அமெரிக்காவில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப் பட்டவர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஷ், முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ் பீல்ட், சீ.ஐ.ஏ. பணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையாயின் ஜோர்ஜ். புஷ் காலத்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் உரிமைகள் மீறப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகம் மேற்கொள்ளவேண்டுமெனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு தனது நாட்டு அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா விசாரணைகளை நடத்தாவிட்டால், அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக ஏனைய நாடுகள் சர்வதேச சட் டத்துக்கு அமைய விசாரணைகளை நடத்துவது அவசியமென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-lankamuslim-
No comments:
Post a Comment