Search This Blog

May 30, 2011

அல் குத்ஸ் ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகள்


S.M.மஸாஹிம்-(இஸ்லாஹி)
 அல்குத்ஸ் – பைத்துல் முகத்தஸ் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால்  ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது அதை நினைவு கூறும் முகமாக பலஸ்தீன் வாலிபர் அமைப்பு -The Muslim Youth Association- நாடு பூராவும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள்,  பேரணிகள் ஆகியவற்றை நடாத்துமாறு பலஸ்தீன மக்களை கோரியுள்ளது.    எதிர் வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி பலஸ்தீன் கிழக்கு ஜெருசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ்- முஸ்லிம் உம்மாஹ்வின் முதல் கிப்லா,   ஜெருசலம், மேற்கு கரை ஆகியன 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
பலஸ்தீன் வாலிபர் அமைப்பு என்ற அமைப்பு நேற்று -29.5.2011- விடுத்துள்ள செய்தியில் நாங்கள் வெற்றியாளர்களாக இருக்க இன்று தீர்மானித்துள்ளோம் ஜெருசலம்,  அல் குத்ஸ், மேற்கு கரை ஆகியன ஆக்கிரமிக்கப்பட்டதை நினைவு கூறும் முகமாக தேசத்தையும் , மக்களையும் விடுதலை பெறச்செய்ய  உறுதியெடுக்குமாறும்  ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராக எழுச்சி பெறுமாறும் போராட்டங்களை அதிகரிக்குமாறும் நாம் அழைப்பு விடுகின்றோம் என்று அந்த தகவலில் குறிபிடப்பட்டுள்ளது.
துருக்கிய கிலாபத்தின்-உஸ்மானிய -  கீழ்  சுமார் நான்கு நூற்றாண்டுகள் பாதுகாப்பாக இருந்த  ஜெருசலம் 1917 ஆம் ஆண்டு  பிரிட்டன் சாம்ராஜியதால் ஆக்கிரமிக்கப்பட்டது  பின்னர் 1948 ஆம் ஆண்டு  பிரிட்டன் பலஸ்தீனை விட்டு   விலகியது அதே தினத்தில்  இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு  பிரகடனம் செய்யப்பட்டது அதனை முன்பு திட்டமிட்டவாறு பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது அங்கீகாரத்தை வழங்கியது.
இதை எதிர்த்து  பலஸ்தீன் மக்கள் போராட்டத்தில் குதித்தனர் இவர்களுடன்    அரபு முஸ்லிம் நாடுகளில்  படைகளும் களத்தில் இறங்கின ஆனால்  இஸ்ரேலின் முன்கூட்டிய திட்டமிடல் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் உதவி ஆகியவற்றால் இஸ்ரேல் களத்தில் வெற்றிகளை குவித்தது 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  அரபு இஸ்ரேல் யுத்தமாக பரிமாணம் பெற்றது  அந்த யுத்தத்தில் எகிப்து, சிரியா , ஜோடான் போன்ற அரபு முஸ்லிம் நாடுகள் இஸ்ரேளிடம் தோற்றது.
விளைவு பல அரபு முஸ்லிம் பிரதேசங்கள் உட்டபட  அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ் – பிரதேசமும்  5.6.1967 அன்று ஆக்கிரமிப்புக்கு உள்ளானது இன்று வரை அதை முஸ்லிம்களினால் மீட்க முடியவில்லை மேற்கு உலகம் உருவாக்கிய இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா  இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்பு அரணாக அமெரிக்க இருக்கும் என்று கூரியமையும் சுட்டிக்காட்டதக்கது இந்த நிலையில் எதிர் வரும் ஜூன் 6 ஆம் திகதி முஸ்லிம் உம்மாஹ்விம் முதல் கிப்லா இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு 44  ஆண்டுகள்  பூர்தியாகின்றது.
கிலாபத்தில் பறிகொடுத்ததை கிலாபத் இன்றி மீட்பது  44 ஆண்டுகளாக மிகவும் சிரமமாகத்தான் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் உட்பட 52 பேர் படுகொலை


 அமெரிக்க மற்றும் நேட்டோ உளவு விமானயங்கள் மூலம் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தான் எல்லைபுறங்களிலும் ஆப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர் என்பது எமக்கு எந்த உணர்வையும் தராத பழகிப் போன செய்தியாகிவிட்டது குவான்டனாமோ சிறையிலும், டீகோகார்சியா தீவிலும், கடலில் நிலைகொண்டுள்ள போர்க்கப்பல்களிலும், மீலாத சித்திரவதையால் வதைக்கப்படும் ஆயிரக்கணக்கான கைதிகள் பற்றிய செய்திகள் எமக்கு எந்த விதமான உணர்வையும் ஏற்படுத்துவதில்லை.
அந்த செய்தியில் ஒன்றாக கடந்த புதன் கிழமை நேட்டோ விமான படைகள் நடாத்திய தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களில் 12 சிறுவர்களும் பல பெண்களும் அடங்குவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது மற்றுமொரு செய்தியில் 52 பேரில் 20 ஆப்கானிஸ்தான் போலீஸ் சிப்பாய்களும் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் கர்சாய் நிர்வாகம் தெரிவிக்கின்றது விரிவாக
அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் ஆப்கானிஸ்தானில் நடை பெருகின்றது ஒரு புறம் பயங்கர வாதத்திற்கு எதிரான யுத்த மையம் ஆப்கானிஸ்தான்தான் அங்குதான் யுத்தம் பலமாக நடாத்தப்படவேண்டும் என்று கூறி ஒபாமா நிர்வாகம் மேலதிக 30 ஆயிரம் படைகளை கடந்த நவம்பரில் அனுப்பியது மறுபுறம் 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க துருப்புகள் வெளியேற்றம் தொடங்கி அந்த வெளியேற்றம் 2014 ஆம் ஆண்டுதான் முடிவடையும் என்றும் கூறிவருகின்றது அதேவேளை ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் விரிவடைந்து செல்கின்றது என்பது வேறு கதை ஒன்றை சொல்கின்றது.

May 28, 2011

அமெரிக்கா இஸ்ரேலின் இரும்பு அரணாக இருக்கும்: ஒபாமா


M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக்ஒபாமா தான் தெரிவித்த கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார் என்று பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றது நேற்று அமெரிக்காவில் இயக்கும் இஸ்ரேலிய முக்கிய அரசியல் அழுத்த அமைப்பான அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைபப்பு- American Israel Public Affairs Committee (AIPAC)யின் வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒபாமா ஐநா சபையின் ஊடாக பலஸ்தீன் தேசத்தை உருவாக்க பலஸ்தீனர்கள் மேற்கொள்ளும் முயற்சியை நிராகரித்ததுடன் இஸ்ரேலை பாதுகாக்கும் இரும்அரணாக-ironclad- வொசிங்டன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் எதிர்கால கொள்கை தொடர்பில் ஆற்றிய பிரதான உரையின் போது தெரிவித்த இஸ்ரேலின் 1967 ஆம் ஆண்டு எல்லை தொடர்பாகவோ பலஸ்தீன இறையாண்மை தேசம் உருவாக்குவது தொடர்பிலோ எந்த கருத்தையும் வலுவாக முன்வைக்காது முழுமையாக இஸ்ரேலின் புனித பாதுகாவலனாக மட்டும் உரையாற்றியுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.
இஸ்ரேலின் 1967 ஆம் ஆண்டு எல்லை தொடர்பாக தனது வியாழகிழமை கருத்துக்கு இஸ்ரேலுக்கு சார்பான மெழுகு பூசும் விளக்கத்தை கொடுத்துள்ளார் என்றும் எல்லைகள் தொடர்பில் இருதரப்பும் பேசவேண்டும் விட்டுகொடுப்புகளை செய்யவேண்டும் என்றும் தெரிவித்து தொடர்ந்தும் அமெரிக்கா தனது இஸ்ரேல் சார்பான பிடிவாதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்
இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்தமைக்கு இஸ்ரேல் பிரதமர் பின்யமின் நேதன்யாஹு தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் இஸ்ரேலிய ஆதரவு அமைப்புகள் தமது வலுவான எதிர்ப்பை தெரிவித்தன இதற்கு பதில் தெரிவித்த பலஸ்தீன தரப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் பலஸ்தீன தேசத்தை உருவாக்க ஐநா பொது சபையின் அங்கீகாரம் கோரபோவதாக தெரிவித்தது.
இதற்கு பதிலடியாகத்தான் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஐநா சபையின் வாக்குகள் ஒரு போதும் பலஸ்தீனை உருவாக்காது “No vote at the United Nations will ever create an independent Palestinian state, என்றும் இஸ்ரேலை ஐநாவில் இருந்து வெளியேற்றவோ அல்லது எந்தவொரு சர்வதேச போரத்தில் இருந்து வெளியேற்றவோ மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேலுடன்  இருக்கும் ஏனென்றால் இஸ்ரேலின் சட்டபூர்வ தன்மை விவாதத்திற்கு உரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் இவரின் இந்த உரையை ஹமாஸ் நிராகரித்துள்ளது.
அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகார அமைப்பில் உரையாற்றிய ஒபாமா பலஸ்தீனர்கள் கைதியாக பிடித்து வைத்துள்ள ஒரு இஸ்ரேல் சிப்பாய்க்கு அதரவாக அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர் இஸ்ரேலின் வதை முகாம்களில் வதைக்கப்படும் பலஸ்தீன சிறுவர் ,சிறுமியர், ஆண்கள் பெண்கள் ,நோயாளர்கள் , வயோதிபர்கள் என்று சுமார் 7 ஆயிரம் பேர் பற்றி எதுவும் பேசவில்லை என்பது ஒபாபாவின் இஸ்ரேல் ஆதரவு பயங்கரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு கிளாஸ் மதுவுடன் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு :ஒபாமா


பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கடந்த புதன்கிழமை பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் எம்.பிக்கள் பிரபுக்கள் மத்தியிலும் பிரிட்டன் பாராளுமன்றத்திலும் உரை நிகழ்த்திய  ஒபாமா எமது வரலாற்றின் புதிய அத்தியாயத்தை பகிர வேண்டிய தருணத்திற்குள் நாம் நுழைய வேண்டியுள்ளதெனவும்
உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் பல வருடங்களாக நீடிக்கும் பயங்கரவாதத்திற்கான போர் என்பவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளும் முன்னெப்போதுமில்லாத முக்கிய தருணத்தை வந்தடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை பிரிட்டன் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு பிரிட்டன் பாராளுமன்றது முன்பாக ஒபாமா, கெமரூன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் கலந்து கொண்டவர்கள் கிலாபா ஒன்றுதான் தீர்வு என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் பிரிட்டின் பிரதமர்  கெமரூனும் முஸ்லிம் தேசங்களில் தமது அழுக்கு படிந்த கரங்களை நுழைப்பதை நிறுத்தவேண்டும், அரபு முஸ்லிம் தேசங்களில் மாற்றம் வந்து கொண்டிருகின்றது உண்மையான மாற்றம் கிலாபாதான்.  மேற்குலகின் பொம்மைகளை  முஸ்லிம் உம்மாஹ் துரத்தி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளர்.
இதில் கலந்து கொண்டவர்கள் கிலாபா ஒன்றுதான் தீர்வு என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் பிரிட்டின் பிரதமர்  கெமரூனும் முஸ்லிம் தேசங்களில் தமது அழுக்கு படிந்த கரங்களை நுழைப்பதை நிறுத்தவேண்டும் என்றும் அரபு முஸ்லிம் தேசங்களில் மாற்றம் வந்து கொண்டிருகின்றது உண்மையான மாற்றம் கிலாபாதான் என்றும் மேற்குலகின் பொம்மைகளை  முஸ்லிம் உம்மாஹ் துரத்தி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளனர் .
மேலும் அங்கு உரையாற்றியுள்ள ஒபாமா  புதிய சவால்களுடன் எமது வரலாற்றின் புதிய அத்தியாயத்தை பகிர வேண்டிய தருணத்திற்குள் நாம் நுழைய வேண்டியுள்ளதெனவும் இதேவேளை வல்லரசுகளாக வளர்ச்சி பெற்றுவரும்  நாடுகளினால் உலகில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் செல்வாக்கு முடிவுக்கு வருமென்ற வாதங்களை நிராகரித்துமுள்ளார்.
And yet, as this rapid change has taken place, it has become fashionable in some quarters to question whether the rise of these nations will accompany the decline of American and European influence around the world. Perhaps, the argument goes, these nations represent the future, and the time for our leadership has passed.” That argument is wrong.The time for our leadership is now.
இது எமது தலைமைத்துவகாலம் தலைமைத்துவம் காலத்திற்கேற்ப மாற்றத்தினைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறெனில் நாளடைவில் அமெரிக்க பிரிட்டிஷ் தலைவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஒரு கிளாஸ் மதுவுடன் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அம் மாற்றம் அமைந்திருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இன்று காஸா எகிப்து எல்லை நிரந்தரமாக திறக்கப்பட்டுள்ளது


எகிப்து, காஸா ரபாஹ் எல்லையை இன்று-28.05.2011- சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறந்துள்ளது தினமும் 8 மணித்தியாலங்கள் இந்த எல்லை திருந்து விடப்படும் என்றும் வெள்ளி மற்றும் விடுமுறை தினங்களில் மட்டும் மூடப்படும் என்று எகிப்து தெரிவித்துள்ளது.   இன்று எல்லை திறக்கப்பட்டவுடன் இரண்டு அம்புலன்சுகள் மற்றும் பல வாகனங்கள் எல்லையை கடந்து எகிப்தினுள் நுழைந்துள்ளது
இதன் ஊடாக 18 வயது தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் எகிப்தின் விசா பெற்று செல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது எகிப்து விரைவில் விசா அலுவலகம் ஒன்றை காஸாவில் திறக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
காஸாவில் 15 இலட்சம் பலஸ்தீனர்கள் வாழ்கின்றனர் அதன் ரபாஹ் எல்லை மட்டும்தான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத எல்லைக் கடவையாகும் ஆனாலும் எகிப்தில் இருந்து கொண்டுசெல்லப்படும் வர்த்தக பொருட்கள் இஸ்ரேலின் ஊடாகத்தான் தொடர்ந்து கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனால் எதிர்காலத்தில் காஸா ரபாஹ் எல்லையின் ஊடாக வர்த்தக பொருட்கள் கொண்டுசெல்லப்படும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது இந்த எல்லை திறப்பு இஸ்ரேலை சினம் கொள்ளசெய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது.

காஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது


M.ரிஸ்னி முஹம்மட்
எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.
எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.
இஸ்ரேலின் 5 ஆண்டுகள நீடிக்கும் காஸா மீதான முற்றுகை சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் அரசு இஸ்ரேலுடன் இணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக அமுல்படுத்தி வந்துள்ளது இந்த நிரந்தர எல்லை திறப்பு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் கொள்கையில் இருந்து எகிப்து பெரிதும் விலகி வெல்வதை தெளிவாக காட்டும் விடயமாக இருக்கும் என்று எதிர்பார்களாம்.
வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி அவரின் கட்டுரை ஒன்றில் காஸா மீதான முற்றுகை நீதியற்றது என்றும் எகிப்து இஸ்ரேலுகிடையான முபாரக்கின் கேம் டேவிட் – Camp David Accords- உடன்படிக்கை எகிப்துக்கு பல சிதைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருந்தார் இந்த அவரின் நிலைபாட்டை ஹமாஸ் பாராட்டியதுடன் அவரின் இந்த நிலைப்பாடு அவரின் புதிய பதவிகாலத்தில் வெளிப்படும் என்று நாம் நம்புகின்றோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி அடுத்த வாரம் லிபியா பயணம்



லிபிய பிரச்சினையில் சுமுகமான முடிவை ஏற்படுத்தவும், லிபியத் தலைவர் கடாபியை பத்திரமாக வெளியேற்றி, நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்தவும், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருப்பதாக, “டாக் ரேடியா 702” செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் நடந்த ஆபிரிக்க யூனியன் கூட்டத்தில், லிபிய விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சில மணி நேரங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தன இதையடுத்து, இப்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சுமா லிபிய ஜனாதிபதி முகம்மது கடாபி பதவி விலகுவது தொடர்பான சமரசத்திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார். துருக்கி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர் இந்த முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
News: thinakaran

பல்கலைக்கழகங்களுக்கு 20,274 பேர் தெரிவு


பல்கலைக்கழகங்களுக்கு 20,274 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா தெரிவித்துள்ளதாகவும் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 2,33,609 பேர் தோற்றியிருந்தனர். இதில் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த புள்ளிகளை 1,42,516 பேர் பெற்ற நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக 54,124 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 20,274 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத்துறைக்கு 1147 பேரும் பொறியியல் துறைக்கு 1247 பேரும் முகாமைத்துவத்துக்கு 3,287 பேரும் கலைத்துறைக்கு 3,806 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, மொத்தமாக 86 பாடநெறிகளுக்காக 20,274 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை புதிதாக சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமென்ற பாடநெறியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு 101 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இப்பாடநெறி ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் அதி திறமையான புள்ளிகளைப் பெற்ற 10% மானோர் தாம் விரும்பும் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்ய முடியுமென்பதுடன், 40% மானவர்கள் திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்ய முடியுமெனவும் தெரிவித்துள்ளார்

மாணவர்கள் நேற்று இராணுவ முகாமில் ஜும்மாஹ் நடாத்தினர்


வதிவிட தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள பல்கலைக் கழகங்களுக்கு செல்லவுள்ள மாணவர்கள் நேற்று இராணுவ முகாமில் ஜும்மாஹ் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர் என்று அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் பொது செயலாளர் பொறியலாளர் நிஷாத் lankamuslim.org க்கு தெரிவித்தார்.
இந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள 22 ஆயிரத்தி 500 மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி நாட்டின் 28 முகாம்களில் நடாத்த தீர்மாணிக்கபட்டு முதல் கட்டத்தில் தெரிவானவர்களுக்கு இராணுவ முகாம்களில் மூன்று வாரகால வதிவிட தலைமைத்துவ பயிற்சி இடம்பெற்று கொண்டிருகின்றது இந்த வேலையில் நேற்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆலிம் ஒருவரினால் இராணுவ முகாமில் குத்துபா மற்றும் ஜும்மாஹ் தொழுகை நடாத்தப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்துரைத்த ஒன்றியத்தின் பொது செயலாளர் பொறியலாளர் நிஷாத் இலங்கை வரலாற்றில் இராணுவ முகாம் ஒன்றில்  இடம்பெற்ற முதல் ஜும்மாஹ்வாக இது உள்ளது என்று தெரிவித்தார் இந்த ஜும்மாஹ் முஸ்லிம் மாணவாகள் அதிகமாக உள்ள ரந்தனிகள இராணுவ முகாமிலேயே இடம்பெற்றுள்ளது.
முகாம்களில் தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவியரை ஞாயிற்று கிழமைகளில் பெற்றோர் சென்று பார்க்க முடியும் என்றும் அப்படி பார்க்க போகும் பெற்றோர் தமது பிள்ளைகளிடம் வெள்ளை நிற ஹிஜாபும் கருப்பு நிற அபாயா , கருப்பு நிற சல்வார் ஆகிய உடைகள் ஏற்கனவே இல்லாவிடத்து அவற்றை தமது பெண் பிள்ளைகளுக்கு எடுத்து சென்று வழங்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் நேற்று அறிவித்துள்ளமையும் குறிபிடத்தக்கது.

