M.ஷாமில் முஹம்மட்:
கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்று கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு இளம் அணுத்துறை விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 35 வயதான டாரிஷ் ரிஷாநஜாத் -Darioush Rezainejad- என்ற இளம் அணுவாயுத விஞ்ஞானி தெஹ்ரானில் கிழக்கு பகுதியில் தனது மகளை கல்லூரி ஒன்றிலிருந்து அழைத்து வர சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரின் மனைவியும் படுகாயமடைந்துள்ளார்.
ஈரான் அணு உற்பத்தி திட்டத்துடன் தொடர்பை கொண்டிருக்க கூடியவரான டாரிஷ் ரிஷாநஜாத் படுகொலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகள் தொடர்பு பட்டிருப்பதாக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் அமெரிக்கா, மற்றும் இஸ்ரேல் ஈரானின் அணு மேன்பாட்டு திட்டத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டு அணு விஞ்ஞானிகளை படுகொலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஈரானில் தொடராக அணுத்துறை விஞ்ஞானிகள் மர்மமான முறையில் தொடராக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில். கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி காலையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஈரானிய அணுசக்தித்துறை முக்கிய விஞ்ஞானி டாக்டர் மாஜித் ஸஹ்ரீரி படுகொலை செய்யப்பட்டார். அதேகால பகுதியில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மற்றுமொரு முக்கிய அணுத்துறை விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான கலாநிதி பரிதூன் அப்பாஸி படுகாயமடைந்தார். இவர்கள் இருவரின் கார்கள் மீதும் மோட்டார் சைக்கிளில் அருகில் வந்த நபர்களினால் குண்டுகள் பொறுத்தப்பட்டு இவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டது என்பது குறிபிடத்தக்கது. இதே வழிமுறையை பின்பற்றித்தான் டாரிஷ் ரிஷாநஜாத் மீதும் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று அதேவருடம் -12.01.2010- அன்று அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதி குண்டு வெடிப்பொன்றில் படுகொலைசெய்யப்ட்டார் இந்த கொலைகளுக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் தெரிவித்திருந்தது. என்பதும் குறிபிடத்தக்கது. இது பற்றி ஈரான் அறிவியல் துறை அமைச்சர் கைதர் மொஸ்லேஹி அன்று கருதுரைகையில் ஈரான் இஸ்லாமிய குடியரசை அழிக்க அமெரிக்காவை தளமாக கொண்ட 80 அமைப்புகள் இயங்குவதாகவும் வருடம் ஒன்றுக்கு அமெரிக்கா அவற்றுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை- வழங்கிவருவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இந்த தகவல்கள் மேற்கின் பயங்கரவதத்தை புரிந்துகொள்ள உதவும்.
-OurUmmah-
No comments:
Post a Comment