அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA தீவிரவாத எதிர்ப்பு நோக்கங்களுக்காக சோமாலியாவை பயன்படுத்துவதாகவும் சோமாலியா தலை நகரில் ஒரு இரகசிய சிறையை கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவில் வெளிவரும் TheNation என்ற சஞ்சிகை தெரிவித்துள்ளதாக AFP தெரிவிக்கின்றது.
அந்த சஞ்சிகை தெரிவித்துள்ள தகவலில் அமெரிக்க மத்திய புலனாய்வு ஏஜென்சி சோமாலியாவில் கடற்கரை பகுதியில் பல சுற்று சுவர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட பல கட்டடங்களை அதன் உள்பகுதில் கொண்ட பலமான சிறைச்சாலை ஒன்றை இரகசியமாக இயக்கிவருவதாக் தெரிவிக்கின்றது.
அந்த சஞ்சிகை தெரிவித்துள்ள தகவலின் படி இந்த சிறை தொகுதிக்குள் தனியான விமான நிலையமும் உள்ளதாகவும் அந்த சிறை தொகுதியை சூழ பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.விரிவாக
அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIA யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்தது முன்னர் அம்பலமாகிமையும் குறிபிடத்தக்கது.
பயங்கரவாதம் பயங்கரவாதம் என்று கூச்சல் போடுகிற அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட சர்வதேச தரத்தில் சட்டவிரோத பயங்கரவாத நடவடிக்கைகளை கொண்டுள்ளமை பற்றிய தகவல்கள் தடவைகள் வெளிவந்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான CIAயின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 14 நாடுகள் உதவியாக இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியது.
சுவிஸ் செனட்டர் டிக் மார்ட்டி நடத்திய ஏழு மாத புலனாய்வின் பின்னர் மேற்கின் இரகசியம் வெளிவந்தன. எந்த எந்த வான்பாதையூடாக கைதிகளை வதைமுகாம்களுக்கு அமெரிக்கா விமானங்கள் ஏற்றி வந்தன. என்பதையும் அதற்கான செய்திமதிப் புகைப்படங்களையும் கைதிகளின் வாக்குமூலங்களையும் வெளியிட்டார்.
இந்த சதியில் ஸ்பெயின், ஜேர்மனி, சைப்ரஸ், இங்கிலாந்து, போர்த்துக்கல், அயர்லாந்து மற்றும் கீர்ஸ் ஆகிய நாடுகள் பாரிய பங்காற்றியிருப்பதாகவும் மார்ட்டியின் அறிக்கை தெரிவித்தது.
சுவீடன், இத்தாலி, போஸ்னியா, மாசிடோனா ஆகிய நாடுகளில் தங்களது சொந்த மண்ணிலிருந்து மக்களை அமெரிக்க புலனாய்வுத்துறையினர் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்துள்ளன. என்றும்.
போலந்து மற்றும் ருமேனியாவில் அமெரிக்க புலனாய்வுத்துறையின் இரகசிய வதைமுகாம் இருப்பதையும் இந்த அமைப்பின் அறிக்கை உறுதி செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஆப்கான் மற்றும் தாய்லாந்தில் இத்தகைய முகாம்களை அமெரிக்கா அமைத்திருப்பதாக வாசிங்கடன் போஸ்ட் தெரிவித்திருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் அமெரிக்காவின் சோமாலிய வதை முகாம்கள் பற்றிய செய்தி புதியவையாகும்.
-Ourumah-
No comments:
Post a Comment