Search This Blog

May 7, 2011

சிரியா ஆர்பாட்டங்களில் இன்று குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்


 கடந்த ஏழு வாரங்களாக சிரிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.  வெள்ளிகிழமை ஜும்மாவின் பின்னர் சிரியாவின் பல நகரங்களில் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது இடம்பெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் மீது இராணுவம் சுட்டதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது
கடந்த ஏழு வாரங்களாக சிரிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 500 பேர் கொல்லபட்டுள்ளனர் 2500 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் பஷார் அல் அஸத் அரசு மக்கள் மீது தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது தாம் நாட்டின் பயங்கரவாதிகளுக்கும் , குற்றவாளிகளுக்கும் எதிராக நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அரசியல் திருத்தங்களை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர் அரசு சொந்த மக்களுக்கெதிராக வன்முறையை பயன்படுத்துவதாக அரசுக்கு எதிரான தொடரான குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது இன்றைய ஆர்ப்பாட்டங்களில் பல எதிர் கட்சி பிரமுகர்கள் கைதாகியுள்ளனர்.
கடந்த வாரம் சிரியாவின் தென்பகுதி நகரான தாராவில் ஐய்மான்-அல்-அஸ்வாத் என்ற மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்தியது அதன்போது படையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 26-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment

المشاركات الشائعة