May 22, 2011

முஸ்லிம் மாணவர் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக அணுகப்படும் ?


முஸ்லிம் மாணவ மாணவியர் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் முகமாக உயர்கல்வி அமைச்சர் சாதகமாக பதில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது. பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இன்று ஆரம்பித்துள்ள நிலையில் உயர்கல்வி அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவின் கவனத்திற்கு முஸ்லிம் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக  அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் ஆகியன கொண்டு சென்றுள்ளது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை எழுத்து மூல கோரிக்கை ஒன்றையும் நேற்று முன்வைத்துள்ளது.
அந்த கோரிக்கைகளில் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு நேரடியாக சவாலாக உள்ள விடயங்கள் தொடர்பில் அமைச்சர் எஸ். பி .திசாநாயகா சாதகமாக பதில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது.
ஆண் பெண் கலந்த உடல் பயிற்சி , முஸ்லிம் பெண்களின் உடை , வதிவிடம் , ஐந்து வேலை தொழுகை , ஜும்மாஹ் தொழுகை ஹலால் உணவு என்பன முஸ்லிம் மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இருக்க மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இராணுவ முகாம்களின் நடாத்தப்படுவது பொதுவான அனைத்து மாணவ மாணவர்களுக்குமான பிரச்சினையாக சுட்டிகாட்ட பட்டுவருகின்றது என்பது குறிபிடத்தக்கது .
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் எம்.பி. பீரிஸ் முஸ்லிம் மாணவர்கள் ஐந்து நேரமும் தொழுவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தமை குறிபிடத்தக்கது.
அதேவேளை , உடற் பயிற்சியின் போது முஸ்லிம் பெண் மாணவிகள் தமது கலாச்சாரத்தை பேணும் வகையிலான உடைகளை அணிய முடியும் என்றும் முஸ்லிம் மாணவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆ தொழுகையில் ஈடு பட எவ்வித இடையூறுகளும் இருக்க மாட்டாது என்றும் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்காக பிரத்தியேக வசதிகள் செய்து கொடுக்கப்படுமென்றும் உயர் கல்வி அமைச்சர் கூறி இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாதர் அணியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான    சல்மா ஹம்ஸா தெரிவித்துள்ளமையும்  குறிபிடத்தக்கது
இவர் A.H.M. பௌசி அவர்களிடம் இது தொடர்பாக எடுத்துரைத்த போது அமைச்சர் பௌசி மேற்படி கோரிக்கையை முன்வைத்து பின்வரும் விடயங்களில் உயர் கல்வி அமைச்சரிடம் இருந்து சாதகமான தீர்வு பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை எழுத்து மூல கோரிக்கை:

Saudi girl driving her car in Qatif - Saudi Arabia




Kingdom of Saudi Arabia Not Allowed to Drive Womens. This women is opposed the Government Rules.
What you Think About it??

