Search This Blog

Jul 13, 2011

வாசகர் ஆக்கம்: இஸ்லாத்திக்கு எதிரான சக்திகளின் நடவடிக்கை

பேனா நன்பன்…..முஹம்மது பஹத்
இஸ்லாம் என்பது வெறுமனே ஒரு மதமல்ல. இறைவனால் வகுத்து தரப்பட்ட ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். ஏன் என்றால் மற்ற மதங்களை போல் இஸ்லாம் வெறுமனே வெறும் வணக்கத்தை மட்டும் மக்களுக்கு போதிக்கவில்லை. இறைவணக்கம். குடும்பவாழ்க்கை பொருளீட்டல் அரசியல் சமூகவாழ்க்கை தனிமனித ஒழுக்கங்கள் என்று ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை எவையெல்லாம் அவன் வாழ்க்கையில் சம்பந்தப்படுமோ அவை எல்லாவற்றையும் பற்றி இஸ்லாம் கற்று தந்துள்ளது.

உலக சனத்தொகையில் ஏறக்குறைய 150 கோடி மக்களாக அதாவது 23வீதம் ஆக வாழும் முஸ்லிம்கள் என்பவர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவார்கள். உலக மொத்த முஸ்லிம் சனத்தொகை – ஏறக்குறைய 150 கோடியிலிருந்து 157 கோடி வரை முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். விரிவாக நவீன உலகில் பல விதமான பிரட்சனைகளுக்கு முகம் கொடுக்க வேன்டிய நிலை முஸ்லிம் உம்மத்திட்கு ஏற்பட்டுள்ளது.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் அவ்வப்போது ஊடகங்களிள் வெளியிடப்படும் செய்திகளும் கட்டுரைகளும் பெரும் சர்ச்சையை கிளப்புவதும் பின்னர் அதற்கு எதிராக முஸ்லிம் உலகம் போர்கொடி எடுப்பதும் அடிக்கடி நடைபெரும் விடயம்தான் .மேற்கெத்திய நாடுகளிள் தான் இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களினால் பிரச்சாரம் மேற்கொள்ளுவது வழக்கம்.ஆனால் மேற்கெத்திய ஊடகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரிகளுக்கும் சற்றும்சடைக்காத வகையில் இலங்கையில் அவ்வாறு முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது இலங்கை முஸ்லிம்களை கொதிப்படைய செய்துள்ளது.
கடந்த ஆயிரம் வருடம் காலமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒழுக்க ரிதியாகவும்பன்பட்டுரிதியாகவும் பிற சமுகத்தினருக்கு முன்மாதிரி மிக்கவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.ஆனால் இவ்வாறு பேனிக்காத்து வந்த கன்னியத்திற்கு ஒரு சாவுமனியாக அமையும் மேற்கத்திய மற்றும் அமேரிக்க பின்னனியுடன்அன்மையில் அரங்கேரி உள்ள விடயம் எந்த முஸ்லிமாலும்தாங்க முடியாத வரலாற்று துரோகமாகும்.கடந்த காலம் இலங்கையில் பிரபல படகரும் தயாரிப்பாளருமான.இராஐ;வீரகத்தினவால் வெளியிடப்பட்டுள்ள சித்திமனிலா எனும் தலைப்பிலான சிங்கள வீடியோ இசை தொகுப்பில் அடங்கிஉள்ள ஒரு பாடல் காட்சியானது இலங்கை முஸ்லிம்களையும் குறிப்பாக இஸ்லாத்தையும் அவமதிக்கும் விதத்தில் அமைந்திருப்பதுடன் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தப்பான புரிந்துனர்வுகளையும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கையை பொறுத்தவரைக்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அவமதிக்கும் வகையில் ஒரு பாடல் காட்சி அல்லது ஒரு கலை வடிவம் வெளிவருவது இதுவே முதல் முறையாகும்.இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் ஏனைய மத மக்கள் நல்ல அபிராயம் கொன்டிருக்கின்ற நிலையில் அதனை சீர்கொலைக்கும் வகையில் திட்டமிட்டு தாயாரிக்கப்பட்டிருக்கும் இப்பாடல் மீது கவனம் எடுப்பது கடமையாகும். இந்த பாடலை உருவாக்கியவரான இராஐ;வீரரத்ன அமேரிக்க பின்னனியை கொன்டவர் எனவும் அந்த வகையில்சில தீய சக்திகளின் துன்டுதலின் பெயரிலயே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாரான ஒரு பாடலை வெளியிட்டு இருக்கவேன்டும் எனவும் சந்தேகம்வெளியிடப்படுகிறது.
