OurUmmah: பலஸ்தீன போராளி அமைப்புகள் மத்தியில் நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்று கடந்தவாரம் கைச்சாத்திடப்பட்டது இதன் மூலம் ஹமாஸ் பலஸ்தீன அதிகார சபையில் இணைகின்றது இந்த ஒப்பந்தம் இஸ்ரேலை மிகவும் சினம் கொள்ளவைத்துள்ளது இதன் விளைவாக பலஸ்தீனுக்கான அமெரிக்க நிதியுதவியை துண்டிக்குமாறு அமெரிக்க செனட்டர்கள் கோரியுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹமாஸ், அப்பாசின் பி.எல்.ஒ மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் , பலஸ்தீன் போராட்ட முன்னனி ஆகிய அமைப்புகள் தமக்குள்ள ஒன்றுமை பட்டுள்ளன குறிப்பாக ஹமாஸும் பதாவும் ஒன்றுமை பட்டுள்ளமை இஸ்ரேலை மிக கடுமையாக சினம் கொள்ள செய்துள்ளதுடன் அச்சம் அடையவும் செய்துள்ளது இதன் காரணமாக இஸ்ரேல் அந்த ஒப்பந்தை உடைக்கும் வழிமுறைகள் பற்றி தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றது.
இதன் ஒரு கட்டமாக அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் செனட்டர்கள் 29 பேர் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு அப்பாசின் பலஸ்தீன நிர்வாகம் ஹமாஸுடன் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளதால் அதாவது அமெரிக்காவில் பயங்கரவாத பட்டியலில் இடம்பெறும் ஹமாஸ் அமைப்புடன் பி.எல்.ஒ உடன்படிக்கையில் இணைந்தமையால் அமெரிக்கா பலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கி வரும் நிதியுதவிகளை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர் அமெரிக்கா பலஸ்தீன நிர்வாகத்துக்கு 2011 ஆண்டுக்கு 550 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது என்பது குறிபிடத்தக்கது இந்த அமெரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் கோரிக்கை இஸ்ரேலின் அழுத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றது.
பலஸ்தீன அமைப்புகள் மத்தியில் நல்லிணக்க ஒப்பந்தம் முக்கிய செயல்திட்டங்களை கொண்டுள்ளது அதில் ,ஒரு ஆண்டுக்குள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை நடத்துவது’ மற்றும் மூன்று குழுக்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் முக்கியமாக வேலைதிட்டங்களாக தேர்தல் திட்டமிடல், பி.எல்.ஒ சீர்திருத்தம், காஸாவிலும், மேற்குகரையிலும் பாதுகாப்பு விவகாரங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியன ஒப்படைக்கப்பட்டுள்ள என்பது குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment