யெமென் நாட்டில் ஆர்பாட்டங்கள் இன்று இடம்பெற்றுள்ளது அதில் இருவர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் எகிப்து மக்கள் ஆர்பாட்டங்கள் தொடங்கிய போது யெமெனிலும் ஆர்பாட்டங்கள் வெடித்தது எனினும் ஆரம்பத்தில் அனைத்து மக்கள் தரப்பினரும் கலந்து கொள்ளும் நிலையில் இருக்கவில்லை ஆனால் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆர்பாட்டங்களில் களம் இறங்காத பல தரப்புகள் பங்கு பற்றியுள்ளது.
யெமென் அமெரிக்காவின் செறிவான புலனாய்வாளர்களின் கோட்டையாக விளங்கிவருகின்றது அமெரிக்கா பல தடவைகள் நடாத்திய விமான தாக்குதலை யெமென் அரசு தாம் நடத்துவதாக கூறிவந்துள்ளது இந்த தாக்குதல்களில் பல பொதுமக்கள கொல்லபட்டனர் கடந்த 6 ஆம் திகதியும் அமெரிக்க உளவு விமானம் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர் விரிவாக இந்த தாக்குதலின் பின்னர் ஆர்பாட்டங்கள் அதிகரித்துள்ளது என்று சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர் யெமென் அல் காயிதா அமைப்பின் முக்கிய தளமாக விளங்குவதாக அமெரிக்கா கூறிவருகின்றது
இன்று ஆர்பாட்டங்கள் பல நகரங்களில் இடம்பெற்றுள்ளது நாட்டின் அனைத்து மக்கள் தரப்பினரும் கலந்து கொள்ளும் நிலை இன்னும் ஏற்படவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்
அதேவேளை நாட்டின் முக்கிய இராணுவ தளபதிகள் சிலர் தாம் மக்களின் பக்கம் தமது ஆதரவை வெளிப்படுத்திவருகின்றனர் இந்த ஆர்பாட்டங்களை தொடர்ந்து அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் கடந்த மாதம் தனது அமைச்சரவையை கலைத்தார் எனினும் நாட்டின் முக்கிய கோத்திர ,சமூக தலைவர்கள் மற்றும் இமாம்கள் ஜனாதிபதி மக்களின் விருப்பத்துக்கு கட்டுப்பட்டு அமைதியான முறையில் பதவி விலகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர் இது வரை நடைபெற்று வரும் ஆர்பாட்டங்களில் நூறுக்கும் அதிகமானவர்கள் கொல்லபட்டுள்ளனர்
யெமென் நாட்டின் ஜனாதிபதி அலி அப்துல் ஸலாஹ் மற்ற அரபு நாட்டு தலைவர்களை போன்று மேற்குலகின் விசுவாசியாக பார்க்கப்படுகின்றார் இவர் நாட்டை 32 ஆண்டுகளாக கையில் வைத்துள்ளார் நாட்டில் வறுமை, ஊழல் என்பன அதிகரித்துள்ளது அமெரிக்கா பல இராணுவ நடவடிக்கைகளை அங்கு மேற்கொண்டு வருகின்றது.
No comments:
Post a Comment