தொடரும் ஆபிரிக்கா மீதான ஆக்கிரமிப்பும் பலியாகிப் போன லிபியாவும்


நல்லையா தயாபரன்
ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் போர்வையின் கீழ் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2003 மார்ச் 19இல் அந்த நாட்டில் விமானக் குண்டுவீச்சை ஆரம்பித்தார். 2011 மார்ச் 19ஆந் திகதி பிரான்ஸ், சரியாக எட்டு வருடங்கள் கழிந்தநிலையில், லிபியாவில் குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது இடம்பெறுகின்றதென்று மீண்டும் கூறப்படுகின்றது.
அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய் நோபல் சமாதானப் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஜனநாயகத்தை நிலைநாட்டவேநீர்மூழ்கிகளிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றார்.
லிபியாவுக்குப் பின்னர் மேற்குலகக் கூட்டணி அல்ஜீரியாவை ஆக்கிரமிக்குமென்பது இப்பொழுது அதிகரித்தவகையில் பிரத்தியட்சமாகவுள்ளது. ஏனெனில் அந்த நாடு தனது பாரிய சக்தி மூலவளங்களுக்கு மேலதிகமாக, சுமார் 150 பில்லியன் யுரோ பண ஒதுக்கீடுகளையும் கொண்டுள்ளது லிபியாமீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நாடுகளைக் கவர்ந்திழுப்பது இதுவேயாகும். அவையனைத்துக்கும் பொதுவான ஒரு விடயமுள்ளது
அவையனைத்துமே நடைமுறையில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஒருவரைத் திகைக்கவைக்கும் 14,000 பில்லியன் அமெரிக்க டாலர் கடனில் மூழ்கியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஒவ்வொன்றும் 2,000 பில்லியன் அமெரிக்க டாலர் வரவு-செலவுப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளன. இவற்றுடன் ஒப்பீடாக 45 ஆபிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்தப் கடன் 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவானதாகும்.
ஸ்பெயினில் அரச ஊழியர்களுக்கு இனிமேல் ஊதிய உயர்வு கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது. வேலையற்றோருக்கான உதவித் தொகை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. கிரேக்கம், அயர்லாந்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் அரசு மீள முடியாத கடன் நெருக்கடிக்கு உள்ளானது. உடனடித் தேவையாக 80 பில்லியன் யூரோக்கள் வழங்கப்படாவிட்டால் போர்ச்சுக்கல் நாடு நிலைகொள்ள முடியாது உருக்குலைந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் போராடிப்பெற்ற சமூகப் பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை அந்த நாட்டின் கூட்டரசாங்கம், ஒவ்வொன்றாக அழித்து வருவதற்கு எதிராக ஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு மூலையில் மக்கள் போராடுகிறார்கள். சுகாதார சேவை தனியார் மயமாக்கப்படு, மக்களின் உயிர் பொருளாதார நெருக்கடிக்குள் ஊசலாடுகிறது. உயர்கல்வி கற்றுக்கொள்ள இனிமேல் பணம்படைத்தவர்களால் தான் இயலும் என கூட்டரசாங்கம் கூச்சமின்றி ஒத்துக்கொள்கிறது.
அமெரிக்கா தன்னை உலகப் பொலிசாகவும் நியமித்துக் கொண்டு. யேமனிலும், பஹ்ரெய்னிலும், சவூதியிலும் நடந்து வரும் அரச எதிர்ப்பு எதிர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் அமெரிக்க ஆதரவு பெற்ற அடிவருடிகள் மிருகத்தனமாக ஒடுக்கிவரும் நிலையில், லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்ல. மூழ்கிக்கொண்டிருக்கும் தமது பொருளாதாரங்களுக்குப் புத்துயிரளிக்குமென்ற நோக்கில் ஆபிரிக்காவில் சந்தேகத்துக்கிடமான யுத்தங்களைத் தூண்டி உலகத்தினை மீண்டும் மறுபங்கீடு செய்து கொள்ள ஏகாதிபத்தியவாதிகளின் நவீன முயற்சிதான் லிபியா ஐவரிகோஸ்ட் போன்ற நாடுகளில் இன்று நடக்கும் யுத்தங்கள்.
இராணுவ நடவடிக்கையை அனுமதிக்கும் ஐ.நா. சட்டவரைவின் 7ஆம் பிரிவின்கீழ் இருக்கும் “அமைதியின் மீது அச்சுறுத்தல்கள்”, “தாக்குதல் நடவடிக்கைகள்” குறித்த தீர்மானங்கள், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் சியாரா லியோனில் நடத்தப்பட்ட இராணுவ தலையீடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. “பாதுகாக்கும் உரிமை” (Right to Protect – R2P)என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா. சபை அங்கீகாரம் அளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.”பாதுகாப்பதற்கான உரிமை” என்ற கோட்பாட்டு ஏகாதிபத்திய சக்திகளின் ஆயுதமாகி உள்ளது. ஏகாதிபத்திய கைப்பற்றல் மற்றும் ஏகாதிபத்திய சூறையாடல் போன்றவற்றின் ஒரு அங்கமாக இத்தாலி ஆக்கிரமித்த பிராந்தியமே பின்னர் லிபியாவாக மாறியது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட அட்டூழியமான குற்றங்களில் மிகவும் மோசமான ஒன்றாக 2003 ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு இருந்தது. ஓர் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவதும், திட்டமிடுவதும் யுத்தக்குற்றங்களிலேயே முதன்மையானதும், முக்கியமானதுமாகும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் இருந்துதான் மனிதயினத்திற்கு எதிரான ஏனைய குற்றங்கள் இரக்கமின்றி உருவாகின்றன என்றும் நூரெம்பேர்க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதன்படி, ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரதம மந்திரி டேவிட் கேமரோன், ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஆகியோர் கடாபி செய்துள்ள எவ்வித குற்றங்களையும் விட அதிகமான குற்றங்களைச் செய்துள்ள குற்றவாளிகளாக உள்ளனர். இலட்சக்கணக்கான ஈராக்கியர்களை பலியெடுத்த பின் தற்போது ஜனநாயகத்தின் பெயரால் ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார்.
ஏகாதிபத்திய நாடுகள் மற்றைய நாடுகளை வலிய யுத்தத்துக்கு அழைத்து அழிக்க முயலும் சரித்திரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மறுபங்கீடுக்கான முயற்சிகளில் ஏகாதிபத்தியங்கள் தோல்வியைத்தான் முடிவில் சந்திக்க போகின்றன. 1930களில் யப்பான் பெற்றோலியம், இறப்பர், தாதுப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இங்கிலாந்தும் அமெரிக்காவும் தடை விதித்து, அதன் மூலம் யப்பானை வலிந்து யுத்தத்துக்கு அழைத்து, இறுதியில் யப்பான் மீது அணுகுண்டுகளை வீசி யப்பானை அழித்தனர்.
ஆனால் அதிலிருந்து யப்பான் மீண்டுள் தளைத்து உலகின் பெரிய பொருளாதார தொழில்நுட்ப நாடாக மலர்ந்தது. தற்போது சீனாவின் பெற்றோலிய தேவைகட்கு தடைகளை ஏற்படுத்து சீனாவை யுத்தத்துக்கு அமெரிக்கா வலிய அழைக்கிறது. லிபியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் சீனாவின் உதவியோடு தற்போது நடக்கும் பெற்றோலிய அகழ்வுகளை நிறுத்தி சீனாவுக்கும் லிபியாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே தற்போது லிபியா மீது தாக்குதல்களை அமெரிக்கா நடாத்துகின்றது. ஆபிரிக்க பெற்றோலியம் உயர்தரமானவை மட்டுமல்ல அதை எடுப்பதும் சுலபமானதாகும். பெரும்பாலும் கடற்கரைக்கு அண்மையிலான படுகைகளில் இருந்தே எடுக்க முடியும் என்பதோடு, ஏற்கனவே இருக்கும் கடற்வழிகள் மூலமாகவே அதனை வினியோகிக்கவும் முடியும். சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது மட்டுமல்ல 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர்.
ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே ஈரான் மீதும் தாகுதல்களை மேற்கொள்ள அமெரிக்கா முஸ்தீபுகளை செய்து வருகின்றது. லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர். சென்ற 2010 அக்டோபர் மாதம் லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான், ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் லிபியாவில் இருந்து வெளியேற ஆரம்பித்துவிட்டன.
ஆனால் 1930களில் யப்பானை போருக்கு வலிய இங்கிலாந்தும் அமெரிக்காவும் அழைத்த போது யப்பானிடம் அணுகுண்டு இருக்க வில்லை. ஆனால் தற்போது சீனாவிடம் அணுகுண்டுகளும் உண்டும். அண்மையில் பாரிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது இங்கு குறிப்பிடத்தக்கது
ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் சாட்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2003 மார்ச் 19இல் அந்த நாட்டில் விமானக் குண்டுவீச்சை ஆரம்பித்தார். சரியாக எட்டு வருடங்கள் கழிந்தநிலையில், 2011 மார்ச் 19இல் லிபியாவில் பிரான்ஸ் குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது இடம்பெறுகின்றதென்று மீண்டும் கூறப்படுகின்றது. நோபல் சமாதானப் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சர்வாதிகாரியை அகற்றி, ஜனநாயகத்தை நிலைநாட்டவே நீர்மூழ்கிகளிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றார்.
தமது ஜனநாயக அந்தஸ்துகுறித்துப் பேசிக்கொண்டு, லிபியாமீது குண்டு வீசத் தமக்கு உரிமையுண்டென்று தெரிவிக்கும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, நோர்வே, டென்மார்க் மற்றும் போலந்து என்பவை உண்மையில் ஜனநாயக நாடுகளா? அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜனநாயத்தை ஏற்றுமதிசெய்வதாகக் கூறும் ஏனைய நாடுகளைவிடக் கடாபியின் லிபியா கூடுதலான ஜனநாயகத் தன்மையைக் கொண்டதாகும்.
மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதற்கு முன்னராக, ஒவ்வொருவரும் ஏனைய ஒவ்வொருவர் குறித்தும் நன்கு அறிந்திருப்பதை உறுதிசெய்தல் வேண்டும். இல்லையெனில், வாக்களிப்புக்கு எவ்வித ஜனநாயக அடிப்படையும் இருக்கமாட்டாது. அது ஒரு சர்வாதிகாரியைத் தெரிவுசெய்யும் ஜனநாயகத்தின் போலித் தோற்றமாகவே அமையும்.
லிபிய அரசு ஒரு பழங்குடிகள் கூட்டிணைவு முறைமை அடிப்படையில் அமைந்ததாகும். அது அதன் வரைவிலக்கணத்தின் பிரகாரம் மக்களைச் சிறிய தனியமைப்புகளாகக் குழுநிலைப்படுத்துகின்றது. ஒரு குல மரபுக்குழு அல்லது ஒரு கிராமம் ஒரு தேசத்தைவிடக் கூடுதலான ஜனநாயக உணர்வைக் கொண்டதாகும். இதற்கான மிக எளிமையான காரணம் மக்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருப்பதும், அங்கத்தவர்களின் தாக்கங்களும், பிரதித் தாக்கங்களும் குழுமீது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவகையில் ஒருவகையான சுய-பிரமாணப்படுத்தலையும், சுய-தணிக்கையையும் கொண்டிருக்கும் ஒரு பொதுவான வாழ்க்கை ஒத்திசைவு நயத்தைப் பகிர்ந்துகொள்வதுமாகும்.
