Search This Blog

May 9, 2011

அமெரிக்க பயங்கரவாதத்திற்கு துணை போகும் பாகிஸ்தான் ஆளும் தரப்பு: பாகிஸ்தான் மக்கள்


 பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமி உட்பட பல எதிர் கட்சிகள்  பாகிஸ்தானின் இறைமையை அமெரிக்கா தொடர்ந்தும் மீறி வருவதை கண்டித்தும் அந்த அத்துமீறல்களை பாகிஸ்தான் ஆளும் தரப்பு மறைமுகமாக ஆமோதித்து அனுமதி வழங்கிவருவதை கண்டித்தும் நேற்று பல நகரங்களில் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் ஆர்பாட்டங்கள் மற்றும் கண்டன கூட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் வியாழகிழமை பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் பாகிஸ்தானை மக்களை அமெரிக்காவின் அடாவடித்தனத்தை எதிர்த்து வீதிக்கு இயங்குமாறு அழைப்பு விடுத்தார் அதை தொடர்ந்து நேற்று வெள்ளிகிழமை மக்கள் ஆர்பாட்டங்களில் இறங்கியுள்ளனர் அதேவேளை பாகிஸ்தான் ஹிஸ்புத் தஹ்ரீர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அமெரிக்க இராணுவத்தை பாகிஸ்தானுக்குள் அனுமதிப்பதில் பாகிஸ்தான் அரசுக்கும் , இராணுவத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் முசாரப் அரசாங்கத்தைவிடவும் மோசமான அரசும் இராணுவ தளபதியும் தற்போது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான மக்கள் சக்தி பெருகிவருவதை சமாளிக்க பாகிஸ்தான் ஆளும் தரப்பு தொடரான பொய்களை மக்களுக்கு கூறிவருவதாக பாகிஸ்தான் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை அமெரிக்க  ஆளில்லா உளவு மற்றும் தாக்குதல் விமானம் பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் பிரதேசத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தி 15 பேரை படுகொலை செய்துள்ளது இந்த தாக்குதலும் அபோதாபாத் பகுதியில் அஷ்சஹீத் அஷ்ஷெய்க் உஸாமா பின் லாதின் வீட்டுக்கு அருகே  வீடு ஒன்றில் தங்கியிருந்து அமெரிக்க உளவுத்துறையான CIA தகவல்களை கடந்த ஒருமாதகாலமாக சேகரித்து அனுப்பியுள்ள செய்தியும் . இந்த அத்துமீறல் தாக்குதலும் மேலும் பாகிஸ்தான் மக்களை கோபமடைய செய்துள்ளது என்று பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றது .
அமெரிக்கா அத்துமீறி உஸாமா மீதான தாக்குதல் நடாத்தியது தொடர்பாக கருத்துரைத்துள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி இதுபோன்ற தாக்குதல் மேலும் நடப்பதை பாகிஸ்தான் அனுமதிக்காது எனவும் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பின் பின்னர் அமெரிக்கா மற்றுமொரு தாக்குதலை நடத்தி 15 பேரை படுகொலை செய்துள்ளது பாகிஸ்தான் இராணுவ தளபதியின் எச்சரிக்கையை அமெரிக்கா கணக்கில் எடுத்துகொள்ளவில்லை என்பதுடன் அஷ்சஹீத் உஸாமா மீதான தாக்குதல் பற்றி பாகிஸ்தானுக்கு அறிவிக்காமல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அமெரிக்கா கூறியமையும். அதே நேரத்தில் பாகிஸ்தானில் இன்னும் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிந்தால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்றுஅறிவித்தமை குறிபிடத்தக்கது.  பாகிஸ்தானும் அமெரிக்காவும் இணைந்து பாகிஸ்தான் மக்களை ஏமாற்றி வருவதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
அதேவேளை அமெரிக்கா யெமனிலும் ஆளில்லா உளவு மற்றும் தாக்குதல் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அல்காயிதா உறுப்பினர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டும் அன்வர் அல்அவ்லாகியை இலக்கு வைத்து இந்த அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது ஆனால் இதில் அன்வர் அல்அவ்லாகியை சிக்கவில்லை என்றாலும் அந்த தாக்குதல் மூலம் பலரை அமெரிக்கா படுகொலை செய்துள்ளது

No comments:

Post a Comment

المشاركات الشائعة