முஸ்லிம் மாணவ மாணவியர் தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் முகமாக உயர்கல்வி அமைச்சர் சாதகமாக பதில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது. பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இன்று ஆரம்பித்துள்ள நிலையில் உயர்கல்வி அமைச்சர் எஸ். பி .திசாநாயகாவின் கவனத்திற்கு முஸ்லிம் மாணவ மாணவியர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் அனைத்து பல்கலை கழகங்களின் முஸ்லிம் மஸ்லிஸ் ஆகியன கொண்டு சென்றுள்ளது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை எழுத்து மூல கோரிக்கை ஒன்றையும் நேற்று முன்வைத்துள்ளது.
அந்த கோரிக்கைகளில் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு நேரடியாக சவாலாக உள்ள விடயங்கள் தொடர்பில் அமைச்சர் எஸ். பி .திசாநாயகா சாதகமாக பதில் வழங்கியுள்ளார் என்று அறிய முடிகின்றது.
ஆண் பெண் கலந்த உடல் பயிற்சி , முஸ்லிம் பெண்களின் உடை , வதிவிடம் , ஐந்து வேலை தொழுகை , ஜும்மாஹ் தொழுகை ஹலால் உணவு என்பன முஸ்லிம் மாணவ மாணவியரை பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இருக்க மாணவர்களுக்காக தலைமைத்துவ பயிற்சி நெறி இராணுவ முகாம்களின் நடாத்தப்படுவது பொதுவான அனைத்து மாணவ மாணவர்களுக்குமான பிரச்சினையாக சுட்டிகாட்ட பட்டுவருகின்றது என்பது குறிபிடத்தக்கது .
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மேஜர் ஜெனரல் எம்.பி. பீரிஸ் முஸ்லிம் மாணவர்கள் ஐந்து நேரமும் தொழுவதற்கு அனுமதிக்கப்படும் எனவும் ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவித்தமை குறிபிடத்தக்கது.
அதேவேளை , உடற் பயிற்சியின் போது முஸ்லிம் பெண் மாணவிகள் தமது கலாச்சாரத்தை பேணும் வகையிலான உடைகளை அணிய முடியும் என்றும் முஸ்லிம் மாணவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆ தொழுகையில் ஈடு பட எவ்வித இடையூறுகளும் இருக்க மாட்டாது என்றும் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்காக பிரத்தியேக வசதிகள் செய்து கொடுக்கப்படுமென்றும் உயர் கல்வி அமைச்சர் கூறி இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாதர் அணியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்ஸா தெரிவித்துள்ளமையும் குறிபிடத்தக்கது
இவர் A.H.M. பௌசி அவர்களிடம் இது தொடர்பாக எடுத்துரைத்த போது அமைச்சர் பௌசி மேற்படி கோரிக்கையை முன்வைத்து பின்வரும் விடயங்களில் உயர் கல்வி அமைச்சரிடம் இருந்து சாதகமான தீர்வு பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை எழுத்து மூல கோரிக்கை:
No comments:
Post a Comment