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உள்ள சமூகங்கள் அனைத்தும் பெருமளவுக்கு நகர்மயப்படுத்தப்பட்டவை என்பதோடு, அனேகமான அயலவர்கள் இருபது வருட காலம் அருகருகே வசித்தபோதிலும் ஒருவரையொருவர் அறியாதவர்களாக, பேசாதவர்களாக உள்ளனர் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நாடுகள் ‘வாக்கு’ எனப்படும் அடுத்த படிநிலைக்குப் பாய்ந்து வந்தவையாகும்.
வாக்கு என்பது புனிதநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாக்காளர் ஏனைய பிரஜைகளை அறிந்திராவிடில், நாட்டின் எதிர்காலம்குறித்து வாக்களிப்பதில் புண்ணியமில்லையென்ற விடயம் தெளிவாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாடுகளில் வசிப்போருக்கும் வாக்குரிமை வழங்குமளவுக்கு எள்ளிநகையாடும் அளவுக்குச் சென்றுள்ளது. தேர்தலொன்றுக்கு முன்னர் இடம்பெறும் எந்த ஜனநாயக விவாதத்துக்கும் ஒருவரோடொருவரும், ஒவ்வொருவரிடையிலும் தொடர்பாடல் என்பது ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும்.
ஒரு பெரிய, சிக்கலான சமூகத்தில் தவிர்க்கமுடியாதவாறு எழக்கூடிய ஆயிரக்கணக்கான நலன் முரண்பாடுகளைக் கையாளும்வகையில் எழக்கூடிய சட்ட மற்றும் நீதிசார் நடவடிக்கைமுறைகளை விவாதிப்பதற்குச் செலவழிக்கவேண்டிய பெருமளவிலான நேரத்தைச் சேமிக்கவேண்டுமாயின், வழங்கங்கள் மற்றும் நடத்தைப் பாங்குகளில் எளிமை அவசியமாகும். மேற்குலக நாடுகள் தம்மை மேலும் சிக்கலான சமூகக் கட்டமைப்பைக்கொண்ட நாகரிகமடைந்த தேசங்களென்று அழைத்துக் கொள்ளுகின்றன. அதேவேளையில் லிபியா ஓர் எளிமையான வழக்கங்கள் தொகுதியைக் கொண்ட, நாகரிக முதிர்ச்சியற்ற பழங்காலச் சமூகமாகக் கருதப்படுகின்றது. இந்த அம்சம்கூட லிபியா ஜனநாயகத்தில் பாடம் வழங்க முயலும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேலும் சிறந்தமுறையில் ஜனநாயகம்குறித்த அளவுகோல்களுடன் பொருந்தியமைகின்றது என்பதைக் காட்டுகின்றது. சிக்கலான சமூகங்களில் எழும் முரண்பாடுகளில் அனேகமான சந்தர்ப்பங்களில் அதிகார வலுக்கொண்டவர்களே வெற்றியடைகின்றனர்.
இதனாலேயே பணக்காரர்கள் சிறைவாசத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ளுகின்றனர். வங்கியொன்றை நாசமாக்கிய நிதியியல் குற்றவாளியொருவர் தப்பிச்செல்வதற்கும், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாழைப்பழமொன்றைத் திருடியவர்மீது அரச அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, நியூயோர்க் நகரத்தின் ஜனத்தொகையில் 75%ஆனோர் வெள்ளையினத்தோராவர். 80%ஆன முகாமைத்துவப் பதவிகளில் அவர்களே உள்ளனர். ஆயினும் சிறைகளிலுள்ளவர்களில் 20%ஆனோர் மாத்திரமே வெள்ளையர்களாகவுள்ளனர்.
அந்தஸ்திலும், செல்வத்திலும் மக்களிடையே பாரிய வேறுபாட்டை உடைய நாடுகள்தான் தற்போது லிபியாவில் குண்டுவீசிக்கொண்டிருக்கின்றன, ஜனநாயகத்தைக் கொண்டுவருவதாகப் பீற்றிக்கொள்ளும் நாடுகளைவிட லிபியா கூடுதலான அளவுக்கு ஜனநாயகத்தைக் கொண்டதாகும். உண்மையான ஜனநாயகம் இருக்கவேண்டுமாயின் ஆடம்பரப் பொருட்கள் இருத்தலாகாது. ‘சுகபோகப் பொருட்கள் செல்வத்தை அவசியப்படுத்துகின்றன. இதனால் செல்வம் தன்னளவிலேயே ஒரு தகுதியாகின்றது. இதனால் மக்களின் நலன் என்பது என்ன விலை கொடுத்தும் வாங்க வேண்டிய ஒரு விடயம் அல்லவென்னும் நிலை ஏற்படுகின்றது. ஆடம்பரப் பொருட்கள் செல்வந்தர்களையும், ஏழைகளையும் ஊழல் நிலைக்குத் தள்ளிக் கெடுக்கின்றன.
செல்வந்தர்கள் ஆடம்பரப் பொருட்களை வைத்திருப்பதாலும், ஏழைகள் பொறாமையாலும் கெட்டுப்போகின்றனர். அது தேசத்தின் வலிமையைக் குறைக்கின்றது. வீண் ஆடம்ப உணர்வுக்கு அடிமையாக்குகின்றது. அது மக்களை அரசிலிருந்து தொலைவுக்குத் தள்ளி, அவர்களை அடிமையாக்குகின்றது. அவர்கள் அபிப்பிராயங்களின் அடிமைகளாகின்றனர்.அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களில் அதியுயர் பதவியில் இருக்கும் ஒரு சிலரின் ஆடம்பர வாழ்வுக்காக, இலாபங்களை அதியுயர்வாக்குதல் என்ற பெயரில், மனப்பதற்றம் ஏற்படுத்தும் மோசமான வேலை நிலைமைகள் காரணமாக ஊழியர்கள் தற்கொலைசெய்யும் அறிக்கைகள் மேற்குலக நாடுகளில் வெளிவருகின்றன. இவை லிபியாவில் இடம்பெறுவதில்லை.
பதினொரு வருடங்களுக்கு முன்னர் டோகோளிஸ் குடியரசில் நடைபெற்ற லோம் உச்சிமாநாடு ஆபிரிக்க யூனியனின் குறிக்கோள்கள், கோட்பாடுகள் மற்றும் அங்கங்களைக் குறித்துரைக்கும் ஆபிரிக்க யூனியன் அமைப்பியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இச்சட்டத்தில் 27 ஆபிரிக்க நாடுகள் கையொப்பமிட்டிருந்தன. இது பரந்த வகையிலான பல நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு வழிசெய்திருந்தது. தனி ஆபிரிக்கப் பாராளுமன்றம், நீதிமன்றம், ஆபிரிக்க மத்திய வங்கி, ஆபிரிக்க நாணய நிதியம் மற்றும் ஆபிரிக்க முதலீட்டு வங்கி என்பவை இவற்றுள் அடங்கும்.
2005இல் ஆபிரிக்க யூனியன் எதியோப்பியா, அடிஸ் அபாபாவில் இந்த மூன்று நிறுவனங்கள் சம்பந்தமாக ஆபிரிக்க யூனியன் ஆணைக்குழு(AUC)வினால் தயாரிக்கப்பட்ட கருப்பொருள் அறிக்கைகள் மற்றும் வரைபு மரபுடன்படிக்கைகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர்களின் கூட்டமொன்றை நடத்தியது. ஆபிரிக்க யூனியன் ஆபிரிக்க மத்திய வங்கி (நைஜீரியா), ஆபிரிக்க முதலீட்டு வங்கி (லிபியா) மற்றும் ஆபிரிக்க நாணய நிதியம் (மத்திய ஆபிரிக்கா) ஆகிய நிதியியல் நிறுவனங்களுக்கான ஆசனங்களையும் தீர்மானித்தது.
ஆபிரிக்க நாணய நிதியம், காலப்போக்கில் அதன் பொறுப்புகள் ஆபிரிக்க மத்திய வங்கிக்கு மாற்றப்படுமென்றபோதிலும், ஓர் ஆபிரிக்க யூனியன் நிதி நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனம் எதிர்கால ஆபிரிக்க யூனியனின் மூன்று நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். இது கமரூனில், யாவோன்டேயைத் தளமாகக் கொண்டு இயங்கும்.ஆபிரிக்க மத்திய வங்கி (ACB) ஆபிரிக்க நிதி நிறுவனங்கள் மூன்றில் ஒன்றாகும். இது காலப்போக்கில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்.
1991 அபூஜா சர்வதேச உடன்படிக்கையில் ஆபிரிக்க மத்திய வங்கியின் உருவாக்கம்குறித்து உடன்பாடு காணப்பட்டிருந்தது. இது 2028இல் நிறைவடைதல் வேண்டும். 1999 சேர்ட்டி பிரகடனம் இச்செயல்முறை விரைவுபடுத்தப்பட்டு 2020 அளவில் உருவாக்கம் இடம்பெற வேண்டுமென்று அழைப்புவிடுத்தது. தனி ஆபிரிக்கப் பாராளுமன்றச் சட்டவாக்கத்தினூடாக இது பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டதும், ஆபிரிக்க மத்திய வங்கியே ஆபிரிக்கத் தனி நாணயத்தை வெளியிடும் நிறுவனமாகவும், ஆபிரிக்க அரசாங்கத்தின் வங்கியாளராகவும், ஆபிரிக்காவின் தனியார் மற்றும் பொது வங்கித்தொழில் நிறுவனங்களின் வங்கியாளராகவும் விளங்குவதோடு, ஆபிரிக்க வங்கிக் கைத்தொழிலைப் பிரமாணப்படுத்தி, மேற்பார்வை செய்யும் அமைப்பாகவும் விளங்கும். அது உத்தியோகபூர்வ வட்டி மற்றும் பரிவர்த்தனை வீதங்களை நிர்ணயிக்கும். இது ஆபிரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இக்கருமங்களை மேற்கொள்ளும்.
ஆபிரிக்க முதலீட்டு வங்கி AIB ஆபிரிக்க யூனியனின் மூன்று நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். ஏனைய இரண்டும் ஆபிரிக்க நாணய நிதியமும், ஆபிரிக்க மத்திய வங்கியுமாகும். ஆபிரிக்க முதலீட்டு வங்கி லிபியாவில், திரிப்பொலியில் தனது தலைமையகத்தைக் கொண்டிருக்கும். அது 2007 ஏப்ரில் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஒபாமாவினால் முடக்கப்பட்டிருக்கும் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களும் லிபியன் மத்திய வங்கிக்குச் சொந்தமானதாகும். இத்தொகை ஆபிரிக்க சமஷ;டி அமைப்புக்கு இறுதி வடிவம் வழங்கும் மூன்று முக்கிய கருத்திட்டங்களுக்கு லிபியாவின் பங்களிப்பாகுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவை லிபியா, சேர்ட்டியிலுள்ள ஆபிரிக்க முதலீட்டு வங்கி, யாவோன்டேயில் 42 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதன நிதியுடன் 2011இல் தாபிக்கப்படவிருந்த ஆபிரிக்க நாணய நிதியம் மற்றும் நைஜீரியா, அபூஜாவிலுள்ள ஆபிரிக்க மத்திய வங்கி என்பவையாகும். ஆபிரிக்க மத்திய வங்கி ஆபிரிக்க நாணயத்தை அச்சிடத் தொடங்கும்போது அது பாரிஸ் கடந்த 50 வருட காலமாகச் சில ஆபிரிக்க தேசங்கள்மீது தனது பிடியைப் பேணுவதற்கு உதவிகரமாகவிருந்த Colonies françaises d’Afrique FRANC பிராங் மீது விழும் மரண அடியாகவிருக்கும். இதிலிருந்து கடாபிமீது பிரான்சுக்குள்ள கோபத்தைப் புரிந்துகொள்வது இலகுவானதாகும்.
சர்வதேச நாணய நிதியம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்தொகையை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு முழுக் கண்டத்தை முழந்தாழிட வைத்துள்ளது. அது ஆபிரிக்க தேசங்களை அரச ஏகபோக நிறுவனங்களைத் தனியார் ஏகபோக நிறுவனங்களாக மாற்றுவதுபோன்ற கேள்விக்கிடமான தனியார்மயமாக்கல்களுக்குச் சம்மதிக்க வைத்துள்ளது. ஆகவே, 2010 டிசம்பர் 16–17இல் ஆபிரிக்க நாடுகள் மேற்குலக நாடுகள் ஆபிரிக்க நாணய நிதியத்தில் இணைந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகமனதாக எதிர்ப்புத் தெரிவித்தமை ஆச்சரியமூட்டுவதன்று. அந்த உரிமை ஆபிரிக்கத் தேசங்களுக்கு மாத்திரமே உரியதென்று அவை கூறிவிட்டன.
இன்றைய நவீன யுகத்தில் முழு ஆபிரிக்கக் கண்டத்தையும் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைமருத்துவம் மற்றும் தொலைக்கல்வி போன்ற வேறு பல தொழில்நுட்பப் பிரயோகங்கள்மூலம் முன்னேற்றியது கடாபியின் லிபியா ஆகும். Worldwide Interoperability for Microwave Access எனப்படும் மைக்ரோவேவ் பிரவேசத்துக்கான உலகளாவிய சர்வநிலைச் செயற்பாடு வானொலிப் பாலத்தின் காரணமாக கிராமியப் பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் முழு ஆபிரிக்கக் கண்டத்தின் மக்களுக்கும் குறைந்த செலவிலான இணைப்பு வசதிகள் கிட்ட வழி செய்தது கடாபியின் லிபியாவேதான் 1992இல் 45 ஆபிரிக்கத் தேசங்கள் Regional African Satellite Communication Organization (பிராந்திய ஆபிரிக்க செய்மதித் தொடர்பாடல் அமைப்பு) அமைப்பைத் தாபித்ததே இதட்கு வழி கோலியது .இதன்மூலம் ஆபிரிக்காவுக்குத் தனது சொந்தச் செய்மதி கிடைப்பதோடு, ஆபிரிக்கக் கண்டத்தில் தொலைத்தொடர்பு செலவுகளும் வெகுவாகக் குறைவடைந்தன.
கடந்த காலங்களில் ஆபிரிக்காவிலிருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் தொலைபேசி அழைப்புகள் உலகிலேயே மிகவும் செலவு நிறைந்தவையாகவிருந்தன. தொலைபேசி உரையாடல்களுக்காக, உள்நாட்டு தொலைதூர தொலைபேசி உரையாடல் உள்ளிட்டவகையில் INTELSAT போன்ற ஐரோப்பிய செய்மதிகளின் பயன்பாட்டுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் வருடாந்தம் 500 மில்லியன யுரோவை அறவிட்டுக் கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும்.
ஓர் ஆபிரிக்கச் செய்மதியின் கிரயம் ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் 400 மில்லியன் யுரோ மாத்திரமேயாகுமென்பதோடு, ஆபிரிக்கக் கண்டம் இதற்குமேலும் 500 மில்லியன யுரோவை வருடாந்தக் குத்தகையாகச் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லாதுபோய்விடும் கருத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க ஒரு வங்கி கூட முன்வரவில்லை. உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் 14 வருட காலமாகத் தட்டிக்கழிக்கும்விதமான வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கிவந்தது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. மேற்கத்தைய கடூர வட்டியில் கடன் கொடுப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட இக்கெஞ்சல்களுக்கு கடாபி முற்றுப்புள்ளி வைத்தார். லிபியா 300 மில்லியன யுரோவை வழங்கியது. ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி மேலும் 50 மில்லியன யுரோவை வழங்கியது. மேற்கு ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி மேலும் 27 மில்லியன யுரோவை வழங்கியது. இவ்வாறாகவே ஆபிரிக்கா தனது முதலாவது தொடர்பாடல் செய்மதி RASCOM-QAF1ஐ 2007 டிசம்பர் 26ஆந் திகதி பெற்றுக்கொண்டது.
சீனாவும், ரஷ்யாவும் இதைத்தொடர்ந்து ஆபிரிக்காவுடன் தமது தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொண்டதோடு, தென்னாபிரிக்கா, நைஜீரியா, அங்கோலா மற்றும் அல்ஜீரியாவுக்குச் செய்மதிகளை விண்ணில் செலுத்த உதவின. 2010 ஜுலையில் ஆபிரிக்கா தனது இரண்டாவது செய்மதி RASCOM-QAF1Rயும் விண்ணில் செலுத்தியது. முழுக்க முழுக்கச் ஆபிரிக்க சுதேசிகளால் உருவாக்கப்பட்டதும், அல்ஜீரியாவில் ஆபிரிக்க மண்ணில் தயாரிக்கப்பட்டதுமான முதலாவது செய்மதி 2020இல் விண்ணில் ஏவப்படவுள்ளது. இச்செய்மதி உலகிலுள்ள மிகச்சிறந்த செய்மதிகளுடன் போட்டியிடுமென்றும், அதன் ஆகுசெலவு அவற்றைவிடப் பத்து மடங்கு குறைவாக இருக்குமென்றும் இருக்கும் எதிர்பார்ப்பு சவால்நிறைந்த ஒன்றாகும்.
இவ்வாறுதான் வெறுமனே 300 மில்லியன யுரோவைக்கொண்ட ஓர் அடையாள நகர்வு ஒரு இருண்ட கண்டத்தின் வாழ்வையே மாற்றியமைத்தது. கடாபியின் லிபியா மேற்குலகத்துக்கு வருடாந்தம் 500 மில்லியன யுரோவை மாத்திரம் இல்லாமற்செய்யவில்லை. ஆரம்பக்கடன் வரவிருக்கும் பல வருட காலங்களுக்கு கடன் என்றவகையிலும், வட்டியென்றவகையிலும் பிறப்பிக்கும் பல பில்லியன் கணக்கிலான டொலர்களையும், ஆபிரிக்கக் கண்டத்தைக் கொள்ளையடிப்பதற்கு மறைவியலான ஒரு முறைமையைப் பேணுவதற்கான உதவியையும் கடாபி எடுத்துக்காட்டானவகையில் இல்லாமற்செய்துள்ளார்.
மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரையில்) மிகவும் அபாயகரமானமுறையில் கடாபியின் வழிகாட்டலின்கீழ் ஓர் ஆபிரிக்க ஐக்கிய இராச்சியத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆபிரிக்க யூனியனின் ஸ்திர நிலையைக் குலைத்து, அதை அழிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முதலில் மத்தியதரை (மெடிற்றரேனியன்) யூனியன் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அது வெற்றியளிக்கவில்லை. வட ஆபிரிக்காவை எந்த வழியிலேனும் ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளிலிருந்து பிரிக்கவேண்டியிருந்தது. இதற்கு அரபு வம்சாவளி ஆபிரிக்கர்கள் ஏனைய ஆபிரிக்கர்களைவிடப் பரிணாம வளர்ச்சியிலும், நாகரிகத்திலும் உயர்ந்தவர்களென்று தெரிவிக்கும் பழைய, 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளின் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டன. கடாபி இதை நிராகரித்தமையால் இது தோல்விகண்டது. மெடிற்றரேனியன் குழுவில் இணைந்துகொள்வதற்கு ஆபிரிக்க யூனியனுக்கு அறிவிக்காதநிலையில் ஒருசில ஆபிரிக்கத் தேசங்களே அழைக்கப்பட்டிருந்ததாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல 27 தேசங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாலும் எத்தகைய விளையாட்டு இடம்பெறுகின்றது என்பதை அவர் புரிந்துகொண்டார்.
ஆபிரிக்க சம்மேளனத்தை முன்னேசெலுத்தும் சக்தி இல்லாதநிலையில் மெடிற்றரேனியன்) யூனியன் ஆரம்பிக்கு முன்னரே தோல்வியைத் தழுவியது. பிரான்சின் ஜனாதிபதி சார்க்கோஸியைத் தலைவராகவும், எகிப்தின் ஜனாதிபதி முபாரக்கை உப-தலைவராகவும் ஏற்றநிலையில் அது குறைப்பிரசவமானது. பிரான்சின் வெளிநாட்டமைச்சர் அலெயின் ஜுப்பே, கடாபி வீழ்ந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இந்த யோசனையை மீண்டும் முன்னெடுக்க முயற்சிக்கின்றார். ஆபிரிக்க யூனியனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிப்பது தொடரும்வரையில் தற்போதுள்ள நிலையே தொடரும் என்பதையும், உண்மையான சுதந்திரம் இருக்காது என்பதையும் ஆபிரிக்கத் தலைவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர். இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியம் ஆபிரிக்காவில் பிராந்தியக் குழுக்களுக்கு ஊக்குவிப்பும், நிதியளிப்பும் வழங்கிவருகின்றது.
பிரசல்ஸில் ஒரு தூதரகத்தைக் கொண்டுள்ளதும், நிதியளிப்புக்குப் பெருமளவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கிநிற்பதுமான மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமூகம் ஆபிரிக்க சமஷ்டி அமைப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பது பிரத்தியட்சமானதாகும். இத்தகைய ஒரு காரணத்துக்காகவே ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கப் பிரிவினை யுத்தத்தில் போராடினார். ஒரு குழுவான நாடுகள் ஒரு பிராந்திய அரசியல் அமைப்பினுள் ஒன்றுசேர்ந்ததும், அது பிரதான குழுவைப் பலவீனப்படுத்துவதே இதற்கான காரணமாகும். இதையே ஐரோப்பாவும் விரும்பியது. போன்ற பெரும் எண்ணிக்கையிலான COMESA, UDEAC, SADC பிராந்தியக் கூட்டுகளை உருவாக்கும் ஆபிரிக்கர்கள் இந்தத் திட்டத்தை ஒருபோதும் அறிந்துகொள்ளவில்லை. பாரிய வட ஆபிரிக்க கூட்டு என்பது கடாபியின் மதிநுட்பத்தால் தோற்றம்பெறவேயில்லை.
ஆபிரிக்கர்களைப் பொறுத்தவரையில் கடாபி ஒரு தயாள சிந்தையும், மனிதாபிமானமும் உள்ள, தென்னாபிரிக்க இனவெறி ஆட்சிக்குழுவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலம்பாராது ஆதரவு வழங்கிய ஒருவராவார். அவர் ஒரு சுயநலவாதியாக இருந்திருப்பின் நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸுக்கு இராணுவரீதியாகவும், நிதியியல்ரீதியாகவும் உதவிசெய்து மேற்குலகத்தின் கோபம் என்னும் இடர்வரவை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்.
இதனால்தான் நெல்சன் மன்டேலா தனது 27 வருடகாலச் சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலையடைந்ததும், 1997 அக்டோபர் 23ஆந் திகதி ஐ.நா. தடையையும் மீறி லிபியாவுக்குப் பயணஞ்செய்யத் தீர்மானித்தார். இத்தடை காரணமாக 5 வருடகாலமாக எந்த விமானமும் லிபியாவில் தரையிறங்க முடியவில்லை. ஒருவர் டுனீசிய நகரமாகிய ஜெர்பாவுக்குப் பயணஞ்செய்து, வீதியால் 5 மணித்தியாலங்கள் பிரயாணம்செய்து, பென் கார்டெனுக்குச் சென்று, எல்லையைக் கடந்து பாலைவன வீதியில் 3 மணித்தியாலங்கள் பிரயாணம்செய்து திரிப்பொலியை அடைதல் வேண்டும். இன்னுமொரு வழி மோல்ட்டாவினூடாகச் சென்று, மோசமான படகுகளில் இரவில் பாதைச் சேவையில் லிபியன் கரையை அண்மிக்கவேண்டும்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் இந்த விஜயம் ‘வரவேற்கத்தக்க ஒன்றல்ல’ என்று கூறியபோது, மன்டேலா அதற்குத் தக்க பதிலை வழங்கினார்.’எந்த நாடுமே தான் உலகின் பொலீஸ்காரன் என்று கூறுவதற்கு உரிமை கிடையாது. ஓர் அரசு என்ன செய்யவேண்டுமென்று கூறும் உரிமையும் இன்னுமோர் அரசுக்குக் கிடையாது’. மேலும் அவர், ‘நேற்று எமது எதிரிகளின் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று துணிவுடன் நான் எனது சகோதரன் கடாபியைப் போய்ப் பார்க்கக்கூடாதென்று சொல்லுகின்றனர். எம்மை நன்றியற்றவர்களாகவும், எமது கடந்தகால நண்பர்களை மறந்தவர்களாகவும் இருக்குமாறு புத்திமதி கூறுகின்றனர்’ என்று கூறினார்.
கடந்தகாலத்தில் மன்டேலாவின் எதிரிகளுக்கு ஆதரவளித்தமைகுறித்து மேற்குலகம் உண்மையில் வருந்தினால், அவரின் பெயரைத் தெருக்களுக்கும், இடங்களுக்கும் நேர்மையாக வழங்குவதாகவிருந்தால், மன்டேலாவும் அவரின் மக்களும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உதவிய கடாபிமீது தொடர்ச்சியாகப் போர் புரிவது எவ்வாறு?
போர்களின் ‘நன்மைகளை’ ஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் சாதாரண மக்களின் தலையில் விலைவாசி உயர்வு என்ற பெயரில் சுமத்தப்படுகிறது.ஒவ்வொரு முறை பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதன் மூலம் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமாக உலக மக்கள் அனைவரின் தலைமேல் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக எங்களுடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு லிபியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது.

