Search This Blog

May 12, 2011

பஹ்ரைனில் உலகின் கவனத்தை பெறாத ஆர்பாட்டங்கள்



பஹ்ரைனில் ஆர்பாட்டங்களை பஹ்ரையின் மன்னர் கடுமையாக அடக்கிவருகின்றார் என்று அல் ஜஸீரா தெரிவிக்கின்றது மற்ற அரபு நாடுகளில் நடை பெரும் ஆர்பாட்டங்கள் கவனத்தை பெற்றுள்ளது போன்று பஹ்ரையின் ஆர்பாட்டங்கள் உலகின் கவனத்தை பெறவில்லை காரணம் அங்கு உள்நாட்டில் போதுமான வெளிநாட்டு ஊடகங்கள் இல்லை செயல்பட அனுமதி இல்லை என்பது ஒரு காரணம்.
அங்கு ஆர்பாட்டங்கள் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து இன்றுவரை பலர் கொல்லப்பட்டுள்ளனர் பஹ்ரைன் படைகள் பெண்கள் பாடசாலைகள் மீதும் தனது அடாவடியை செய்துள்ளது அங்கு ஆர்பாட்டங்களில் காயப்பட்டவர்களை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் , தாதிமார் , மருத்துவ அதிகாரிகள் ,ஊழியர்கள் என்று நூற்றுக்கும் அதிகாமானவர்கள். அரச குற்றச் சாட்டுகளை எதிர்கொள்வதாக அல் ஜஸீரா தெரிவிக்கின்றது.
பஹ்ரைன் மன்னரை பாதுகாக்க சவூதி மன்னர் ஆயிரம் பேரை கொண்ட இராணுவத்தை கடந்த மார்ச் மாதம் அனுப்பி னார் அதேபோன்று துபாயும் 500 பேரை கொண்ட படையை அனுப்பியது என்பது குறிபிடத்தக்கது பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம் இந்த சிறிய தீவு கூட்டம் 33 தீவுகளை கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

المشاركات الشائعة