பௌதர்களும் முஸ்லிம்களும்சினேக புர்வமாக வாழும் இந் நாட்டில் சிங்கள மொழி என்ற போர்வையில் இராஜ்வீரரத்ன போன்ற சில புள்ளுருவிகள் பொதுவாக இலங்கை மக்களின் கலாச்சாரத்தையும் குறிப்பாக முஸ்லிம் மக்களின் தனித்துவத்தையும் சீர் கெடுக்கும் இப்பாதக செயலுக்காக உரியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதானது காலத்தின் கட்டாயமாகும்.முஸ்லிம் யுவதிகள் ஒழுக்கம் அற்றவர்களாகவும் முஸ்லிம் இளைஞர்கள் பாதாள இயக்கங்களுடன் தொடர்புபட்டவர்களாகவும்.இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
அல்லாஹ்வின் இல்லத்தை நோக்கி அழைக்கும் புனித அதான் ஒலி இங்கு தவரான காதல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பாடலுக்குக்காக பயன்யடுத்தப்பட்டுள்ளது.அத்துடன் ஒரு இறை இல்லமும் இப்படலுக்குகாட்சி படுத்தப்பட்டுள்ளது.இஸ்லாத்தின் கன்னியமாக மதிக்கப்படும் பென்கள் பாதாள உலகை போசிப்பவர்களாகவும் எளிதில் காதல் வயப்படுபவர்களாகவும் உயிரிலும் மேலான மார்கத்தை அற்ப காதலுக்காக உதரித்தள்ளுபவர்களாகவும் சித்தரிக்கப்படுவது வேதனைக்குறிய விடயமாகும்.
அதை விடவும்கொடுமை போற்றிக்காக்க வேன்டிய தகப்பனை இழிவான முறையில் காட்டிருப்பது வேதனைதரும் விடயமாகும். இஸ்லாத்தின் கன்னியமான பள்ளிவாயல் இஸ்லாத்தை நாசப்படுத்துவதற்கான கலமாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.சமாதனத்திற்கான பாடல் என்ற மாயை காட்டி பள்ளிவாயல் நிர்வாகிகளை ஏமாற்றி ஓர் நாச கார செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
அறை ஆண்டு கழிந்து எது வித எதிர் நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எமது உம்மத் இன்னும் தூங்கிக்கொன்டு இருப்பதற்கான எடுத்துக்காட்டா அல்லது முஸ்லிம் தலைவர் என்று தம்மை அடையாளப்படுத்துபவர்களின் இயலயமையா…ஏன் இதை கன்டும் மௌனமாக இருப்பதின் அர்த்தம்தான் என்ன??? அதே போல அன்மையில் முஸ்லிம் அதிகமாக வாழும் பிரதேசம் ஒன்றில் நடைபெற்ற ஒரு சிரிய விடயம் ஒன்றை ஊதி பெரிதாக்கி அன்னிய ஊடகங்கள் மற்றும் ஊடகவியளாளர்கள் கையான்ட முறை கன்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.அதிலும் குறிப்பாக BBCதமிழ் சேவையானது இந்த செய்திக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதுடன் சம்பவத்துடன் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு சில விடயங்களை இனைத்து செய்தியின் உண்மையை மறைத்துள்ளது. இச்செய்தியை தொகுத்து வழங்கியிருந்த ஊடகவியளாளர் வெறுமனே ஒரு சில இளைஞர்களின் தனிப்பட்ட உணர்வின் விளைவாக இடம்பெற்ற கலாச்சார பின்னணி பொருந்திய இந் நிகழ்வை ஒரு பெரிய சம்பவமாக காட்டியதோடு மாத்திரமல்லாமல் இது ஒரு மத அடிப்படைவாதம் எனும் போக்கில் செய்தியை தனது விருப்பத்திற்குகேற்ப திரிபுபடுத்த முனைந்துள்ளார்.
இவர் தனது கருத்திற்கு வலு சேர்பதற்கு இந்த செய்திற்கு தொடர்பில்லாத வேறு பல செய்திகளை இனைத்துள்ளாதானது மன வேதனைக்குறிய விடயமாகும்…இருந்த போதும் இந்த ஊடகவியளாளர் மத அடிப்படைவாதம் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் விதைக்க எத்தனிப்பதை தெளிவாக அவதானிக்க முடிகின்றது..
அதிலும் குறிப்பாக அப்பிரசேத்தில் பேரீத்தம்மரங்கள் நடப்பட்டது தொடர்பிலும்.அரபு மொழியை வீதி பெயர் பலகை இடப்பட்டது போன்ற விடயங்களை எவ்வித அடிப்படை அறிவும் அற்ற வகையில் தீவிரவாதம்.இஸ்லாமிய அடிப்படைவாதம்.என்று எழுதுவது இந்த ஆசிரியருக்கு தமிழ்ழின் அடிப்படை அறிவு போதாது என்பதை தெளிவாக்குகிறது.இப் பிரதேச மானது 100 வீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர்.-அவர்கள் அதிகம் விரும்பும் கனியைத் தரும்-. பேரீச்சம்மரம் நடப்பட்டுள்ளது. அதே போன்று இங்கு வாழுகின்ற 95வீதமான மக்கள் அறிந்துள்ள தங்களது புனித மொழியாக நேசிக்கும் அரபு மொழியை வீதி பெயர்பலகையில் இடப்பட்டுள்ளது.