கற்பிட்டி அரச காணிகள் பறிபோகின்றது: நியாஸ்


அதிகமான மக்கள் செறிந்து வாழும் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள அரச காணிகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பவர்கள் புத்தளம் மாவட்டத்திற்கு வெளியே உள்ள பெரும் வர்த்தகர்களே என முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்துள்ளார் .
அரசாங்கத்தினால் கற்பிட்டி பிரதேசம் சுற்றுலா வலயமாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதனால் கற்பிட்டி பகுதியில் ஹோட்டல்களை அமைப்பதற்கு பல வர்த்தகர்கள் முண்டியடிக்கிறார்கள். அந்தந்தப்பகுதிகளிலுள்ள காணிகளை எவ்வளவு விலை கொடுத்தாவது பெறுவதற்கும் அவர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். இந்நிலையில் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள இனங்காணப்பட்ட அரச காணிகள் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் புத்தளத்திற்கு வெளியே உள்ளவர்கள்  வர்த்தகர்களுக்கு விற்கப்படுகிறது.
கற்பிட்டியில் மாத்திரமின்றி புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல குடும்பங்கள் வீடொன்றை கட்டுவதற்குக் கூட காணியொன்று இல்லாமல் பல கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். எனவே இவ்வாறு இனங்காணப்பட்ட அரச காணிகளை சுற்றுலா வலயம் என்ற போர்வையில் வெளியேயுள்ளவர்களுக்கு கொடுப்பதனை தடுத்து நிறுத்தி அதனை ஏழை மக்களுக்கு பிரித்துக் கொடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
அது மட்டுமன்றி “ஸ்பெஷல் பீப்பிள் ஒப் கற்பிட்டிய’ என்ற விசேட குழுவொன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக் குழுவிலுள்ள அனைவரும் புத்தளத்திற்கு வெளியே இருக்கின்றவர்களே. ஒருவரேனும் புத்தளத்தையோ அல்லது கற்பிட்டியையோ சேர்ந்தவர்கள் அல்ல.
எனவே இவ்வாறு புத்தளத்திற்கு வெளியே உள்ளவர்கள் எமது வளங்களைச் சுரண்டிச் செல்வதற்கு இடமளிக்காது எமது வளங்களை நாமே ஆள வேண்டும் என்ற சிந்தனையில் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள அரச காணிகளையும் பொது மக்களின் வளங்களையும் சூறையாடுவதை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் சகல பேதங்களையும் மறந்து முன்வரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சல்மான் ருஸ்தியின் நடுநிசி சிறுவர்கள் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது


சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற கதையை இலங்கையில் இரகசியமாக படமாக்கப் பட்டு விட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளது கடந்த மார்ச் மாதம் இலங்கையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டது இதற்கு ஈரானின் தலையீடு இருந்ததாக இயக்குனர் தீபா மேத்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்தவை தொடர்பு கொண்ட போது அவர் இரு தரப்பு விடையங்களையும் கேட்ட பின்னர் படப்பிடிப்பை தொடருமாறு கோரியதாகவும் தற்போது படமாக்கும் வேலைகள் இலங்கையில் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்ததாக சர்வதேச செய்திகளை ஆதாரம் காட்டி இலங்கையில் ஆங்கில செய்திகள் வெளியாகியுள்ளன படமாக்கல் நிறைவு பெற்றுள்ளதை இலங்கையில் இந்த படம் தயாரிப்புக்கு பொறுப்பான தி பிலிம் டீம் பிரைவட் லிமிட்டட் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த படத்தை சர்வதேச விற்பனை முகவரான FilmNation கம்பெனி அனுசரணையில் கனடாவில் பிரஜா உரிமை பெற்றுள்ள இந்திய பிரபல இயக்குனர் தீபா மேத்தாவும் சல்மான் ருஸ்தியும் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கிவருவதாகவும் பல இந்திய நடிகர்கள் ஷ்ரியா சரண் ,சீமா பிஸ்வாஸ், ஷாபானா அஸ்மி ,சித்தார்த் சூரியநாராயண் ஆகியோர் பங்கு கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக மனித சமுகத்துக்கு இறுதி தூதுவராக அனுப்பப்பட்ட இறைவனின் இறுதி தூதரையும் இஸ்லாத்தையும் அறிவுக்கு புரம்பான கற்பனைகளை அடிப்படையாக கொண்டு தனது விமர்சனங்கள் என்ற பெயரில் கற்பனை குப்பைகளை உலகிற்கு வழங்கிய சல்மான் ருஸ்தி எழுதிய மற்றுமொரு கதைதான் நடுநிசி சிறுவர்கள் Midnight’s Children- என்ற கதையை படமாக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
1990 களில் BBC நிறுவனம் இந்த கதையை தான் ஐந்து குறுந்தொடர்களாக படமாக்க முயற்சிகளை மேற்கொண்டது இந்த படமாக்கும் வேலையை இலங்கையில் அனுமதி பெற்று தொடங்கிய நிலையில் இலங்கை முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இலங்கையில் படமாக்க வழங்கப்பட்ட அனுமதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கத்தினால் மீள பெறப்பட்டது இதை தொடர்ந்து BBC நிறுவனம் அந்த படமாக்கல் முயற்சியை கைவிட்டது .
இது தொடர்பான இந்தய  ஆங்கில  செய்தி:

Mehta wraps shooting of ‘Midnight’s Children’

இது தொடர்பான எமது முந்திய செய்தி :

இலங்கையில் மீண்டும் சல்மான் ருஸ்தி கதை படமாக்கம் !!

May 20, 2011

பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் சீனா மீது நடத்துவது போன்றது: சீன அமைச்சர்

பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் சீனா மீது நடத்துவது போன்றது. பாகிஸ்தான் நாட்டின் இறையாண்மைக்கு அமெரிக்கா மதிப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
வாஷிங்டனில் கடந்த வாரம் அமெரிக்கா-சீனா இடையே பொருளாதார மற்றும் இரு நாட்டு உறவுகள் தொடர்பான பேச்சு வார்த்தை நடந்தது. இதில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது பாகிஸ்தான் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அமெரிக்கா மரியாதை அளிக்க வேண்டும்.
"பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும் சீனா மீது நடத்தப்படுவது போன்றது" என்று அமெரிக்க பிரதிநிதியிடம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்ததாக தி நியூ டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் இடையே நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது பாகிஸ்தான் மீதான அமெரிக்கா தாக்குதல் பற்றி வாஷிங்டனில் நடந்த பேச்சு வார்த்தையின் போது அந்நாட்டிடம் எடுத்துரைக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியிடம் சீன பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்தார்.
இரு நாட்டு பிரதிநிதிகள் மற்றும் பிரதமர்கள் கலந்து கொண்ட கூட்டம் 45 நிமிடம் நீடித்தது. இதில் இரு நாட்டு உறவுகள், பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் சீனா வழங்கும் என்று கிலானிக்கு வென் ஜியாபோ உறுதி அளித்தார்.
இக்கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானி அளித்த பேட்டியில் கூறியதாவது: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் தியாகத்தை சீனா அங்கீகரித்துள்ளது. சர்வதேச அளவில் பாகிஸ்தானின் இந்த நோக்கத்திற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது. தைவான், திபெத் தொடர்பான சீனாவின் கொள்கைகளை ஆதரிக்கிறோம். ஐ.நா மறுசீரமைப்பு தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து ஆலோசிக்கும். பாகிஸ்தானில் இரு நாடுகளும் இணைந்து அணு சக்தி, மின்சாரம் உட்பட பல்வேறு மின் உற்பத்திகளை நீண்ட கால திட்ட அடிப்படையில் மேற்கொள்ளும். இவ்வாறு கிலானி கூறினார்.
சீன பிரதமர் வென் ஜியாபோ கூறியதாவது: பாகிஸ்தான் வரலாற்றிலேயே தற்போது அந்நாடு இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் விரைவில் சிறப்பு பிரதிநிதிகள் கொண்ட குழு இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இரு நாடுகள் இடையிலான 60 ஆண்டுகள் உறவை கொண்டாடும் வகையில் சீனாவின் மூத்த அமைச்சர் இந்த குழுவில் பங்கு பெறுவார்.

மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை


பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறானதொரு திட்டம் உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல் தொடர்பாக அரசமைப்பிலோ, பல்கலைக்கழக சட்டத்திலோ, சர்வதேச மனித உரிமை பட்டயத்திலோ எதுவும் இல்லை. இப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றுத் தெரிவித்துள்ளார்
ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற போது . இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது .
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவ்வாறான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினால் அதனை சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டும். மாறாகத் தன் விருப்பின் பேரில் அரசு நினைத்ததை நடத்தி பல்கலை மாணவர்களின் எதிர்காலத்தை இருளாக்க இடமளிக்க முடியாது. சட்டங்களுக்கு முரணாக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றமை இதன் மூலம் விளங்குகிறது.இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் சென்று இந்தப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை இன மாணவர்கள் உளரீதியாகப் பாதிப்படைவார்கள். அத்துடன், இராணுவப் பயிற்சி தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கும், மக்களுக்கும் எவ்வித அறிவித்தலையும் அரசு விடுக்கவில்லை.
பல்கலை மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதன் ஊடாக அவர்கள் மத்தியில் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பலாம் என்று ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது ஒரு வேடிக்கையான கதையாகும். ஏனென்றால் இன்று நாட்டில் உள்ள ஆட்சியாளர்களிடம் ஒழுக்கம் உள்ளதா? அவர்களுக்கு ஒழுக்கம் என்ற ஒன்று இருக்குமானால் நிச்சயமாக நாட்டு மக்களும், மாணவர்களும் ஒழுக்கமாக செயற்படுவார்கள். மாறாக, ஆட்சியாளர்களுக்கு ஒழுக்கம் இல்லாமல் மாணவர்களுக்கு ஒழுக்கத்தைத் திணிப்பது எப்படி?
இலங்கையில் அரச தீவிர வாதம் நடைமுறையில் உள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட சர்வதேச நாடுகள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறு இருக்க, பல்கலை மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தால் சர்வதேசம் கூறும் விடயம் உண்மையாகிவிடும்.இப்படி அவர் கூறியுள்ளார் .

இராணுவப்பயிற்சியல்ல ஆளுமைப் பயிற்சியே வழங்கப்படும்


பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அன்றி சிறந்த எதிர்காலத் தலைவர்க ளாக மாற்றுவதற்கான ஆளுமை பயிற்சியே வழங்கப்படுகிறது.ஆளுமை விருத்தி, திறன் விருத்தி, தலைமைத்துவம், வரலாறு, சமூக ரீதியான பழக்கவழக்கங்கள், பாலியல் ரீதியான வன்முறைகள், சட்டம் ஒழுங்கு, தேக ஆரோக்கியம் உட்பட 15 அம்சங்கள் தொடர்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறினார்.

இந்தப் பயிற்சியினூடாக ரியூசன் மற்றும் உயர்தர வகுப்பு மனநிலையில் இருந்து விலகி பல்கலைக்கழக கல்விக்கு ஏற்ற மனநிலை மாணவர்களுக்கு வழங்கப்படும். பகிடி வதையும் முற்றாக ஒழிக்கப்படு மெனவும் அமைச்சர் கூறினார்.
பல்கலைக்கழக மாண வர்களுக்கான ஆளுமை பயிற்சி குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழே பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர் பில் சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். ஆனால், ஒரு மாணவரோ பெற்றோரோ இதனை எதிர்க்கவில்லை.
இந்த மூன்று வாரப்பயிற்சி குதூகலமாக வும். மகிழ்ச்சியாகவும் இருக்கும். போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழகம் வரும் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு உகந்த மனநிலையையும் உடற்தகைமையையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிக ளிலும் பயிற்சி வழங்கப்படும். முதற் கட்டமாக 10 ஆயிரம் மாணவர்களுக்கு 23ம் திகதி 28 முகாம்களில் பயிற்சி வழங்க உள்ளோம். சுகவீனமோ தவிர்க்க முடியாத காரணமோ தவிர சகல மாண வர்களும் இந்த பயிற்சி முகாமுக்கு வரவேண்டும். பல்கலைக்கழக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக விரி வுரையாளர்களே மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர்.
பல்கலைக்கழகங்களில் இருந்து 90 வீதம் பகிடிவதை ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் பகிடி வதையை முழுமையாக ஒழிக்க விசேட திட்டம் முன்னெடுக்கப்படும். பகிடி வதையால் ஈடுபடும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டும் விலக்கப்படுவர். ஆளுமைப் பயிற்சி மூலம் பகிடி வதை வழங்கும் மனநிலை மாறும் என்று நம்புகிறோம்.
இந்தப் பயிற்சி முகாம் குறித்து பெற்றோர் அஞ்சத் தேவையில்லை. அவர்களுக்கு தமது பிள்ளைகளை சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றார். அமைச்சின் செயலாளர் சுனில் நவரத்ன கூறியதாவது,
ஆளுமைப்பயிற்சி தொடர்பில் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறிய போதும் அவர்களிடம் தலைமைத்துவ திறமையோ பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தீர்வு காணும் ஆளுமையோ கிடையாது. எதிர்காலத்திற்கு உகந்த தலைவர்களாக அவர்களை மாற்றுவதே எமது நோக்கம்.
ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கக்கூடிய வசதி இராணுவ முகாம்களில் உள்ளது. அதனாலே இராணுவ பயிற்சி முகாம்களில் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.
பாடக்குறிப்புகளை பார்த்து எழுதிப்பழகிய மாணவர்களின் மனநிலையை பல்கலைக்கழக கல்வி கற்க ஏற்றவாறு மாற்ற வேண்டும். அவர்களுக்கு செயன்முறை அறிவு, தொழில்நுட்ப அறிவு, மனிதத் திறன்கள் என்பன வழங்க வேண்டியுள்ளது. பரந்துபட்ட நோக்கத்துடனே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டத்தில் 5931 பெண்களுக்கும் 4069 ஆண்களுக்கும் பயிற்சி வழங்கப்படுவதோடு, ஜூன் 16ம் திகதி 12 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 200 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
உபவேந்தர்
கொத்தலாவெல பாதுகாப்பு அகடமி உப வேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கூறியதாவது,
தமிழ்மொழி மூல மாணவர்கள் 2 ஆயிரம் பேரும் 4 முகாம்களில் தமிழில் பயிற்சி வழங்கப்படும். முஸ்லிம் மாணவர்கள் தமது மத அனுஷ்டானங்களை செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
உடற்பயிற்சி, சுய ஒழுங்கு, பொறுப்புகளை பற்றிய தெளிவு என்பனவும் வழங்க உள்ளதோடு தலைமைத்துவப் பயிற்சிக்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். பாலியல் துன்புறுத்தல் பற்றி மட்டுமன்றி பெண்களுக்கு ஒப்பனை பயிற்சியும் வழங்க உள்ளோம் என்றார்.
யாழ் முன்னாள் உபவேந்தர் மோகனதாஸ் கூறியதாவது, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாணவர்களுக்கு ஆளுமைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். எதிர்காலத்திற்கு ஏற்ற தலைவர்களை உருவாக்குவதற்கான அடித்தளம் இதனூடாக இடப்படுகிறது.-எம்.எஸ். பாஹிம் தினகரன்

المشاركات الشائعة