Search This Blog

May 7, 2011

அல்காயிதாவின் பழிவாங்கும் அறிவிப்பு பற்றி !


 அல்காயிதா அமைப்பு அதன் தலைவர் அஷ் ஷெய்க் உஸாமா பின் லாதின் படுகொலை செய்யப்பட்டதாக அறிவித்துள்ளதாக அல் ஜஸீரா தெரிவித்துள்ளது  அந்த அமைப்பு தமது தலைவரின் படுகொலைக்கு பழிவாங்க போவதாக அறிவித்துள்ளது இது தொடர்பாக கருத்துரைத்துள்ள இஸ்லாமிய புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள் அந்த அறிவிப்பின் நம்பக தன்மை பற்றி தெரியாத போதும் அந்த அறிவிப்பு மிகவும் பெரிய ஆபத்து நிகழபோவதை தெரிவிப்பதாகவும்

இந்த அறிவிப்புக்கு பின்னால் உண்மையில் அல்காயிதா அமைப்பு இருக்கின்றதா ? அல்லது மேற்கு நாடுகளின் உளவு அமைப்பு இருந்து இவ்வாறான அறிவிப்புகளை வெளியிடுகின்றதா ? அன்பதை அறிய முடியாது உள்ளது என்றும் தாக்குதல்கள் இடம்பெற்றால் அது நிச்சயம் இஸ்லாத்தின் அமைதியான எழுச்சியை மிகவும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தற்போது அரபு முஸ்லிம் நாடுகளில் இஸ்லாம் அமைதியான முறையில் ஆரோக்கியமாக எழுச்சி பெற்றுவரும் இந்த சந்தர்பத்தை குழப்பும் உள்நோக்கம் கொண்ட இஸ்ரேலிய மற்றும் மேற்கு உளவு அமைப்புகள் இவ்வாறான சந்தர்பத்தை எதிர்பர்த்திருப்பதாகவும் இணையத்தில் இஸ்லாமிய பெயர்களில் இயங்கும் அநேகமான போரம்கள், இணையத்தளங்கள் என்பன மேற்கு மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளால் இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளர்.
முஸ்லிம் உம்மா மிகவும் அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் கோரியுள்ளனர் இது தொடர்பாக அரசியல் ஆய்வாளர் M.ஷாமில் முஹம்மட்டிடம் நாம் தொடர்பு கொண்டு வினவியபோது அல்காயிதா அமைப்பு மீது மேற்கு நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை மேற்கு நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக் கொண்டு பார்க்கும் போது அல்காயிதா அமைப்பு இதுவரையும் கடினமான இலக்குகளை – Hard Target- தாக்கி அனுகூலமான தாக்கங்களை ஏற்படுத்தியதை விடவும் இலகுவான இலக்குகளை - Soft Target-தாக்கி பாரிய தாகங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக கடினமான இராணுவ இலக்குகள் என்பதை விடவும் பொதுமக்கள் நடமாடும் நகர பகுதிகள் , பொருளாதார மையங்கள் போன்ற இலகுவான இலக்குகளை தாக்குவதில் பெரிய தாகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்கங்களை பல கோணங்களில் அளவீடுகள் செய்யமுடியும் இதில் பொது மக்கள் இலக்கு வைக்கப்படுவது பாரிய பிரதிகூலங்களை பெற்றுள்ளது ஆகவே தற்போது இந்த பழிவாங்கும் அறிவிப்பை யார் விடுத்துள்ளார்கள் என்பது வினாவுக்குரியது எப்படி இருப்பினும் பழிவாங்கும் தாக்குதல்கள் மீண்டும் இலகுவான இலக்குகளை தெரிவு செய்யுமாக இருந்தால் முழு முஸ்லிம் உம்மாவும் பெரிய பின்னடைவுகளை சந்திக்கலாம் என்றும் தற்போது அல்காயிதா அமைப்பு இந்த இலக்குகளுடன் செயல்படுவது மேற்கு நாடுகளுக்கும் இஸ்ரேளுக்கும் உடனடி தேவையாகவுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் சர்வதேச முஸ்லிம் சமூகம் பல சிந்தனை பிரிவுகளையும், இயக்கங்களையும் கொண்டுள்ளது இந்த இயங்கங்கள் கேள்வி’ இன்றி தோன்றியுள்ளதாக சொல்லமுடியாது முஸ்லிம் உம்மாவில் அதற்கான ‘கேள்வி’ காணப்படும்போது அவை உருப்பெருகின்றது இவை ஒரு சமூகத்தின் இயல்பான உற்பத்தி ஆனால் அவைகள்  தேவையான போதெல்லாம் தம்மை மாற்றங்களுக்கு உட்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்
thanks: OUR UMMAH.

No comments:

Post a Comment

المشاركات الشائعة