இனபிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கம் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது என்று அறிய முடிகின்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து தீர்ப்பு தொடர்பாக முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென விடுத்த வேண்டுகோளையடுத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்துமாறு ஜனாதிபதி அரச பேச்சுவார்த்தை குழுவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்
முப்பது வருட கால யுத்தத்தினால் வடக்கு , கிழக்கு முஸ்லிம்கள் பெரும் துயரங்களையும் இழப்புகளையும் எதிர் நோக்கினர் அரசாங்கம் தமிழ் கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது முஸ்லிம்களின் கருத்தையும் அறிந்தே தீர்வு ஒன்று காணப்பட்ட வேண்றுமென்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதிக்கு எடுத்து கூறியுள்ளார் . தமிழ் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசாங்க அமைச்சர்கள் கொண்ட பேச்சுவார்த்தை குழுவினர் விரைவில் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிப்பர் என்று அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பனவற்றுடன் அரசாங்க பேச்சுவார்த்தை குழு பேச்சு நடத்தவுள்ளனர்
அதேவேளை அரசுக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எதிர் வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பேச்சு தொடர்பாக கருத்துரைத்துள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காக அரசு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது பேச்சுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசு கூட்டறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடப்படும் .பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேச்சுகள் தொடர்பான விடயங்களை இரகசியமாக வைக்கவேண்டிய தேவை உள்ளது. இதனால் நாம் பேச்சுகள் தொடர்பான விவரங்களை வெளியிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment