Search This Blog

Jul 12, 2011

நாளை இரண்டாவது ஒலுவில் பிரகடனம் ?

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை, கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்துடன் ஒன்றிணைந்து ”நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” என்ற பெயரில் பேரணி மற்றும் பிரகடனம் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிகழ்வுகள நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

தென்கிழக்குப் பல்கலைக்கழக  மாணவர்கள் பேரவை ஏற்பாடு செய்யதுள்ள இந்த நிகழ்ச்சி அரசியல் தீர்வு முயற்சியில் ஈடுபடும் தரப்புக்களுக்கான அழுத்தங்களாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ளது. அரசியல் அதிகாரங்களுடன் தொடர்புபடும் எந்த விடயத்திலும், முஸ்லிம்கள் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும், அரசியல் தீர்வு முயற்சியில் முஸ்லிம்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும், முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் செயற்பட்டு முஸ்லிம் தலைமைகள் வென்றெடுக்கவேண்டும், இனமுரண் பாடுகளைத் தீர்க்கும் முயற்சியில் அனைத்துலக நாடுகள் பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது.
போன்ற விடயங்களை வலியுறுத்தி இந்தப் பிரகடன நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுகள் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடை பெறவுள்ளது.
இந்த நிகழ்வு ஒழுங்கின் பிரகாரம்  நாளை காலை ஒலுவில் பிரதேசத்தில் இரண்டு பேரணிகள் இடம்பெறவுள்ளது. அவற்றில் சுலோகங்களையும் பதாகைகளையும் ஏந்திய வண்ணம் முஸ்லிம்களின் உரிமைக்கான கோஷமிட்டு ஊர்வலமாக தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலுக்கு வந்துதடைவர். அதன் பின்னர் அங்கு கூடும் மக்கள் மத்தியில் “நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” என்னும் பிரகடன நிகழ்வு இடம்பெறுமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-lankamuslim-
இதேவேளை அன்றைய தினம் 12 மணிவரை அலுவலகங்கள், வியாபாரத்தலங்கள், பாடசாலைகள் போன்றவற்றின் பணிகள் பிற்போடப்பட்டு நாடு, சமூக உரிமைக்கான முன்னெடுப்புக்கு உணர்வுபூர்வ ஒத்துழைப்பை வழங்குவதுடன், பிரகடன நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة