சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கை மன்னிக்குமாறு குழந்தையின் பெற்றோரை அணுகி தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி சவுதி மன்னருக்கு விடுத்திருந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சவுதி அரேபிய மன்னருக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை எனவும் சவுதி அரேபியாவில் ஷரியா சட்டம் அமுல்படுத்தப் படுவதால் சவுதி அரசுக்கோ , மனருக்கோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒருவரை மன்னிக்கும் அதிகாரம் இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்
பெற்றோர் மன்னிப்பது மட்டும் தான் இருக்கும் ஒரே வழியென்றும் அவர் தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ரிஸானாவை தண்டனையிலிருந்து விடுவிக்க மரணமான குழந்தையின் பெற்றோரினாலேயே முடியுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குழந்தையின் தந்தை மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும் தாய் இன்னும் மன்னிப்பு வழங்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிபிடத்தக்கது. இலங்கையில் நடாத்தப்படும் கையெழுத்து சேகரிப்பும் , ஆர்பாட்டங்களும் ரிஸானா நபீக்கை மன்னிக்குமாறு குழந்தையின் பெற்றோரை அணுகும் பொருத்தமான வழிமுறைகள் அல்ல என்று சமூக ஆய்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்.
-Lankamuslim-
No comments:
Post a Comment