தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரச தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தரப்பாகக் கலந்து கொள்ளவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைக இருந்தால் அதை ஏற்று கொள்ளமுடியாது அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம் மனத்தடைகளே தோன்றும்.
என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் . கே . சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேச்சில் முஸ்லிம்கள் தனித்தரப்பாக பங்குகொள்ளவேண்டும் என்று கூறிவருகின்றது என்பது குறிபிடத்தக்கது.
மேலும் சிவாஜிலிங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படும் ஒரு கட்சி இந்த நிலையில் அவர்கள் பேசவேண்டுமானால் அரசாங்கத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு சமாந்திரமாகவோ பேசி கொள்ளலாம். இந்த விடயத்தில் நாம் தடையாக இருக்கப்போவதிலை ஆனால் தற்போது இடம்பெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் தாமும் தரப்பாக கலந்து கொள்ளவேண்டுமென்று அடம்பிடித்தால் அது மனத்தடை களையே தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெரும்பான்மையினரால் ஏமாற்றப்பட்டதாகக் கூறி போராட்டம் நடத்திய தமிழ்ச் சமூகமும் அதன் தலைமைகளும் மற்றுமொரு சிறுபான்மையின சமூகமான முஸ்லிம்களை ஓரங்கட்ட அல்லது புறந்தள்ளிவிட ஒருபோதும் முனையக் கூடாது.
முஸ்லிம் தனித்தரப்பு என்பது இன்று நேற்று எழுந்த விடயமல்ல என்றும் யுத்தத்தினால் முஸ்லிம்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புத்தளம் மற்றும் பல இடங்களிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் முஸ் லிம்கள் ஒரு சாட்சியாக உள்ளனர் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்பிற்கு என்ன கிடைக்கிறதோ அது முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் தரப்பு உறுதியாக உள்ளது.
அத்துடன் இவ்விடயத்தில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் இணைந்து செயற்பட்டாலேயே உண்மையான பூரணத்துவமான வெற்றியைக் காண முடியும் ஒருவரையொருவர் ஓரங்கட்டிச் செயற்பட்டால் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
-Lankamuslim-
No comments:
Post a Comment