிம்களின் தேவைகள் குறித்து மிகவிரைவில் எடுத்துக்கூறவும் புலம்பெயர்ந்த இலங்கை வடக்கு முஸ்லிம் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

-Lankamuslim-

No comments:

Post a Comment

المشاركات الشائعة