இதற்கு எந்த வித அடிப்படையும் அற்ற வகையில் மத அடிப்படைவாதத்தை இனைக்க முனைந்தமை கவலைக்குறிய விடயமாகும். ஆயினும் எந்தவித அடிப்படையும் அற்ற வகையில் சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு சேறு புசும் ஊடகங்களின் அணுகுமுறை சொந்த குரோதத்தின் வெளிப்பாடக தோன்றுகின்றது.அந்ந செய்திக்கு நடந்த சம்பவத்தை சட்டதரனியான எமது சகோதரர் விளக்கும் போது அவரது அரசியல் குரோதத்தை வெளிப்படுத்தினார்அதாவது அவர் ஒரு முஸ்லிம் என்பதற்கு அப்பால் அரசியல்வாதி என்ற ரீதியில் செவ்வி வழங்கிருந்தார்.அதாவது அப் பிரதேசத்தில் அரபு மொழியில் வீதி பெயர்பலகை இடப்பட்டது அவசியம் அற்றது என்றார்.அத்தோடு பேரீத்தம் மரம் நடப்பட்டது அரபு நாடுகளில் இருந்து பணம் பெறுவதற்கு என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த ஜனநாயக நாட்டில் முஸ்லிம்களது மொழியை பேசுவதற்கும்.அடயாலத்தை நடுவதற்கும் சுதந்திரம் இல்லை என்றால் இலங்கை இன்னும் சுதந்திரம் அடையாத நாடு எனறே என்னத்தோன்றுகிறது.இத்தோடு முடிவடையவில்லை தொடரந்தும் பல கோனங்களில் முஸ்லிம்களை நசுகிக்கொன்டுதான் வறுகிறார்கள்.
அன்மையில் தமிழ் இணையத்தளம் ஒன்றின் கட்டுரையாளர் ஒருவர் எழுதியுள்ள கட்டுறையிள் இஸ்லாமிய ஆணாதிக்கமும் அடிப்படைவாமும் இதை மூடி மறைப்பதிலும் நியாயப்படுத்துவதிலும் மதக்கண்ணோட்டமும் ஆதிக்கம் வகிக்கின்றது..என்று மதத்தை சாடும் இவரது போக்கு.தொடர்ந்து இவரது கட்டுரையில் அதுவும் இஸ்லாமிய ஆணாதிக்கம் சார்ந்து …வக்கிரம் அராஜகம் எது பாலியல் ஆபாசம் என்பதை வரையறுக்க இஸ்லாமிய ஆணாதிக்திற்கு எந்த அருகதையும் கிடையாது.அதுதான் இதன் மத அடிப்படைவாதமுமாகும்.என்று குறிப்பிட்ட அவர் அவரது கட்டுரைக்கு வழுசேர்பதற்காக பல இடங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆணாதிக்கம் என்ற வசனங்களை பயன்படுத்தி இருக்கிறார் இதில் இருந்து இவ்விரு வார்த்தைகளின் அறிவு அவருக்கு இன்மையை உணர்த்துகிறது.
இதை தொடர்ந்து இதே இனையதளத்தில் இஸ்லாம் பற்றி ஒரு கட்டடுரை வெளியிடப்பட்டுள்ளது. இச் செயற்பாட்டை எந்த ஒரு முஸ்லிம் உம்மத்தாலும் தாங்க முடியாது….இவ்வாறு பல கோனங்களிள் புத்தி சுயாதினம் அற்றவகையில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தாக்கிக்கொன்டுதான் இருக்கிறார்கள் இவ்வாறு ஒவ்வொரு நாளும்பல விதமான பிரட்சனையை எதிர்நோக்கவேன்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதாவது கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில்அமைந்துள்ள மஸ்ஜித் தொடர்பான விடயம்.இம் மஸ்ஜித் உள்ளே பௌத்த மதகுருமார்கள் சிலர் நுழைந்து மஸ்ஜிதை முடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சில தினங்களுக்கு முன்னர்ஜமாஅத் தொழுகை நேரத்தில் மஸ்ஜிதுல் நுழைந்த பௌத்த தேரர்கள் சிலர் மஸ்ஜிதை முடுமாறும் இங்கு தொழுகை நடத்தமுடியாது என்றும் மிரட்டியுள்ளனர்.
பின்னர் மஸ்ஜிதுக்கு எதிராக தேரர்களாள் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது.இவ்வாறு இருக்க குறித்த மஸ்ஜித் அமைந்துள்ள பிரதேசத்தில் ஜனாதிபதி ஆலோசகரான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களின் இல்லம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..இவ்வாறு முஸ்லிம்களது சமய கடமைகளை செய்வதற்கு சுதந்திரம் இல்லை என்றால் ஜனாதிபதி சொல்லுவது அரசியல் மந்திரமா?இதனை கேட்பதற்கு எந்த முஸ்லிம் தலைவருக்கும் தைரியம் இல்லையா?இவ்வாறு சிரிதாய் புகையும் புகை நாளை எரிமலையாய் மாறுவதற்குள் அனைத்து விடுவது நாட்டுக்கும் நமக்கும் நல்லது.
இது தொடர்பாக முஸ்லிம் தலைவர்களோ.

முஸ்லிம் அரசியல் வாதிகளோ.முஸ்லிம் அமைப்புக்களோ..அமைதியாக ஊமையர்கள் போல இருப்பதின் அர்தம்தான் என்ன ?பல இலச்சக்கனக்கான முஸ்லிம் மக்களிள் இருந்து ஒரு சிலரை தேர்ந்தெடுத்து முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பியது வாய் முடி மௌனமாக இருப்பதற்காக அல்ல இவ்வாறான நிலையின் போது உரிமையை பாதுகாப்பதற்காக…ஆகவே இவ்விடயத்தில் கவனம் எடுப்பது ஒவ்வொறு முஸ்லிம் தலைமை மீதும் கட்டாயமாகும்.தேசிய அடையாள அட்டைக்கு தொப்பி ஹிஜாப் அணிந்த புகைப்படம் நிராகரிப்பு தொடக்கம் ரமழான் விடுமுரை நிறுத்தம் போன்றவற்றில் தொடங்கி நாளை முஸ்லிம் வெளியேற்றம் வரை போவற்கு இடையில் தீர்வு கான்பது அவசியமாகும்.இவ் விடயத்தில் கவனம் எடுப்பதன்முலம் திர்வை பெற முடியும் முஸ்லிம்களின் சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்..முஸ்லிம் உம்மத் நிம்மதி முச்சுவிடமுடியும்.
-lankamuslim-

No comments:

Post a Comment

المشاركات الشائعة